2018 பிஃபா உலகக் கிண்ண கால்பந்து போட்டிகள் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 32 அணிகளுடன் ஜுன் 14 ஆம் திகதி ஆரம்பமான உலகக் கிண்ண தொடரில் கிண்ணத்தை வெல்ல வாய்ப்புக் கொண்ட அணிகள் எட்டாக சுருங்கியுள்ளன.
கோலின்றி ஒரே ஒரு போட்டி மாத்திரம் சமநிலையில் முடிந்த குழு நிலை ஆட்டங்கள் மற்றும் விறுவிறுப்புக் கொண்ட 16 அணிகள் சுற்றில் பல அதிர்ச்சி முடிவுகளுடன் உலகக் கிண்ணம் காலிறுதியை சந்தித்துள்ளது.
பிரான்ஸுடனான காலிறுதிக்கு உருகுவே தகுதி
உலக நட்சத்திர வீரர்களான லியோனல் மெஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரும் இனியும் உலகக் கிண்ணத்தில் இல்லை என்றபோதும், நெய்மாரில் இருந்து லுவிஸ் சுவாரெஸ், எடன் ஹசார்ட் மற்றும் அன்டோனி க்ரிஸ்மான் என்று மேலும் பல நட்சத்திரங்கள் எஞ்சியுள்ளனர்.
இவ்வாறான ஒரு எதிர்பார்ப்புமிக்க நிலையில், நாளை ஆரம்பமாகவிருக்கும் உலகக் கிண்ண காலிறுதிப் போட்டிகளின் முன்னோட்டத்தை பார்ப்போம்,\
உருகுவே எதிர் பிரான்ஸ்
வெள்ளிக்கிழமை, ஜூலை 06 (இலங்கை நேரம்: இரவு 7.30)
இடம் – நிஸ்னி நொவ்கொரோட்
இதுவரை: உருகுவே 2 வெற்றி, பிரான்ஸ் 1 வெற்றி, 4 போட்டிகள் சமன்
உலகக் கிண்ண வரலாற்றை பார்த்தோம் என்றால் இந்த இரு அணிகளும் ஒன்றை ஒன்று எதிர்கொண்ட சந்தர்ப்பங்களில் கடும் இழுபறி நீடித்துள்ளது. 2002 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடத்திய போட்டிகள் 0-0 என கோலின்றி சமநிலையானது. எனினும் தென் அமெரிக்க அணியான உருகுவே 1966 உலகக் கிண்ணத்தில் பிரான்ஸை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த பின்னணியில் வெள்ளிக்கிழமை போட்டியை கருத்தில் கொண்டால் அதிக பரபரப்பான ஆட்டம் ஒன்றை எதிர்பார்க்கலாம். பிரான்ஸின் தாக்குதல் ஆட்டத்தை உருகுவே எவ்வாறு கையாளப்போகிறது என்பது பார்க்க வேண்டிய ஒன்றாக இருக்கும். Insert image – Mbappe – Suarez
19 வயதுடைய கைலியன் ம்பாப்பே நொக் அவுட் சுற்றில் ஆர்ஜன்டீனாவை வீழ்த்துவதற்கு இரட்டை கோல்களை பெற்று உலக அளவில் புகழை அள்ளினார். தீர்க்கமான அவரது இரண்டு கோல் மூலமே பிரான்ஸால் அந்த போட்டியை 4-3 என்ற கோல் வித்தியாசத்தில் வெல்ல முடிந்தது எனலாம். கிரிஸ்மனும் தனது வழக்கமான ஆட்டத்திற்கு திரும்பியதை அந்தப் போட்டியில் பார்க்க முடிந்தது.
உருகுவே இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரே ஒரு கோலையே விட்டுக் கொடுத்தது. என்றாலும் எடின்சன் கவானியின் காயம் காலிறுதியில் அவர் ஆடுவதில் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்படி நிகழ்ந்தால் சுவாரெஸ் மீது பொறுப்புகள் அதிகரிக்கும்.
இவ்வாறான சூழலில் உருகுவே சற்று பின்வாங்கக்கூடும் என்பதோடு பிரான்ஸ் பதில் தாக்குதல் தொடுக்கும் உத்தியில் கவனம் செலுத்தும். பிரான்ஸ் வெற்றி வாய்ப்பு கொண்ட அணியாக பார்க்கப்பட்டபோதும் அதிச்சி கொடுக்கும் அனைத்து தகுதிகளும் உருகுவேயிடம் உண்டு.
