நிக்லஸ் புல்குருக் கடைசி நேரத்தில் போட்ட கோலின் உதவியோடு ஸ்பெயினுக்கு எதிரான வாழ்வா சாவா என்ற போட்டியை சமநிலை செய்த ஜெர்மனி உலகக் கிண்ண நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.
உலகக் கிண்ண கால்பந்து தொடரின் எட்டாவது நாளுக்கான போட்டிகளின் சுருக்கத்தை இங்கு பார்ப்போம்.
தீர்க்கமான போட்டியில் ஸ்பெயினை சமன் செய்தது ஜெர்மனி
கட்டாரின் அல் பைத் அரங்கில் இலங்கை நேரப்படி திங்கள் (28) அதிகாலை E குழுவுக்காக நடைபெற்ற போட்டியில் ஐரோப்பாவின் இரு பெரும் பலமான நாடுகளும் கடுமையாக மோதிக்கொண்டன.
ஸ்பெயினின் இளம் வீரர்கள் முதல் பாதியில் வேகமான ஆடி எதிரணி கோல் பகுதியை ஆக்கிரமித்தனர். டானி ஒல்மா ஏழாவது நிமிடத்தில் மின்னல் வேகத்தில் அடித்த பந்தை ஜெர்மனி கோல்காப்பாளர் மனுவேல் நியுர் தடுத்தார்.
- பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை
- நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிய பிரான்ஸ்; தீர்க்கமான போட்டியில் வெற்றியீட்டிய ஆர்ஜன்டீனா
- பிரேசிலின் அடுத்த இரு போட்டிகளிலும் நெய்மார் இல்லை
பிரீ கிக் ஒன்றை தலையால் முட்டி அன்டோனியோ ருடிகர் கோலாக மாற்றினாலும் அது ஓப் சைடாக இருந்தது.
இந்நிலையில் இரண்டாவது பாதியின் 60ஆவது நிமிடத்தில் ஜோடி அல்பா தாழ்வாக பரிமாற்றிய பந்தை மாற்று வீரர் அல்வாரோ மொராட்டா ஜெர்மனி கோல் கம்பத்துக்கு அருகில் இருந்து வலையை நோக்கி தட்டி கோல் பெற்றார்.
இதனால் பதில் கோல் திருப்ப அவசரம் காட்டிய ஜெர்மனியின் தலைமை பயிற்சியாளர் மூன்று வீரர்களை மாற்றினார். இந்நிலையில் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் முசியலாவிடம் இருந்து பந்தைப் பெற்ற நிக்லஸ் புல்குருக் மைதானம் வந்து 13 ஆவது நிமிடத்தில் ஜெர்மனிக்காக கோல் பெற்றார்.
இந்தப் போட்டி சமநிலை பெற்றதை அடுத்து ஸ்பெயின் தனது குழுவில் முதலிடத்திற்கு முன்னேறியதோடு முதல் போட்டியில் ஜப்பானிடம் தோற்ற நிலையில் ஜெர்மனி ஒரு புள்ளியுடன் கடைசி இடத்தில் உள்ளது.
இந்நிலையில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற வேண்டுமாயின் ஜெர்மனி வரும் வியாழக்கிமை (01) கொஸ்டாரிக்காவை வீழ்த்த வேண்டும் என்பதோடு ஸ்பெயிடம் ஜப்பான் தோல்வி அடைய வேண்டும். இதில் ஜப்பான் சமநிலை செய்தால் கோல் வித்தியாசத்திலேயே அடுத்த சுற்றுக்கு முன்னேறும் அணி தீர்மானிக்கப்படும்.
கனடாவை வெளியேற்றியது குரோசியா
குரோசியாவிடம் 1-4 என்ற கோல் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த கனடா உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து ஆரம்பச் சுற்றுடனேயே வெளியேறியது.
