மொத்தம் 15 பேர் அடங்கிய பாகிஸ்தானின் T20 உலகக் கிண்ண குழாத்தில் அதிரடி துடுப்பாட்டவீரரான பகார் சமான் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்.
ஷஹீன் அப்ரிடியின் நிலைமை குறித்து மகிழ்ச்சியான செய்தி
T20 உலகக் கிண்ணத்திற்கான பாகிஸ்தானின் மேலதிக வீரர்கள் குழாத்தில் உள்வாங்கப்பட்ட பகார் சமான், காயமுற்ற உஸ்மான் காதிருக்குப் பதிலாக பாகிஸ்தான் குழாத்தில் இணைக்கப்பட்டிருக்கின்றார்.
உஸ்மான் காதிர் இங்கிலாந்து அணிக்கு எதிரான T20I தொடரில் விரல் உபாதைக்கு ஆளானதை அடுத்து அவரினால் ஒக்டோபர் 22ஆம் திகதி வரை கிரிக்கெட் போட்டிகள் எதிலும் விளையாட முடியாது எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இவ்வாறான நிலைமையிலேயே அவரின் இடத்தினை பாகிஸ்தானின் உலகக் கிண்ண குழாத்தில் பகார் சமான் எடுத்துக் கொள்கின்றார். அதேநேரம் பகார் சமான், உபாதையில் இருந்து குணமடைந்திருக்கும் வேகப்பந்துவீச்சாளர் சஹீன் அப்ரிடியுடன் இணைந்து பாகிஸ்தான் குழாத்தில் நாளை (15) இணைந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
அத்துடன் பாகிஸ்தான் T20 உலகக் கிண்ணத்திற்காக இங்கிலாந்து (17) மற்றும் ஆப்கானிஸ்தான் (19) ஆகிய நாடுகளுடன் விளையாடவுள்ள பயிற்சிப் போட்டிகளிலும் அணித் தெரிவுக்கு பகார் சமான் இணைத்துக் கொள்வார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.
உலகக் கிண்ணத்தில் துடுப்பில் பெருமை காண்பிக்க துடிக்கும் துருப்புச்சீட்டுகள்
அதேவேளை பாகிஸ்தான் அணி T20 உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ள முதல் போட்டி எதிர்வரும் 23ஆம் மெல்பர்ன் நகரில் இந்திய அணியுடன் நடைபெறுகின்றது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<