DCL சம்பியனைத் தீர்மானிக்கும் போட்டித் தினத்தில் மாற்றம்

410

டயலொக் சம்பியன்ஸ் லீக் (DCL) கால்பந்து தொடரின் சம்பியன் அணியைத் தீர்மானிக்கும் ஆட்டமாக ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் கொழும்பு கால்பந்துக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள போட்டியின் தினத்தில் இலங்கை கால்பந்து சம்மேளனம் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.  

DCLஇன் ரினௌன் – கொழும்பு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கொழும்பில்

இந்த பருவகாலத்துக்கான கழகங்களுக்கிடையிலான டயலொக் ………….

இதன்படி குறித்த போட்டி இந்த மாதம் (ஜனவரி) 14ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த கொழும்பு குதிரைப் பந்தயத்திடல் மைதானத்தில் இடம்பெறும்.

இம்முறை சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு எதிர்பார்த்துள்ள ரினௌன் அணி, இப்போட்டியை வெற்றி பெற்றாலோ அல்லது வெற்றி தோல்வியின்றி ஆட்டத்தை நிறைவுக்கு கொண்டுவந்தாலோ சம்பியன் பட்டத்தை பெற்றுக்கொள்ளும்.

மறுபுறத்தில், இந்தப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் வெற்றியைப் பதிவுசெய்தால் 40 புள்ளிகளுடன் ரினௌன் அணியுடன் முதலிடத்தை சமமாகப் பகிர்ந்துகொள்ளும். ஆனால் சம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கு இப்போட்டித் தொடரில் அதிக கோல் வித்தியாசம் கருத்திற்கொள்ளப்படும் எனில் கொழும்பு அணி சம்பியனாகும் வாய்ப்பைப் பெறும்.

டயலொக் சம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரின் 2016 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் கொழும்பு கால்பந்துக் கழகம் சம்பியன் பட்டத்தை வென்றிருந்ததுடன், ரினௌன் கால்பந்து கழகம், 2013, 2015 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.