பிஃபாவின் ஆரம்பத் தடைகள் மீதான விமர்சனத்தைத் தொடர்ந்து, உலக கால்பந்தின் (FIFA) நிர்வாகக் குழுவும், ஐரோப்பிய கால்பந்து சம்மேளனமும் (UEFA) தங்கள் தொடர்களில் இருந்து ரஷ்யாவை இடைநீக்கம் செய்துள்ளன.
ரஷ்யாவின் தேசிய மற்றும் கழக அணிகளை இடைநீக்கம் செய்ததன் மூலம், அவ்வணிகள் 2022 உலகக் கிண்ண தொடரிலும், 2022 பெண்களுக்கான ஐரோப்பா கிண்ண தொடரிலும் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த முடிவு மூலம் ஐரோப்பிய லீக்கின் 16அணிகள் சுற்றுக்கு தகுதி பெற்ற ரஷ்யாவை சேர்ந்த Spartak Moscow அணி தற்போது அச்சுற்றிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. சம்பியன்ஸ் லீக்கின் முக்கிய பங்குதாரராக(SPONSOR) இருந்த ரஷ்ய அரசுக்கு சொந்தமான எரிசக்தி நிறுவனமான Gazprom உடனான தனது உறவையும் UEFA முடித்துக்கொண்டது.
WATCH – கால்பந்து ஆர்வலர்களை சோகமாக்கிய தேசிய வீரரின் மரணம்.| FOOTBALL ULAGAM
FIFA மற்றும் UEFA வெளியிட்ட கூட்டறிக்கையில், “கால்பந்து இங்கு முழுமையாக ஒன்றுபட்டுள்ளது மற்றும் உக்ரைனில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்காகவும் ஆதரவாக உள்ளது” என தெரிவித்தது.
இரு ஒன்றியங்களில் தலைவர்களும், உக்ரைனின் நிலைமை சுமூகமாகி மீண்டும் சமாதானம் வரும் என நம்புவதாக தெரிவித்தனர்.
கடந்த வாரம் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து ரஷ்யா மீது தடைகள் விதிக்கப்பட வேண்டும் என்று விளையாட்டு உலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
அதனடிப்படையில், ரஷ்யாவிற்கு எதிரான உலகக் கோப்பை PLAY-OFF போட்டிகளில் விளையாடும் போலந்து, சுவீடன் மற்றும் செக் குடியரசு அணிகள் தங்கள் போட்டிகளை புறக்கணிக்கும் நோக்கத்தை அறிவித்தன.
துயரச்செய்தியாக மாறிய தேசிய அணி வீரர் டக்சனின் மரணம்
எனினும் பிஃபா, ரஷ்ய கால்பந்து அணியை நடுநிலையான இடத்தில் வேறு பெயர் மற்றும் கொடியின் கீழ் விளையாட அனுமதித்தது. பிஃபாவின் இந்த முடிவு பல விளையாட்டு ஒன்றியங்களால் விமர்சனம் செய்யப்பட்டது.
சர்வதேச ஒலிம்பிக் குழு (IOC) கடந்த திங்களன்று வெளியிட்ட அறிக்கையில், “ரஷ்ய மற்றும் பெலாரஷ்ய விளையாட்டு வீரர்கள் உலகளாவிய விளையாட்டு போட்டிகளின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க விளையாட்டு நிகழ்வுகளில் இருந்து விலக்கப்பட வேண்டும்” என்று கூறியது.
அதன் பின்னர் பிஃபாவும் தங்களது நிலையை மாற்றி ரஷ்யா அணியை இவ்வருடம் நடைபெறவிருக்கும் இரு மாபெரும் கால்பந்து தொடர்களில் இருந்து நீக்கியுள்ளது.
முன்னதாக, பெண்களுக்கான ஐரோப்பிய கிண்ண தொடரிற்கு ரஷ்யா அணி ஏற்கனவே தகுதி பெற்றுள்ள நிலையில், பிஃபா உலக கிண்ண தொடருக்கான தகுதிகான் போட்டிகளில் ரஷ்யாவின் ஆண்கள் அணி விளையாட இருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கால்பந்து செய்திகளுக்கு <<