பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடனான தன்னுடைய 15 வருட கிரிக்கெட் வாழ்க்கைக்கு பவாட் அலாம் முற்றுப்புள்ளி வைப்பதாக குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
ஹஸன் அலியின் வேகத்துடன் ஜப்னாவை வீழ்த்திய தம்புள்ள ஓரா
இப்போது தன்னுடைய 38 வயதினை நெருங்கி வருகின்ற பவாட் அலாம் 2007ஆம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளில் அறிமுகம் பெற்றதோடு, 2009ஆம் ஆண்டில் தனது தாயக அணிக்காக டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடும் சந்தர்ப்பத்தினைப் பெற்றிருந்தார். எனினும் பவாட் அலாத்திற்கு சில டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே அப்போது வாய்ப்பு வழங்கப்பட்டதோடு, அவர் தனது மீள்வருகை டெஸ்ட் போட்டியில் ஆட சுமார் 11 வருடங்கள் தேவைப்பட்டிருந்தது.
பின்னர் 2020ஆம் ஆண்டு மீண்டும் பாகிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் ஆடத் தொடங்கிய பவாட் அலாம் தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சதங்களை விளாசி தனது திறமையினை நிரூபித்திருந்தார்.
எனினும் அதன் பின்னர் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் வெளிப்படுத்திய மோசமான ஆட்டம் காரணமாக அவருக்கு பின்னர் பாகிஸ்தான் அணியினை பிரதிநிதித்துவம் செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கவில்லை. கடைசியாக இலங்கை அணியுடன் கடந்த ஆண்டில் நடைபெற்ற டெஸ்ட் தொடரே அவர் பாகிஸ்தானை இறுதியாக சர்வதேச போட்டிகளில் பிரதிநிதித்துவம் செய்த போட்டித் தொடராக அமைந்திருந்தது.
இவ்வாறாக விடயங்கள் காணப்படும் நிலையிலையே பவாட் அலாம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு பிரியாவிடை வழங்கியிருக்கின்றார். அதேநேரம் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் இருந்து பிரியாவிடை பெற்ற பின்னர் பவாட் அலம் ஐக்கிய அமெரிக்காவின் உள்ளூர் தொடர்களில் ஒன்றான மைனர் லீக் T20 தொடர் ஊடாக தனது கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடவிருப்பதாக கூறப்பட்டிருக்கின்றது.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் அலெக்ஸ் ஹேல்ஸ்
பவாட் அலத்துடன் பாகிஸ்தான் மண்ணிலிருந்து சமி அஸ்லம், ஹம்மாத் அஸாம், சயீப் படர் மற்றும் மொஹமட் முஹ்ஸின் ஆகிய வீரர்களும் அமெரிக்காவின் உள்ளூர் தொடரில் ஆடுவதற்கு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் அணிக்காக 24 T20I போட்டிகளில் ஆடியிருக்கும் பவாட் அலாம், 38 ஒருநாள் போட்டிகளிலும், 19 டெஸ்ட் போட்டிகளிலும் பங்கேற்றிருக்கின்றார். பவாட் பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 2171 ஓட்டங்களை குவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<