பல விமர்சனங்களை ஏற்படுத்திய பவாத் ஆலம்

1498
Sky Sports Cricket

இங்கிலாந்து – பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று (13) சவுதாம்ப்டனில் ஆரம்பமாகிய நிலையில், பதினொரு வருடங்களுக்குப் பிறகு அந்த அணியின் அனுபவமிக்க வீரர்களில் ஒருவரான பவாத் ஆலம் முதல்தடவையாகக் களமிறங்கினார்.

இறுதியாக 2009இல் பாகிஸ்தான் அணிக்காக டெஸ்ட் போட்டியில் விளையாடிய 34 வயதுடைய பவாத் ஆலம் இந்தப் போட்டியில் எந்தவொரு ஓட்டத்தினையும் பெறாமல் டக்அவுட் ஆனமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.  

இதில் அவர் துடுப்பாடும் போது பந்தினை எதிர்கொள்வதற்கு நின்ற விதம் பலரது விமர்சனத்தையும் பெற்றுள்ள ஒரு பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளது. 

புகைப்பட விவகாரம்: மீண்டும் பாக். குழாத்துடன் இணைந்த ஹபீஸ்

இங்கிலாந்துபாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி சவுதாம்ப்டன் மைதானத்தில் நேற்று ஆரம்பமாகியது

முதல் போட்டியில் வெற்றிக்கு அருகே சென்று 3 விக்கெட்டுக்களால் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் வென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளது. 

இந்த நிலையில், அந்த அணியில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டது. முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு சுழல் பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி இந்தப் போட்டியில் ஒரு சுழல் பந்துவீச்சாளரை மட்டுமே அணியில் தேர்வு செய்தது.

இதன்படி, சுழல் பந்துவீச்சாளர் சதாப் கானை அணியில் இருந்து நீக்கிய பாகிஸ்தான் அணி, அவருக்குப் பதிலாக துடுப்பாட்ட சகலதுறை வீரரான பவாத் ஆலமை அணியில் சேர்த்தது

எனவே, சுமார் 11 வருடங்கள் கழித்து பவாத் ஆலம் பாகிஸ்தான் அணியில் இடம் பெற்றது பலருக்கும் வியப்பை அளித்தது.

Video – LPL இல் களமிறங்கும் நட்சத்திரங்கள்|Sports RoundUp – Epi 127

பவாத் ஆலமின் இப்போதைய வயது 34. கராச்சியைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர், பாகிஸ்தானுக்காக 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். அதில் ஒரு சதத்துடன் 250 ஓட்டங்களை 41.66 என்ற சராசரியில் எடுத்துள்ளார்

தான் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்து அன்னிய மண்ணில் அறிமுக டெஸ்ட்டில் சதம் அடித்த முதல் பாகிஸ்தான் வீரராகவும் அவர் சாதனை புரிந்தார்.

பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட் வீரரான தாரிக் ஆலமின் மகனான பவாத் ஆலம், தனது 17ஆவது வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகமானார், அந்தக் காலப்பகுதியில் பாகிஸ்தானின் அடுத்த நட்சத்திரம் இவர் தான் என்று சிலாகிக்கப்பட்டவர்

முதல் டெஸ்ட் போட்டியை இலங்கைக்கு எதிராக 2009இல் விளையாடிய பவாத் ஆலம், கடைசி டெஸ்ட் போட்டியையும் அதே வருடம் நியூசிலாந்துக்கு எதிராக டுனெடின் மைதானத்தில் விளையாடினார். அத்துடன், பாகிஸ்தான் அணிக்காக 38 ஒருநாள் போட்டிகளிலும் 24 டி20 போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான தொடரை பாகிஸ்தான் வெல்லும்: இன்சமாம்

இந்த நிலையில், அண்மைக்காலமாக பாகிஸ்தானின் உள்ளூர் கிரிக்கெட்டில் திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக சுமார் 10 வருடங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் டெஸ்ட் அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுக்கொண்டார்.

இதில் கடந்த 2019/20 பருவகாலத்துக்காக நடைபெற்ற பாகிஸ்தானின் குவாய்ட்அசாம் உள்ளூர் தொடரில் 10 போட்டிகளில் விளையாடி 781 ஓட்டங்களைக் குவித்தார்

இதனிடையே, இங்கிலாந்து அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேலதிக துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக அவர் இறுதி பதினொருவர் அணியில் இடம்பெற்றார். இதன் மூலம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் இடையே அதிக இடைவெளி விட்டு இடம்பெற்ற கிரிக்கெட் வீரர்கள் பட்டியலில் பவாத் ஆலம் இடம் பெற்றுள்ளார்

அத்துடன் 88 போட்டிகளுக்குப் பிறகு பாகிஸ்தான் அணியில் மீண்டும் இடம் பெற்றுள்ள அவர், அதிக போட்டிகள் இடைவெளிக்கு பின் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தைப் பிடித்துள்ளார்

தண்ணீர் எடுத்துச் சென்ற சர்பராஸ் அஹமட்: முன்னாள் வீரர்கள் எதிர்ப்பு

அதேபோல, அதிக கால இடைவெளிக்கு பின் டெஸ்ட் அணியில் இடம் பெற்ற வீரர்கள் பட்டியலில் 20ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

இதில் இங்கிலாந்து வீரர் கரெத் பட்டி, சுமார் 11 வருடங்களுக்குப் பிறகு 2016இல் இங்னிலாந்து டெஸ்ட் அணியில் இடம்பிடித்து விளையாடியிருந்தார்.

அத்துடன் பாகிஸ்தானின் முன்னாள் வீரரான யூனிஸ் அஹ்மட், 1973இல் போட்டித்தடைக்கு உள்ளாகிய நிலையில், சுமார் 17 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் பாகிஸ்தான் அணி;க்காக வினையாடியிருந்தார்.

பவாத் ஆலம் கடைசியாக டெஸ்ட் போட்டியில் விளையாடிய போது விராட் கோஹ்லி, கேன் வில்லியம்சன் ஸ்டீவ் ஸ்மித் போன்றோர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமாகி இருக்கவில்லை. ஆனால், இன்று அவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் நான்கு சிறந்த வீரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில், பதினொரு வருடங்களுக்குப் பிறகு அணியில் இடம்பிடித்த பவாத் ஆலம், முதல் இன்னிங்ஸில் நான்கு பந்துகளுக்கு மாத்திரம் எதிர்கொண்டு டக்அவுட் ஆகியது அவரது தேர்வு குறித்த சர்ச்சையை எழுப்பியுள்ளது

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<