கணிப்பு – உருகுவே 0 – 0 பிரான்ஸ் (பெனால்டியில் உருகுவே வெற்றி)
பிரேசில் எதிர் பெல்ஜியம்
வெள்ளிக்கிழமை, ஜூலை 06 (இலங்கை நேரம்: இரவு 11.30)
இடம் – கசான்
இதுவரை: பிரேசில் 3 வெற்றி, பெல்ஜியம் 1 வெற்றி
இந்த இரு அணிகளும் 2002இற்கு பின்னர் சந்தித்ததில்லை. அப்போது ரிவால்டோ மற்றும் ரொனால்டோ கோல் புகுத்த 16 அணிகள் சுற்றில் பிரேசில் அணி 2-0 என பெல்ஜியத்தை வீழ்த்தியது.
இறுதி நேரத்தில் எழுச்சி பெற்ற பெல்ஜியம் பிரேசிலுடனான காலிறுதிக்கு முன்னேற்றம்
இம்முறை பிரேசில் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக சந்தேகமின்றி நெய்மார் இருந்தபோதும் இம்முறை உலகக் கிண்ணத்தை அவர் மந்தமாக ஆரம்பித்திருப்பதனால் பரிஸ் செயின்ட் ஜெர்மைன் முன்கள வீரர் மீது ரசிகர்களிடம் சற்று அவநம்பிக்கையும் உள்ளது.
பெல்ஜியம் அணி 16 அணிகள் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக பின்னடைவில் இருந்து அதிர்ச்சி தரும் வகையில் மீண்டு வந்து போட்டியை 3-2 என்ற கோல் வித்தியாசத்தில் வென்றது. மறுபுறம் பிரேசில் நெய்மாரின் கோல் மற்றும் அவரது கோல் உதவி என்பவற்றைக் கொண்டு மெக்சிகோவை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
பெல்ஜியம் அணி தனது பொற்கால தலைமுறையை கொண்டிருப்பதாக அந்த அணி ரசிகர்கள் உறுதியாக நம்பி இருக்கும் நிலையில், அது இந்த உலகக் கிண்ணத்தை வெல்வதற்கு போதுமானதா என்பதுவே இன்றை பெரிய கேள்வியாகும்.
இம்முறை உலகக் கிண்ணத்தில் அந்த அணி வேறு எந்த அணியை விடவும் அதிக கோல்களை (12) பெற்றுள்ளது. ஆனால், பிரேசில் அணியோ தொடரில் மிகக் குறைவான கோல்களையே (01) விட்டுக்கொடுத்துள்ளது. என்றாலும் பெல்ஜியம் கோல் இயந்திரமான ரொமேலு லுகாகு முதல் இரு போட்டிகளிலும் இரட்டை கோல்கள் பெற்றபோதும் கடந்த போட்டியில் அவரிடம் அந்த வேகத்தை காணவில்லை.
கணிப்பு – பிரேசில் 2 – 0 பெல்ஜியம
சுவீடன் – இங்கிலாந்து
சனிக்கிழமை, ஜூலை 7 (இலங்கை நேரம்: இரவு 7.30)
இடம் – சமரா
இதுவரை: சுவீடன் 7 வெற்றி, இங்கிலாந்து 8 வெற்றி, 9 போட்டிகள் சமன்
இந்த இரு அணிகளும் உலகக் கிண்ணத்தில் அதிகம் பரீட்சயமான அணிகள். 2002 மற்றும் 2006 குழு நிலை ஆட்டங்களில் இரு அணிகளும் சந்தித்தபோது அந்த போட்டிகள் சமநிலையிலேயே முடிந்தன, என்றாலும் 2012 ஐரோப்பிய கிண்ணத்தில் ஐந்து கோல்கள் கொண்ட பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்தால் வெற்றி பெற முடிந்தது. ஆனால் ஐந்து மாதங்களின் பின் நடந்த நட்புறவு போட்டியில் ஸ்லாடான் இப்ராஹிமோவின் நான்கு கோல்கள் புகுத்த சுவீடன் அணி இங்கிலாந்தை 4-2 என்ற கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெனால்டியில் வென்று காலிறுதிக்கு சென்ற இங்கிலாந்து சுவீடனுடன் பலப்பரீட்சை
ஸ்லாடான் சாகசம் காட்டிய அந்த போட்டி தான் இந்த இரு அணிகளும் கடைசியாக ஒருவரை ஒருவர் சந்தித்த ஆட்டமாகும். ஆனால், ஓய்வுபெற்ற அவர் இம்முறை சுவீடன் அணியில் இருக்க மாட்டார்.
