உலகக் கிண்ண தகுதி காண் இரண்டாம் சுற்றில் இலங்கை H குழுவில்

1110

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள பிஃபா உலகக் கிண்ணம் மற்றும் 2023ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள AFC சம்பியன்ஷிப் தொடர்களுக்கான தகுதிகாண் சுற்றின் இரண்டாம் கட்டமாக 40 அணிகள் இடம்பெறவுள்ள மோதலில் H குழுவில் விளையாடுவதற்கான வாய்ப்பை இலங்கை கால்பந்து அணி பெற்றுள்ளது.

பிஃபா உலகக் கிண்ண அடுத்த தகுதிகாண் சுற்றுக்கு இலங்கை முன்னேற்றம்

2022 உலகக் கிண்ண தகுதிகாண் போட்டியில் …….

குறித்த இரண்டு தொடர்களுக்குமான பூர்வாங்க தகுதிகாண் போட்டிகளில் இலங்கை அணி மக்காவு அணியை வெற்றிகொண்டதன் மூலம் அடுத்த சுற்றில் ஆடுவதற்கு தகுதி பெற்றது.     

இந்த சுற்றில் தலா ஐந்து அணிகள் கொண்ட எட்டுக் குழுக்கள் மோதவுள்ளன. இதற்கான அணிகளை பிரிக்கும் குலுக்கல் முறை இன்று (17 ஆம் திகதி) மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள ஆசிய கால்பந்து கூட்டமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது.    

இதில்இலங்கை அணி H குழுவில் இடம்பிடித்துள்ளதுடன், இலங்கையுடன் துர்க்மெனிஸ்தான், லெபனான், தென் கொரியா மற்றும் வட கொரியா ஆகிய அணிகள் மேதவுள்ளன.

இலங்கை அணிக்கான போட்டிகள் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அடுத்த ஆண்டு ஜூன் 4ஆம் திகதிக்கு வரையிலான காலப்பகுதிக்குள் இடம்பெறவுள்ளன.

Road to Barcelona நிகழ்வுக்கு இம்முறையும் இலங்கையில் இருந்து எட்டுப் பேருக்கு வாய்ப்பு

உலகின் பிரபல கால்பந்து கழகமான பார்சிலோனாவின் 2019ஆம் ஆண்டுக்கான…

இந்த தகுதிகாண் சுற்றின் எட்டுக் குழுக்களிலும் வெற்றி பெறும் அணிகள் மற்றும் இரண்டாவது இடத்தை பெறும் சிறந்த நான்கு அணிகள் மூன்றாவது சுற்று போட்டிகளுக்கு தகுதி பெறுவதோடு 2023 ஆசிய கிண்ண போட்டிகளுக்கு தமது இடத்தை உறுதி செய்து கொள்ளும்

எஞ்சிய அணிகளுக்கு ஆசிய கிண்ணத்திற்கு முன்னேறே தொடர்ந்து வாய்ப்பு இருப்பதோடு, அதற்கு அந்த அணிகள் பிளே ஓப் சுற்று ஒன்றிலிருந்து முன்னேற்றம் காண வேண்டும். இதன்போது சீனாவில் நடைபெறும் ஆசிய கிண்ணத்தில் மேலும் 24 அணிகளை தேர்வு செய்வதற்காக இந்த அணிகள் வேறாக தகுதிகாண் போட்டிகளில் ஆடும் என்பது குறிப்பிடத்தக்கது

இன்றைய குலுக்களின் பிரகாரம் நடப்பு ஆசிய சம்பியனான கட்டார் E குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குழுவில் இந்தியா, ஓமான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளும் இடம்பெற்றுள்ளன.  

போட்டியை நடத்தும் நாடு என்பதால் கட்டார் உலகக் கிண்ணத்திற்கு நேரடி தகுதி பெறுகின்றபோதும், ஆசிய கிண்ணத்திற்கு தகுதி பெறுவதற்கு இந்த தகுதிகாண் போட்டிகள் அந்த அணிக்கு முக்கியமானதாகும்.    

