45ஆவது தேசிய விளையாட்டு விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட கிழக்கு மாகாண விளையாட்டுப் போட்டியில் அம்பாறை மாவட்டம் சம்பியனாகத் தெரிவாகியதுடன், இரண்டாவது இடத்தை மட்டக்களப்பு மாவட்டமும், மூன்றாவது இடத்தை திருகோணமலை மாவட்டமும் பெற்றுக்கொண்டன.
தெற்காசிய விளையாட்டு விழாவுக்கு தகுதிபெற்ற வடக்கின் நட்சத்திரம் ஆர்ஷிகா
அண்மைக்காலமாக பாடசாலை மற்றும் தேசிய மட்ட பளுதூக்கல்….
கிழக்கு மாகாண விளையாட்டுத்துறை மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து நடத்திய இவ்வருடத்துக்கான கிழக்கு மாகாண விளையாட்டு விழாவின் இறுதி நிகழ்வான மெய்வல்லுனர் போட்டிகள் கடந்த 31ஆம், 01ஆம் திகதிகளில் அட்டாளைச்சேனை அஷ்ரப் ஞாபாகார்த்த பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் 100 மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் தேசிய மட்டத்தில் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த பாசில் உடையார், கிழக்கு மாகாணத்தின் அதிசிறந்த வீரருக்கான விருதை தட்டிச் சென்றார்.
ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியை 22.1 செக்கன்களில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்ற பாசில், கிழக்கு மாகாணத்தின் சிறந்த மெய்வல்லுனர் வீரராகவும் தெரிவானார்.
இறுதியாக கடந்த வருடம் பொலன்னறுவையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 100 மீற்றரில் வெண்கலப் பதக்கத்தினை வென்றிருந்த பாசில், இவ்வருட முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ தொண்டர் படையணி மெய்வல்லுனர் தொடரில் ஆண்களுக்கான 200 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்குபற்றி (21.49 செக்.) வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்திருந்தார்.
உள்ளூர் மெய்வல்லுனர் போட்டித் தொடர்கள் ஆகஸ்ட்டில் ஆரம்பம்
கட்டாரில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவுள்ள உலக….
அத்துடன், பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை ஒரு நிமிடமும் 04.5 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கத்தினை வென்ற அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த என். எதிரிவீர அதிசிறந்த பெண் மெய்வல்லுனராகத் தெரிவானார்.
இதேநேரம், திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த எச்.எம் ரிஹான், ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 58.23 மீற்றர் தூரத்தை எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றதுடன், மைதான நிகழ்ச்சிகளின் அதிசிறந்த வீரராகவும், பெண்களுக்கான ஈட்டி எறிதலில் தங்கப் பதக்கத்தை வென்ற (42.20 மீற்றர்) அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த ஐ. ஹசன்தி மைதான நிகழ்ச்சிகளின் அதிசிறந்த வீராங்கனையாகவும் தெரிவானார்.
இதுஇவ்வாறிருக்க, மெய்வல்லுனர் போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவு சம்பியன்களாக அம்பாறை மாவட்டம் தெரிவாக, 2ஆவது இடங்கனை முறையே மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் பெற்றுக் கொண்டன.
குறித்த இரண்டு தினங்கள் நடைபெற்ற கிழக்கு மாகாண விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் தேசிய மட்டப் போட்டிகளில் பிரகாசித்து வருகின்ற ஒருசில வீரர்கள் தமது திறமைகளை வெளிப்படுத்தியிருந்தனர்.
நிந்தவூரைச் சேர்ந்த இஸட்.ரி.எம் ஆஷிக் ஆண்களுக்கான தட்டெறிதல் (38.58 மீற்றர்) மற்றும் குண்டு எறிதல் போட்டியில் (12.90 மீற்றர்) தங்கப் பதக்கங்களை வென்றார்.
தெற்காசிய விளையாட்டு விழாவில் மெய்வல்லுனர்களுக்கு கட்டுப்பாடு
நேபாளத்தில் இவ்வருட இறுதியில் இடம்பெறவுள்ள தெற்காசிய….
இதேநேரம், ஆண்களுக்கான நீளம் பாய்தலில் கலந்துகொண்ட எம்.ஐ.எம் மிப்ரான், 5.59 மீற்றர் தூரம் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அண்மைக்காலமாக தேசிய மட்டப் போட்டிகளில் பின்னடைவை சந்தித்து வந்த மிப்ரான், இறுதியாக கடந்த வருடம் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மெய்வல்லுனர் போட்டிகளில் கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது பதக்கத்தை பெற்றுக்கொடுத்தார். ஆண்களுக்கான நீளம் பாய்தலில் பங்குகொண்ட அவர், 7.34 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து வெண்கலப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி முத்துபண்டா தலைமையில் கடந்த வியாழக்கிழமை மாலை நடைபெற்ற இறுதிநாள் நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஷான் விஜயலால் டி சில்வா பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
அத்துடன், கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல் நசீர், எஸ்.எம் இஸ்மாயில் மற்றுத் கிழக்கு மகாணத்தின் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், வெற்றியீட்டியவர்களுக்கு சான்றிதழ்களையும், கேடயங்களையும் வழங்கிவைத்தனர்.
மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க