என்றாலும், சுவீடன் அணி அவரின்றியும் சிறந்த நிலையிலேயே உள்ளது. இங்கிலாந்து அணியின் பின்களத்திற்கு நெருக்கடி கொடுக்கும் திறன் அந்த அணியிடம் உள்ளது.
இங்கிலாந்து, தனது நான்கு போட்டிகளிலும் தலா ஒரு கோலை விட்டுக்கொடுத்துள்ளது. இதில் மூன்று கோல்கள் கிட்டத்தட்ட ஒரே வகையான உத்தியில் பெறப்பட்டவை. சுவீடன் அணி அந்த பலவீனத்தை தனக்கு சாதகமாக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.
மறுபுறம் பயிற்சியாளர் க்ரேத் சௌத்கேட்டின் இங்கிலாந்து, 16 அணிகள் சுற்றில் தனது வரலாற்றை மாற்றி எழுதி பெனால்டி சூட் அவுட் முறையில் மெக்சிகோவை வீழ்த்தி இருப்பது அந்த அணிக்கு உற்சாகத்தை அதிகரித்துள்ளது. அந்த அணியின் தலைவர் ஹெரி கேன் தொடரில் மொத்தம் ஆறு கோல்களை பெற்று தங்க பாதணியை வெல்லும் போட்டியில் முதலிடத்தில் உள்ளார். ஆனால் சுவீடன் அணியின் வலுவான பின்களம் தனது நான்கு போட்டிகளிலும் எதிரணிக்கு ஒரே ஒரு கோலையே விட்டுக்கொடுத்துள்ளது.
கணிப்பு: சுவீடன் 1 – 2 இங்கிலாந்து
ரஷ்யா எதிர் குரோசியா
சனிக்கிழமை, ஜூலை 7 (இலங்கை நேரம்: இரவு 11.30)
இடம் – சொச்சி
இதுவரை: குரோசியா 1 வெற்றி, 2 போட்டிகள் சமன்
மிக அண்மையில், அதாவது 2015 நவம்பரில் நட்புறவு போட்டி ஒன்றில் இரு அணிகளும் சந்தித்தபோது குரோசிய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. என்றாலும் போட்டியை நடத்தும் நாடு என்பதாலும் ஸ்பெயின் அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிக்காட்டி இருப்பதாலும் ரஷ்யாவுக்கு அதிக சாதக சூழல் உள்ளது.
பெனால்டியில் வென்று காலிறுதிக்கு முன்னேறிய குரோஷியா
குரோசிய அணித்தலைவர் லூகா மொட்ரிக் மற்றும் சகாக்களுக்கு டென்மார்க்கை வீழ்த்த பெனால்டி ஷூட் அவுட் தேவைப்பட்டது. இத்தனைக்கும் அந்த அணிக்கு மேலதிக நேரத்தில் பெனால்டி வாய்ப்பொன்று கிடைத்தபோதும் லூகா அதனை தவறவிட்டிருந்தார்.
பலமும் பலவீனமும் சரிசமமாக கொண்ட குரோசிய அணியால் தனது ரசிகர்களை மகிழ்ச்சியின் உச்சத்திற்கும் தோல்வியின் கடைக்கோடிக்கும் அழைத்துச் செல்லும் சுபாவம் உள்ளது.
ஒப்பிட்டுப் பார்த்தால் 16 அணிகள் சுற்றில், 2010 உலக சம்பியன் ஸ்பெயினுக்கு ரஷ்யா ஒரு பலவீனமான எதிரணியாகவே இருந்தது. ஆனால் முழு நேர ஆட்டத்தை 1-1 என சமன் செய்து பெனால்டி சூட் அவுட் முறையால் 3-4 என வெற்றிபெற ரஷ்யாவால் முடிந்தது.
போட்டியை நடத்தும் ரஷ்யாவோ பிஃபா தவரிசையில் அதிகம் பின்தங்கிய அணியாகவே உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற போதும் சில ஆட்ட பாணிகள் அந்த அணிக்கு சிறப்பாக கைகொடுத்து வருகிறது.
தமக்கு ஆதரவாக அரங்கு முழுவதும் கோசம் எழுப்பும் ரசிகர்களின் உற்சாகத்தோடு தொடர்ந்து வெற்றிகளை குவிப்பதே ரஷ்யாவின் எதிர்பார்ப்பாகும். அது எல்லா நேரமும் பலிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது.
கணிப்பு: ரஷ்யா 0 – 3 குரோசியா
மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க