செர்பிய அணிக்கெதிராக பெற்றுக்கொண்ட வெற்றிக் களிப்பில் அல்பேனிய தேசிய கொடியின் சின்னத்தை அகௌரவப்படுத்திய குற்றச்சாட்டில் சுவிட்சர்லாந்து வீரர்களான செர்டான் ஷகிரி மற்றும் க்ரானிட் க்சாகா (Granit XuAKA) ஆகியோர் மீது சர்வதேச கால்பந்து சம்மேளனம் (பிஃபா) ஒழுக்காற்று விசாரணையை ஆரம்பித்துள்ளது.
செனகலின் கோல்களுக்கு பதில்கொடுத்து போட்டியை சமன் செய்த ஜப்பான்
இம்முறை உலகக் கிண்ணத்தின் வாழ்வா..
பிஃபா உலகக் கோப்பை கால்பந்து திருவிழா ரஷ்யாவில் நடைபெற்று வருகிறது. இதில் விளையாடும் வீரர்கள் மற்றும் போட்டியை பார்க்க வரும் ரசிகர்கள் அரசியல் எதிர்ப்பு மற்றும் பிறர் மனதை புண்படுத்தும் வகையிலான செய்திகளை வெளிப்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு, ஒழுக்க விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் குறிப்பாக, ரசிகர்கள் தவறு செய்தால் அந்தந்த நாட்டு கால்பந்து சங்கத்திற்கு அபராதம் விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை கலின்கிரேட் மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ‘ஈ‘ பிரிவில் இடம்பிடித்துள்ள செர்பியா – சுவிட்சர்லாந்து அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் செர்டான் ஷகிரி 90ஆவது நிமிடத்தில் தனித்துப் பெற்ற அபார கோல் மூலம் செர்பியாவை 2-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து அணி உலகக் கிண்ணத்தின் கடைசி 16 அணிகளுக்குள் நுழையும் வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.
அத்துடன், இம்முறை உலகக் கிண்ணத்தில் தோல்வியின் விளிம்பிலிருந்த அணி ஒன்று மீண்டு வந்து வெற்றி பெற்ற முதலாவது சந்தர்ப்பமாகவும் இந்தப் போட்டி அமைந்தது.
சுவிட்சர்லாந்து வீரர்களான செர்டான் ஷகிரி மற்றும் க்ரானிட் க்சாகா ஆகியோர் அல்பேனிய நாட்டு தேசிய கொடியில் உள்ள இலட்சினையைப் பிரதிபலிக்கும் வகையில் செய்கை காட்டி குறித்த வெற்றியை கொண்டாடினார்கள். எனவே, குறித்த வீரர்களின் இந்த செய்கையானது அரசியல் ரீதியிலான பதற்றத்தையும் தோற்றுவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
உலகக் கிண்ண கால்பந்து தொடரில் வெற்றிநடை போடத் தயாராகும் பயிற்றுவிப்பாளர்கள்
2018 உலகக் கிண்ண கால்பந்தில் ஜொலிக்கவுள்ள…
கொசோவா முன்பு செர்பியாவின் மாகாணமாக இருந்தது. எனினும், அதை தனிநாடாக அறிவிக்க செர்பியா மறுப்பு தெரிவித்தது. அதுமாத்திரமின்றி, அங்கு வசித்து வருகின்ற 1.8 மில்லியன் மக்கள் அல்பேனியர்களாவர். இந்நிலையில் அரசியல் பாதுகாப்பு கருதி அந்த மக்கள் சுவிட்சர்லாந்தில் குடியேறி தற்போது வசித்து வருகின்றனர். அத்துடன், கடந்த 10 வருடங்களாக சுவிட்சர்லாந்து தேசிய கால்பந்து அணிக்காகவும் அந்தப் பகுதி வீரர்கள் விளையாடி வருகின்றமை சிறப்பம்சமாகும்.
இந்நிலையில், சுவிட்சர்லாந்து வீரர்களான செர்டான் ஷகிரி மற்றும் க்ரானிட் க்சாகா ஆகிய வீரர்களும், அவர்களது குடும்பங்களும் கொசோவாவைச் சேர்ந்த அல்பேனியாவை பூர்வீகமாகக் கொண்டவர்களாகும்.
இதன்காரணமாக, இந்த போட்டியில் சுவிட்சர்லாந்து வீரர்களான செர்டான் ஷகிரி மற்றும் க்ரானிட் க்சாகா ஆகியோருக்கு எதிராக செர்பிய ரசிகர்கள் கோஷமிட்டு வந்தனர். அதற்கு அவர்களும் தங்களது கோலால் பதிலடி கொடுத்தனர்.