கலீபா சர்வதேச அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் கனடா அணி 2ஆவது நிமிடத்திலேயே கோல் புகுத்தியபோதும் எஞ்சிய நேரத்தில் குரோசியா முழு ஆதிக்கம் செலுத்தியது.
முதல் பாதி முடிவதற்குள் இரண்டு கோல்களைப் பெற்று முன்னிலை பெற்ற குரோசியா இரண்டாவது பாதியில் மேலும் இரு கோல்களை புகுத்தியது. இதன்போது அன்ட்ரேஜ் க்ரமரிக் 36 மற்றும் 70ஆவது நிமிடங்களில் இரட்டை கோல்கள் புகுத்தியதோடு மார்கோ லிவாஜா மற்றும் லவ்ரோ மஜர் ஆகியோர் தலா ஒரு கோல் பெற்றனர்.
2018 உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டி வரை முன்னேறிய குரோசியா F குழுவில் நான்கு புள்ளிகளுடன் முதலிடத்தில் இருப்பதோடு அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதற்கு வரும் வியாழக்கிழமை (01) நடைபெறும் பெல்ஜியத்திற்கு எதிரான போட்டியை சமன் செய்தால் போதுமானது.
மறுபுறம் முதல் இரு போட்டிகளிலும் தோல்வியுற்ற கனடா நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை இழந்தது.
2026ஆம் ஆண்டு அடுத்த உலகக் கிண்ண போட்டியை அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுடன் இணைந்து கனடா நடத்தவுள்ள நிலையில் இம்முறை உலகக் கிண்ணத்தை கௌரவத்துடன் முடித்துக் கொள்ள கடைசி குழுநிலை போட்டியில் வியாழக்கிழமை மொரோக்கோவை எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜேர்மனியை வீழ்த்திய ஜப்பான் கொஸ்டாரிகாவிடம் வீழ்ந்தது
ஜப்பானை 1-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய கொஸ்டாரிகா உலகக் கிண்ணப் போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை தக்கவைத்துக்கொண்டது.
அஹமது பின் அலி அரங்கில் E குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடந்த போட்டியில் பெரும்பாலான நேரம் இரு அணிகளும் கோல் பெற போராடிய நிலையில் முழு நேரம் முடிவதற்கு ஒன்பது நிமிடங்கள் இருக்கும்போது கெய்ஷர் புல்லர் இழுபறியை முடிவுக்குக் கொண்டுவந்தார்.
பெனால்டி பெட்டிக்கு வெளியில் இருந்து குறுக்காக உதைத்து கொஸ்டாரிக்காவுக்கு கோல் பெற்ற அவர் கொஸ்டாரிகா அணியின் வெற்றியை உறுதி செய்தார்.
ஸ்பெயினிடம் முதல் போட்டியில் 0-7 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்ற கொஸ்டரிகா 3 புள்ளிகளை பெற்று நொக் அவுட் சுற்று எதிர்பார்ப்பை தக்கவைத்துக் கொண்டது.
மறுபுறம் முதல் போட்டியில் ஜெர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த ஜப்பானுக்கு அந்த உத்வேகத்தை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை. ஜப்பான் அணி நொக் அவுட் சுற்றுக்கு முன்னேற தனது கடைசி குழுநிலை போட்டியில் வலுவான ஸ்பெயினை எதிர்கொள்ள வேண்டி ஏற்பட்டுள்ளது.
பெல்ஜியத்தை வீழ்த்தி மொரோக்கோ வரலாற்று வெற்றி
உலகின் இரண்டாம் நிலை அணியான பெல்ஜியத்திற்கு எதிராக 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற மொரோக்கோ அணி உலகக் கிண்ணத்தில் 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறுவதற்கான வாய்ப்பை அதிகரித்துக்கொண்டது.
