தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பு பெற்று ஆரோக்கியத்துடன் வாழ்வதற்கான ஒரு அடித்தளத்தை மேற்கொள்ளும் வகையில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய ஒழுங்குசெய்யப்பட்ட ‘ஃபெமிலி ரன் சட்டர்டே’ (Family Run Saturday) நிகழ்ச்சி கடந்த சனிக்கிழமை (10) நடைபெற்றது.
ஆரோக்கியமான சமுதாயத்தைக் கட்டியெழுப்பும் நோக்கில் லங்கா ஸ்போர்ட்ஸ்ரைசன் நிறுவனம், ஸ்ரீலங்கா பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றுடன் இணைந்து இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு ஏற்பாடு செய்த அங்குரார்ப்பண ஃபெமிலி ரன் சட்டர்டே’ நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற்றது.
விளையாட்டுத்துறை அமைச்சுக்கு முன்பாக சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் ஆரம்பமான ‘ஃபெமிலி ரன் சட்டர்டே’ நிகழ்ச்சியில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, அவரது மனைவி லிமினி மற்றும் மகன் கேசரவுடன் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.
இத்தகைய நிகழ்ச்சிகள் நாட்டில் விளையாட்டுத்துறையை ஊக்குவிப்பதற்கு வழிவகுக்கும் எனவும் இதனால் சிறந்த வீர, வீராங்கனைகள் உருவாவார்கள் எனவும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
ஐந்து கிலோ மீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த நிகழ்ச்சி பிரதி சனிக்கிழமைதோறும் காலையில் நடத்தப்படுவதுடன், விரைவில் பிற மாவட்டங்களிலும் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
22 மில்லியன் வீரர்களை உருவாக்கும் ‘FOOTBALL FRIDAY’ கொழும்பில் ஆரம்பம்
எனவே, எந்தவொரு முன்பதிவுகளும் இல்லாமல் குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்ற முடியும் என விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
முன்னதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் எண்ணக்கருவில் முதலில் வெள்ளிதோறும் மாலை வேளையில் ‘ஃப்ரைடே புட்போல்’ நிகழ்ச்சியும், அதேபோன்று ‘சண்டே சைக்ளிங்’ நிகழ்ச்சியும் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல மெய்வல்லுனர் செய்திகளைப் படிக்க<<