பிஃபா U-17, U-20 மகளிர் உலகக் கிண்ண புதிய திகதி அறிவிப்பு

166

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பிஃபாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கிண்ணத் தொடர் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா வைரஸ் தொற்று ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸின் அச்சுறுத்தலில் இருந்து விளையாட்டு உலகமும் தப்பவில்லை. இரண்டு மாதங்களுக்கு எந்தவொரு சர்வதேச போட்டிகளும் இல்லை என்ற நிலைமை உருவாகி விட்டது

கொரோனாவால் மகளிர் உலகக் கிண்ணப் போட்டிகள் ஒத்திவைப்பு

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில்………

இந்த நிலையில்பிஃபாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி இந்த வருடம் நவம்பர் மாதம் 2ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை இந்தியாவில் நடைபெற இருந்தது

எனினும், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், புதிய அட்டவணை விபரத்தை சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு (பிஃபா) நேற்றுமுன்தினம் (12) வெளியிட்டது.

இதன்படி, பிஃபாவின் 17 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டி அடுத்த வருடம் பெப்ரவரி 17ஆம் திகதி முதல் மார்ச் 7ஆம் திகதி வரை நடைபெறும் என பிஃபா அறிவித்துள்ளது

கால்பந்து வீரர்கள், பயிற்சியாளர்கள், நிர்வாகிகள், மைதான ஊழியர்கள் மற்றும் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலம், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை கவனத்தில் கொண்டு இந்த புதிய அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக பிஃபா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

அத்துடன், ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட திகதியை விட, ஆறு மாதங்களுக்குப் பிறகு உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெற்றாலும், 2003 ஜனவரி முதலாம் திகதி முதல் 2005 டிசம்பர் 31ஆம் திகதி வரை பிறந்தவர்களுக்கு மாத்திரம் தான் இத்தொடரில் பங்கேற்க முடியும் என்ற முன்னைய அறிவிப்பில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை

இதன் காரணமாக 2021இல் 17 வயதைக் கடந்த வீராங்கனைகளுக்கு இத்தொடரில் பங்கேற்க முடியும் என பிஃபா அறிவித்துள்ளது

மீண்டும் துளிர்விடும் கால்பந்து!

கொரோனா வைரஸ் தொற்றினால் முடங்கிப்போன சர்வதேச கால்பந்து போட்டிகள் தற்போது மெல்ல மெல்ல வழமைக்கு திரும்ப ஆரம்பித்துள்ளன. வைரஸ் தொற்றின் அச்சுறுத்தல் …..

எனவே, போட்டியை நடத்தும் இந்தியாவுடன் சேர்த்து மொத்தம் 16 அணிகள் இந்தத் தொடரில் களமிறங்க உள்ளன. புவனேஸ்வர், கொல்கத்தா, குவஹாத்தி, அஹமதாபாத், நவி மும்பை என 5 நகரங்களில் போட்டிகள் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.  

இதனிடையே, எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை பனாமா மற்றும் கொஸ்டாரிகாவில் நடைபெற இருந்த 20 வயதுக்குட்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண போட்டித் தொடரையும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஒத்திவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனினும், பிஃபாவினால் வெளியிடப்பட்ட புதிய அறிக்கையின் படி, குறித்த போட்டித் தொடரானது எதிர்வரும் 2021 ஜனவரி மாதம் 20ஆம் திகதி முதல் பெப்ரவரி 6ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

  >> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<