அல் துமாமா அரங்கில் F குழுவுக்காக ஞாயிற்றுக்கிழமை (27) நடைபெற்ற போட்டியில் முதல் பாதி முடிவதற்கு சற்று முன்னர் ஹகீமி, சியச்சின் பிரீக் கிக் உதவியோடு பந்து வலைக்குள் செலுத்தப்பட்ட நிலையில் அந்த கோல் ஓப் சைட் என மறுக்கப்பட்டது.
இதனால் மொரோக்கோ ஏமாற்றம் அடைந்தபோதும் 79 ஆவது நிமிடத்தில் அப்தல்ஹமீத் சபிரி அதனை ஒத்த பாணியில் பிரீ கிக் உதவியோடு கோல் பெற்று மொரோக்கோவை முன்னிலை பெறச் செய்தார்.
இந்நிலையில் பதில் கோல் திருப்ப பெல்ஜிய அணி போராடிக்கொண்டிருந்த வேளையில் போட்டியின் மேலதிக நேரத்தில் வைத்து சகரியா அபூகலால் அபார கோல் ஒன்றை புகுத்தி பெல்ஜியத்தின் கடைசி முயற்சியையும் சிதறடித்தார்.
இந்த வெற்றியுடன் F குழுவில் மொரோக்கோ நான்கு புள்ளிகளுடன் முதலித்திற்கு முன்னேறியதோடு பெல்ஜியம் 3 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
மொரோக்கோ உலகக் கிண்ண போட்டி ஒன்றில் வெற்றியீட்டுவது இது மூன்றாவது முறை என்பதோடு அந்த அணி கனடாவுக்கு எதிரான கடைசி குழுநிலைப் போட்டியில் தோல்வியை தவிர்த்தால் நொக் அவுட் சுற்றுக்கு முன்னேறிவிடும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Rahmanullah Gurbaz | c Maheesh Theekshana b Dhananjaya de Silva | 68 | 73 | 4 | 4 | 93.15 |
Ibrahim Zadran | b Lahiru Kumara | 10 | 18 | 2 | 0 | 55.56 |
Rahmat Shah | lbw b Maheesh Theekshana | 58 | 78 | 7 | 0 | 74.36 |
Hashmatullah Shahidi | run out () | 28 | 45 | 2 | 0 | 62.22 |
Najibullah Zadran | lbw b Maheesh Theekshana | 6 | 8 | 1 | 0 | 75.00 |
Gulbadin Naib | b Wanidu Hasaranga | 6 | 15 | 0 | 0 | 40.00 |
Mohammad Nabi | c Dhananjaya de Silva b Kasun Rajitha | 41 | 34 | 2 | 2 | 120.59 |
Rashid Khan | c Kusal Mendis b Kasun Rajitha | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Mujeeb ur Rahman | c Dhananjaya de Silva b Kasun Rajitha | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Fazal Haq Farooqi | not out | 2 | 7 | 0 | 0 | 28.57 |
Yamin Ahmadzai | c Charith Asalanka b Lahiru Kumara | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 5 (b 1 , lb 0 , nb 0, w 4, pen 0) |
Total | 228/10 (48.2 Overs, RR: 4.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Kasun Rajitha | 9 | 2 | 31 | 3 | 3.44 | |
Maheesh Theekshana | 10 | 1 | 49 | 2 | 4.90 | |
Lahiru Kumara | 6.2 | 0 | 50 | 2 | 8.06 | |
Wanidu Hasaranga | 10 | 0 | 39 | 1 | 3.90 | |
Dhananjaya Lakshan | 3 | 0 | 21 | 0 | 7.00 | |
Dhananjaya de Silva | 10 | 0 | 37 | 1 | 3.70 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | not out | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Kusal Mendis | not out | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Extras | 5 (b 0 , lb 0 , nb 0, w 5, pen 0) |
Total | 10/0 (2.4 Overs, RR: 3.75) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Fazal Haq Farooqi | 1.4 | 0 | 8 | 0 | 5.71 | |
Mujeeb ur Rahman | 1 | 0 | 2 | 0 | 2.00 |