எந்தவொரு விளையாட்டிலும் தலைமைத்துவம் என்பது இலகுவான விடயமல்ல. அதிலும் குறிப்பாக கிரிக்கெட் விளையாட்டை பொறுத்தமட்டில் போட்டியின் அரைவாசி பகுதி முழுவதும் தலைவரின் கருத்துக்கள் மற்றும் தீர்மானங்கள் படிதான் அணி வழிநடாத்தப்படுவதுடன், போட்டி நிறைவடையும் வரை அனைத்து அழுத்தங்களையும் தனது தோள்களில் சுமந்துகொண்டு அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்வதில் மும்முரமாக இருப்பார்.

பாடசாலை கிரிக்கெட்டை மீட்டெடுக்க கல்வி அமைச்சு விசேட வேலைத்திட்டம்

இலங்கை கிரிக்கெட்டை அபிவிருத்தி செய்யும் நோக்கிலும், பின்னடைவை எதிர்நோக்கியுள்ள..

வானம் உயர்ந்த அளவிற்கு தலைவர்களுக்கு அழுத்தங்கள் இருந்தாலும், அதனையும் வெற்றி கொள்கின்ற தலைவர்கள் பொதுவாக எல்லா விளையாட்டுகளிலும் இருப்பது அரிது என்று சொல்லலாம். இதில் கிரிக்கெட் உலகில் நட்சத்திரங்களாக ஜொலித்துக்கொண்டிருந்த ஒரு சில முக்கிய வீரர்கள் அழுத்தங்கள், தொடர் தோல்விகள் மற்றும் உபாதைகள் உள்ளிட்ட காரணங்களால் இவ்வருட ஆரம்பத்திலிருந்து தமது தலைமைப் பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். அவ்வாறு பதவி விலகிய 6 முக்கிய கிரிக்கெட் நட்சத்திரங்கள் தொடர்பான விபரமொன்றைப் பார்க்கலாம்.

  1. அசார் அலி

ALar Ali

பாகிஸ்தான் அணிக்காக உள்ளூர் மட்ட கிரிக்கெட் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வந்த அசார் அலி, வழக்கம்போல பாகிஸ்தான் அணிக்காக வீரரொருவர் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமாவதற்கு முன் டெஸ்ட் அறிமுகம் பெற்ற வீரராகவும் இடம்பெற்றார். இதன்படி, 2010ஆண்டு லோர்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் போட்டிகளில் அறிமுகத்தைப் பெற்றுக் கொண்ட அவர், பாகிஸ்தான் அணியின் ராகுல் ட்ராவிட் எனவும் ஆரம்பத்தில் வர்ணிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட அசார் அலி, 2011ஆம் ஆண்டு அயர்லாந்து அணியுடனான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

அதன் பிறகு டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் முன்னேற்றம் மற்றும் பின்னடைவை சந்தித்த அவர், 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் பாகிஸ்தான் அணி பெற்ற தோல்வி மற்றும் மிஸ்பா உல் ஹக்கின் ஓய்வின் பிறகு பாகிஸ்தான் அணியின் அனைத்துவிதமான போட்டிகளினதும் தலைவராக நியமிக்கப்பட்டார்.

எனினும் கடந்த 2 வருடங்களாக அசார் அலிக்கு முக்கியமான போட்டித் தொடர்களின் போது அணியை வெற்றிப்பாதைக்கு இட்டுச் செல்ல முடியாமல் போனது. ஓட்டக்குவிப்பிலும் பின்னடைவை சந்தித்தார். அத்துடன் அசார் அலியின் தலைமையின் கீழ் பாகிஸ்தான் அணி பங்குபற்றிய 10 போட்டித் தொடர்களில் 5 தொடர்களில் மாத்திரம்தான் அவ்வணி வெற்றி பெற்றதுடன், இதில் 12 போட்டிகளில் வெற்றியையும், 18 போட்டிகளில் தோல்வியையும் அவர் பெற்றுக்கொண்டார்.

