ஏழை குடும்பங்களுக்கு இலங்கை முன்னாள் வீரர் பர்வீஸ் மஹ்ரூப் உதவி

234
Farveez Mahroof

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரும், இலங்கை 19 வயதுக்குட்பட்ட அணியின் தற்போதைய முகாமையாளருமான பர்வீஸ் மஹ்ரூப் தனது தனிப்பட்ட நிதியினால் கொரோனாவினால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஒருதொகை உலர் உணவுப் பொருட்களை இன்று (03) கையளித்துள்ளார்.    

கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வருகிறது. இதனால் உலகில் இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 50 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்

தொடரும் இலங்கை கிரிக்கெட் வீரர்களின் மனித நேயம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இலங்கை முழுவதும் ஊரடங்குச்

இந்த வைரஸ் தொற்றினால் ஐரோப்பா கண்டம் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி, ஸ்பெயின், ஜேர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்துள்ளனர்.   

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளிலும் இந்த வைரஸ் தாக்கம் உள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக பல நாடுகளைப் போல இலங்கையிலும்  ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. அதனால், பல தொழில்கள் பாதிக்கப்பட்டு, பலர் வேலை இல்லாமல் வீடுகளில் முடங்கி உள்ளனர்.  

அவர்களில் சிலருக்கு தங்களால் முடிந்த அளவு உதவிகளை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள், இன்னாள் வீரர்கள் தொடர்ந்து வழங்கி வருவதை காணமுடிகின்றது.

இதில் இலங்கை தேசிய அணியில் தற்போது விளையாடி வருகின்ற சுரங்க லக்மால், உபுல் தரங்க, தினேஷ் சந்திமால் உள்ளிட்ட வீரர்களைப் போல, முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, முத்தையா முரளிதரன், சமிந்த வாஸ், ரொஷான் மஹாநாம ஆகிய வீரர்களும் தமது சொந்த நிதியிலிருந்து கொரோனா வைரஸினால் தமது அன்றாட செயற்பாடுகளில் பாதிப்பை எதிர்கொண்டுள்ள வறிய மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் மற்றும் அத்தியவசியய பொருட்களை வழங்கியிருந்தனர்.  

நாளாந்தம் உழைப்பவர்களுக்கு உதவ முன்வந்திருக்கும் மஹாநாம, வாஸ் ஜோடி

கொரோனா வைரஸினால் இலங்கையில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது

அந்த வரிசையில் இலங்கை அணியின் முன்னள் சகலதுறை வீரரான பர்வீஸ் மஹ்ரூப் இணைந்து கொண்டுள்ளார்

தனது சொந்த நிதியிலிருந்து நீர்கொழும்புகொச்சிக்கடை (போருதோட) பகுதியில் உள்ள 40 வறிய குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளை இன்று (03) கையளித்தார்.   

இதுதொடர்பில் ThePapare.com இணையத்தளதுக்கு கருத்து வெளியிட்ட மஹ்ரூப், கொவிட் -19 தொற்றுநோயால் இலங்கையிலும், உலகம் முழுவதிலும் உள்ள பல குடும்பங்களின் வாழ்க்கை மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.  

நீர்கொழும்பில் உள்ள போருத்தோட்ட என்பது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முற்றிலும் முடக்கப்பட்ட ஒரு பகுதியாகும். இதனால் அங்கு வாழுகின்ற மக்களின் வாழ்க்கை மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.   

எனவே அவர்களுக்குத் தேவையான உலர் உணவுக் பொருட்கள் உள்ளிட்ட சில அன்றாட வீட்டுத் தேவைகளுக்காக உதவ முடிந்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்று மஹ்ரூப் கூறினார்.

இதுஇவ்வாறிருக்க, எதிர்காலத்தில் இவ்வாறு தேவையுள்ளவர்களுக்கு உதவ தான் தயாராக இருப்பதாகவும் அதற்கான தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள நண்பர்கள் சிலரின் உதவியுடன் மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவேன் என்று நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க