இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் உப தலைவராக அனுபவ வீரர் பெப் டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பெப் டு பிளெசிஸ் கடந்த ஆண்டுவரை றோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தலைவராக செயற்பட்டிருந்த போதும், மெகா ஏலத்தில் அவரை பெங்களூர் அணி வாங்குவதற்கு முன்வரவில்லை.
>>கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இணையும் சேத்தன் சக்கரியா
இந்தநிலையில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியானது அவருக்கு நிர்ணயிக்கப்பட்ட அடிப்படை விலையான 2 கோடிக்கு (இந்திய ரூபாய்) அணியில் இணைத்தது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியின் தலைவராக கே.எல். ராஹூல் அல்லது அக்ஸர் பட்டேல் ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்படுவர் என்ற தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அக்ஸர் பட்டேல் அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் கே.எல். அணியின் உப தலைவராகவும் பெயரிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<