இதன்படி வெறும் 31 ஒருநாள் போட்டிகளுக்கு பாகிஸ்தான் அணியின் தலைவராகச் செயற்பட்ட அசார் அலி, கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அவுஸ்திரேலிய அணிக்கெதிரான ஒருநாள் மற்றும் T-20 போட்டித் தொடர்களில் பெற்ற தோல்விக்குப் பிறகு, தலைவர் பதவியிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

அயர்லாந்து அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளராக கிரஹம் போர்ட்

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளின் முன்னால் தலைமைப் பயிற்றுவிப்பாளர் கிரஹம்..

இதனையடுத்து இவ்வருடம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுடான போட்டித் தொடரில் தனது இடத்தையும் இழந்தார். எனினும் ஜூன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் மீண்டும் அணியில் இடம்பெற்ற அவர், இங்கிலாந்துடனான அரையிறுதி மற்றும் இந்தியாவுடனான இறுதிப் போட்டியில் அரைச் சதங்களைக் குவித்து பாகிஸ்தான் அணி சம்பியன் பட்டத்தை வெல்வதற்கு முக்கிய காரணமாகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

  1. மிஸ்பா உல் ஹக்

Misbah-ul-Haq

பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் தனக்கென பிரத்தியேக இடம் பிடித்தவர் மிஸ்பா உல் ஹக். தன் நேர்த்தியான ஆட்டத்தால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்ட மிஸ்பா, கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்  நடைபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணியுடனான டெஸ்ட் போட்டித் தொடருக்குப் பின் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

43 வயதாகும் மிஸ்பா, 2001ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமானதுடன், 2010ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். அன்று முதல் பாகிஸ்தான் அணியை சிறப்பாக வழி நடத்திய மிஸ்பா, ஐசிசி தரவரிசையில் வரலாற்றில் முதற்தடவையாக பாகிஸ்தான் அணியை முதல் இடத்துக்கு கொண்டு சென்ற பெருமையையும் பெற்றார்.

முன்னதாக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிக்குப் பிறகு ஒருநாள் மற்றும் T-20 போட்டிகளில் இருந்து மிஸ்பா ஓய்வுபெற்றதுடன், பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் வேண்டுகோளுக்கிணங்க கடந்த 2 வருடங்களாக பாகிஸ்தான் டெஸ்ட் அணியின் தலைவராகச் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அணிக்காக 75 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மிஸ்பா, அதில் 53 போட்டிகளின் தலைவராகச் செயற்பட்டு 24 போட்டிகளில் வெற்றியைப் பதிவு செய்துள்ள அதேநேரம், பாகிஸ்தான் அணியை அதிகளவு போட்டிகளில் வழிநடாத்திய முதலாவது தலைவர் என்ற பெருமையையும் பெற்றிருந்தார்.

  1. அஞ்செலோ மெதிவ்ஸ்

mathews

இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரரான மெதிவ்ஸ், மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைமைப் பதவியில் இருந்து கடந்த ஜூலை மாதம் பதவி விலகினார்.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரையும் 3-2 என இழந்த நிலையிலேயே மெதிவ்ஸ் இவ்வாறு இராஜினாமாச் செய்தார்.

2013 ஆம் ஆண்டு இலங்கை அணியின் இளம் டெஸ்ட் தலைவராக தனது 25ஆவது வயதில் தெரிவுசெய்யப்பட்ட மெதிவ்ஸ் 34 டெஸ்ட் போட்டிகளில் தலைவராக செயற்பட்டு 13 வெற்றி மற்றும் 15 தோல்விகளைப் பதிவு செய்துள்ளார். 2012 இல் தனது முதல் ஒருநாள் தலைமைப் பொறுப்பை வகித்தது தொடக்கம் 98 போட்டிகளில் தலைமை வகித்து 47 போட்டிகளிலேயே அணியை வெற்றி வரை அழைத்துச் சென்றுள்ளார். 45 சந்தர்ப்பங்களில் மெதிவ்ஸின் தலைமையில் இலங்கை அணி தோல்வியை சந்தித்துள்ளது.