>>புகைப்படங்களைப் பார்வையிட<<   

ரஷ்யாவில் கடந்த ஆண்டு நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ண போட்டியில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறிய ஜப்பான் F குழுவில் கிர்கிஸ் குடியரசு, தஜிகிஸ்தான், மியன்மார் மற்றும் மொங்கோலிய அணிகளுடன் போட்டியிடவுள்ளது.   

அதேபோன்று கடந்த உலகக் கிண்ண போட்டியில் எகிப்தை 2-1 என தோற்கடித்து வெற்றியுடன் முடித்துக் கொண்ட சவூதி அரேபியா, உஸ்பகிஸ்தான், பலஸ்தீன், யெமன் மற்றும் சிங்கப்பூர் அணிகளுடன் D குழுவில் மோதுகிறது.  

ஆசியாவில் இருந்து ஐந்தாவது அணியாக கடந்த உலகக் கிண்ணத்திற்கு முன்னேறிய அவுஸ்திரேலியா இம்முறை தகுதிகாண் போட்டியில் B குழுவில் இடம்பெற்றுள்ளது. இந்தக் குழுவில் சீன தாய்ப்பே, ஜோர்தான், குவைட் மற்றும் நேபாள அணிகளும் இடம்பெற்றுள்ளன.   

எதிர்வரும் ஆசிய கிண்ணத்தை நடத்தும் சீனா A குழுவில் சிரியா, பிலிப்பைன்ஸ், மாலைதீவுகள் மற்றும் குவாம் அணிகளுடன் பலப்பரீட்சை நடத்தும்.   

G குழு தென்கிழக்கு ஆசிய நாடுகளின் போட்டிக் குழுவாக மாறியுள்ளது. ஆசியான் பிராந்தியத்தின் வியட்நாம், தாய்லாந்து, மலேசியா மற்றும் இந்தோனேசியா ஆகிய அனைத்து அணிகளும் இந்த ஒரே குழுவில் இடம்பிடித்துள்ளன. இதில் கடந்த ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஆடிய ஐக்கிய அரபு இராச்சியமும் இடம்பெற்றுள்ளது.

பார்சிலோனா கழகத்துடன் இணையும் கிரீஸ்மன்

உலகக் கிண்ண வெற்றி வீரரான பிரான்ஸின் அன்டோயின் கிரீஸ்மனை…

ரஷ்யாவில் 2018 உலகக் கிண்ணத்தில் நூழிலையில் நொக் அவுட் சுற்றை தவறவிட்ட ஈரான் தொடர்ச்சியாக மூன்றாவது பீஃபா உலகக் கிண்ணத்தில் பங்கேற்க இந்த தகுதிகாண் சுற்றில் விளையாடுகிறது. இதில் ஈரான் அணி ஈராக், பஹ்ரைன், ஹொங்கொங் மற்றும் கம்போடிய அணிகளுடன் C குழுவில் இடம்பெற்றுள்ளது.   

அடுத்த உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு நான்கு ஆசிய அணிகள் தகுதி பெறுவதோடு ஐந்தாவது அணி மண்டலங்களுக்கு இடையிலான பிளே ஓப் சுற்றில் பங்கேற்பதன் மூலம் தகுதி பெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.   

அணிகளின் குழுநிலை

A குழு சீனா, சிரியா, பிலிப்பைன்ஸ், மாலைதீவுகள், குவாம் 

B குழு அவுஸ்திரேலியா, ஜோர்தான், சீன தைபே, குவைட், நேபாளம்   

C குழு ஈரான், ஈராக், பஹ்ரைன், ஹொங்கொங், கம்போடியா

D குழு சவூதி ஆரேபியா, உஸ்பகிஸ்தான், பலஸ்தீன், யெமன், சிங்கப்பூர்

E குழு பங்களாதேஷ், ஓமான், இந்தியா, ஆப்கானிஸ்தான், கட்டார்

F குழு ஜப்பான், கிர்கிஸ்தான் குடியரசு, தஜிகிஸ்தான், மியன்மார், மொங்கோலியா,

G குழு ஐக்கிய அரபு இராச்சியம், வியட்நாம், தாய்லாந்து, மலேசியா, இந்தோனேசியா  

H குழு கொரிய குடியரசு, லெபனான், கொரிய னுPசு, துர்க்மனிஸ்தான், இலங்கை   

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<