இதன் பிரதிபலனாகவே கோலடித்த பிறகு குறித்த இரு வீரர்களும், அல்பேனிய தேசிய கொடியிலிருக்கும் இரட்டைக் கழுகு சின்னத்தை குறிப்பிடும் வகையில் ரசிகர்களை நோக்கி கைகளை வைத்து கொண்டாடியுள்ளனர்.
இந்த வெற்றியை அன்றைய தினம் சுவிஸ் ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டியிருந்தாலும், மறுபுறத்தில் குறித்த வீரர்களது வெற்றிக் கொண்டாட்டங்களை கடுமையாக விமர்சித்திருந்தன.
கடைசி நிமிட கோல் மூலம் உலகக் கிண்ண வாய்ப்பை தக்கவைத்த ஜெர்மனி
போட்டி முடியும் நேரத்தில் டோனி க்ரூஸ் போட்ட..
இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பிஃபாவிடம் புகார் செய்யப்பட்டது. இதனால் பிஃபா ஒழுக்காற்றுக் குழு இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணையை கடந்த சனிக்கிழமை தொடங்கியுள்ளதாக சர்வதேச கால்பந்து சம்மேளனம் அறிவித்துள்ளது.
அதேபோல், செர்பியா ரசிகர்கள் அரசியல் மற்றும் பிறரை தாக்கும் வகையிலான தகவலை வெளிப்படுத்தினார்கள். இதுகுறித்தும் விசாரணை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச கால்பந்து சம்மேளனம், மைதானத்தில் அரசியல் சார்ந்த செய்திகளையோ, அதுதொடர்பிலான பதாதைகளையோ அனுமதிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, பிஃபாவின் ஒழுக்க விதிமுறைகளில் 54ஆவது சரத்தின் பிரகாரம் போட்டியின் போது பொதுமக்களையோ அல்லது ரசிகர்களை கோபமூட்டும் வகையில் நடந்துகொண்டால் இரண்டு போட்டித் தடையுடன், 3800 யூரோக்கள் அபராதமாக விதிக்கப்படும்.
இதன்படி, குறித்த குற்றச்சாட்டில் செர்டான் ஷகிரி மற்றும் க்ரானிட் க்சாகா ஆகிய இருவரும் குற்றவாளியாக இனங்காணப்பட்டால் எதிர்வரும் புதன்கிழமை (27) கொஸ்டாரிகா அணியுடனான தீர்மானமிக்க போட்டியில் விளையாடும் வாய்ப்பை அவர்கள் இழக்க நேரிடும்.
உலகக் கிண்ண வெற்றி அணியை முன்கூட்டியே கணிக்கும் காது கேட்காத பூனை
உலகக் கிண்ண கால்பந்து தொடர் இன்று ரஷ்யாவில்..
இதேவேளை, சுவிட்சர்லாந்து அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் நடுவர் பாரபட்சமாக நடந்து கொண்டதாக செர்பியா அணி சார்பில் பிஃபாவுக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான வீடியோ ஆதாரங்களை அந்த அணி நிர்வாகம் பிஃபாவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, கடந்த 17ஆம் திகதி நடப்புச் சம்பியனான ஜேர்மனி மெக்சிகோவை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் மெக்சிகோ 1-0 என ஜேர்மனியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.
இந்நிலையில், போட்டியின்போது மெக்சிகோ ரசிகர்கள் ஜேர்மனி தலைவர் மனுவெல் நோயரை குறிவைத்து கோஷம் எழுப்பினார்கள். அப்போது அவரை பாலின பாகுபாடு மற்றும் அவரை அவமானப்படுத்தும் வகையில் கோஷம் எழுப்பினார்கள்.
இதனையடுத்து பிஃபா மெக்சிகோ கால்பந்து சங்கத்துக்கு 10 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் அபராதமாக விதிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது. மெக்சிகோ ரசிகர்கள் இப்படி செய்வது முதல் தடவை அல்ல. உலகக் கிண்ண தகுதிச் சுற்றுப் போட்டியின் போதே இதுபோன்று நடந்து கண்டிப்புக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதேபோல, செனகலுக்கு எதிரான போட்டியின்போது போலந்து ரசிகர்கள் அரசியல் தொடர்பான பதாதைகளை வைத்து எதிர்ப்பினை வெளியிட்டிருந்தனர். எனவே, பிஃபாவின் ஒழுக்க விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் போலந்து கால்பந்து சங்கத்துக்கு பிஃபா 10 ஆயிரம் அமெரிக்க டொலர்களை அபராதமாக விதித்து நடவடிக்கை எடுத்திருந்தது.
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<