அதிரடி நட்சத்திரங்களுடன் கிரிக்கெட் உலகைக் கலக்க வரும் T-10 போட்டி

கிரிக்கெட் உலகில் அண்மைக்காலமாக ஏற்படும் பல மாற்றங்களால் பாரம்பரிய..

சர்வதேச T-20 போட்டிகளில் மெதிவ்ஸ் தலைமையில் இலங்கை அணி வெறும் 4 போட்டிகளிலேயே வென்றுள்ளது. 7 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.

அடிக்கடி காயங்களால் பாதிக்கப்பட்ட மெதிவ்ஸின் தலைமைப் பதவியில் கடந்த ஆண்டு அவுஸ்திரேலியாவுடனான டெஸ்ட் தொடரை இலங்கை அணி 3-0 என வெள்ளையடிப்பு செய்தது முக்கிய தருணமாக கருதப்படுகிறது.

  1. அலெஸ்டயார் குக்

cook

இங்கிலாந்து டெஸ்ட் அணித் தலைவர் பதவியிலிருந்து அவ்வணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அலெஸ்டெயார் குக் கடந்த பெப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார்.

2010ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து அணியின் அனைத்து வகையான போட்டிகளினதும் தலைவராக நியமிக்கப்பட்ட அலெஸ்டயார் குக், ஒரு சில ஒருநாள் போட்டிகளின்போது சிறப்பாக செயற்படாத காரணத்தால் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளின் பிறகு மட்டுப்படுத்தப்பட்ட ஓவர்களைக் கொண்ட போட்டிகளின் தலைவர் பதவியிலிருந்து விலகினார்.

எனினும், தொடர்ந்து டெஸ்ட் அணித் தலைவராக சிறப்பாகச் செயற்பட்ட அவர், 2013ஆம் ஆண்டு நடைபெற்ற ஆஷஸ் தொடரையும், 2015ஆம் ஆண்டு இந்தியா மற்றும் தென்னாபிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடர்களையும் கைப்பற்றியிருந்தார்.

ஆனால் கடந்த வருட இறுதியில் இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து 4-0 என படுதோல்வியை சந்தித்ததும் அவர், அவ்வருடம் முழுவதும் நடைபெற்ற எந்தவொரு டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்பார்த்தளவு பிரகாசிக்கவில்லை. அத்துடன் கடந்த வருடம் நடைபெற்ற பாகிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரை 2-2 சமப்படுத்தி வெற்றியை தவறவிட்ட குக்,  தனது பதவியிலிருந்து இராஜினாமாச் செய்வதாக அறிவித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரராகக் கருதப்படுகின்ற 32 வயதான குக், இதுவரை 147 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 59 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டுள்ளார்.

  1. ஏ.பி டிவில்லியர்ஸ்

www.hdnicewallpapers.com

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரும், உலக கிரிக்கெட்டில் நேர்த்தியான, அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 360 பாகை வீரர் என்று கிரிக்கெட் ரசிகர்களினால் வர்ணிக்கப்பட்ட ஏ பிடி வில்லியர்ஸ், கடந்த மாதம் தென்னாபிரிக்க அணியின் ஒருநாள் அணித் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னதாக கடந்த ஜனவரி மாதம் T-20 மற்றும் டெஸ்ட் அணித் தலைவர் பதிவிகளிலிருந்து டி வில்லியர்ஸ் விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர் உபாதை மற்றும் போதியளவு திறமைகளை அண்மைக்காலமாக வெளிக்காட்டாத டி வில்லியர்சை டெஸ்ட் குழாமிலிருந்து நீக்குவதற்கு அந்நாட்டு கிரிக்கெட் சபை நடவடிக்கை எடுத்திருந்ததுடன், அவருடைய டெஸ்ட் மற்றும் T-20 தலைமைப் பதவியையும் பாப் டூ பிளெஸிஸுக்கு வழங்கவும் நடவடிக்கை எடுத்திருந்தது.

இலங்கை அணியின் தலைமைப் பதவியிலிருந்து மெதிவ்ஸ் ராஜினாமா

மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளுக்குமான இலங்கை அணியின் தலைமைப் பதவியில்..

எனினும் 18 மாதங்களாக உபாதை காரணமாக அணியிலிருந்து விலகியிருந்த டி வில்லியர்ஸ் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற இலங்கை அணியுடனான ஒருநாள் தொடரில் மீண்டும் விளையாடியிருந்தார். அதனையடுத்து கடந்த ஜுன் மாதம் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகளில் தென்னாபிரிக்க அணியை டி வில்லியர்ஸ் வழிநடாத்திய போதிலும், அவ்வணிக்கு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுடன் தோல்வியைத் தழுவி அரையிறுதிக்கு தகுதிபெற்றுக் கொள்ள முடியாமல் போனது.

33 வயதான டி வில்லியர்ஸ் தென்னாபிரிக்க அணியின் தலைவராக சுமார் 6 வருங்களாக(2012-2017) செயற்பட்டுள்ளதுடன், 103 போட்டிகளுக்கு தலைவராகச் செயற்பட்டு 59 போட்டிகளில் அmணிக்கு வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. எனினும் கடந்த 2016ஆம் ஆண்டிலிருந்து உபாதை மற்றும் தனிப்பட்ட காரணங்களுக்காக எந்தவொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

  1. மஹேந்திர சிங் டோனி

India A captain Mahendra Singh Dhoni plays a shot during the first warm-up one day cricket match between India A and England XI at the Cricket Club of India (CCI) stadium in Mumbai on January 10, 2017. ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT / AFP PHOTO / PUNIT PARANJPE / ----IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE----- / GETTYOUT

இந்திய அணிக்கு ஒருநாள் மற்றும் T-20 உலகக் கிண்ணங்களை வென்று கொடுத்து கிரிக்கெட் உலகில் பல சாதனைகளைப் படைத்த கேப்டன் கூல் என்று வர்ணிக்கப்படுகின்ற மஹேந்திர சிங் டோனி, கடந்த ஜனவரி மாதம் ஒருநாள் மற்றும் T-20 அணிகளின் தலைவர் பதவிகளிலிருந்து இராஜினாமாச் செய்தார்.

2004ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமான டோனி, 2009ஆம் ஆண்டில் இந்திய அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். டோனியின் தலைமையில் இந்திய அணி 2007ஆம் ஆண்டு T-20 உலகக் கிண்ணம், 2011ஆம் அண்டு உலகக் கிண்ணம் (ஒருநாள்) மற்றும் 2013ஆம் அண்டு சம்பியன்ஸ் கிண்ணம் என்பவற்றைக் கைப்பற்றியது.

இதன்மூலம், சர்வதேச கிரிக்கெட் சபையின் முக்கிய கிண்ணங்கள் மூன்றையும் கைப்பற்றிய ஒரு அணிக்கு தலைவராக இருந்தவர் என்ற பெருமையை டோனி பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில், 2014ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் என்று டெஸ்ட் போட்டிகளில் இருந்து அவர் ஓய்வு பெற்றார். அது போன்றே, அவர் ஏனைய இரண்டு வகையான போட்டிகளுக்கான அணியின் தலைவர் பதவியில் இருந்து திடீரென பதவி விலகியிருந்தார்.

இந்திய அணிக்காக துடுப்பாட்டத்திலும், விக்கெட் காப்பிலும் பல சாதனைகளைப் படைத்த 36 வயதான டோனி, 199 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியை வழிநடாத்தி 110 போட்டிகளில் வெற்றியையும், 74 போட்டிகளில் தோல்விகளையும் பெற்றுக்கொடுத்துள்ளார். அது போன்றே, 72 T-20 போட்டிகளில் தலைவராகச் செயற்பட்டு 42 போட்டிகளில் வெற்றியையும், 28 போட்டிகளில் தோல்விகளை அணிக்கு பெற்றுக்கொடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.