கடந்த மார்ச் மாதம் 30 ஆம் திகதி ஆரம்பமான வன்டேஜ் FA கிண்ண கால்பந்து தொடர் நாட்டின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. பல லீக்குகளின் போட்டிகளுடன் இந்த வார இறுதியில் இந்த தொடர் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை கால்பந்து சம்மேளனம் (FFSL) அறிவித்துள்ளது.
துரதிஷ்டமான நிகழ்வுகள் இடம்பெற்ற விரைவில் FFSL பொதுச் செயலாளர் விசேட அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார்.
அடுத்த அறிவித்தல் வரும்பரை அனைத்து லீக்குகள், பாடசாலைகள், கழகங்களின் கால்பந்து போட்டிகள், நிகழ்வுகள் மற்றும் கூட்டங்களை இடைநிறுத்தும்படி FFSL பொதுச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார். அனைவரினதும் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு படையினரின் தற்போதைய பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உதவியாக இந்த அறிவுறுத்தல் வழங்கப்படுகிறது.
பலமான அணிகளுடன் U16 ஆசிய சம்பியன்ஷிப்பில் மோதவுள்ள இலங்கை
கூட்டமாக இருக்க வேண்டும், கண்காணிப்புடனும் வதந்திகள் மற்றும் வெறுப்புச் செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் மேலும் கோரி இருந்தார்.
“அனைத்து சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் உதவி புரிந்தும் தமது குடும்பத்தினருடன் இருங்கள்”
சில வாரங்கள் இடம்பெற்ற தொடரின் 1, 2 மற்றும் 3 ஆம் சுற்றுப் போட்டிகள் இடம்பெற்றன. நாடெங்கும் 800 இற்கும் அதிகமான அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்றிருப்பதோடு எதிர்வரும் ஆக்ஸ்ட் மாதம் தொடரை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. எனினும் தொடரின் மூன்று வாரங்கள் இழந்திருக்கும் நிலையில் திட்டமிட்ட காலத்தில் தொடரை முடிப்பது சவால் கொண்டதாக மாறியுள்ளது.
இலங்கை தேசிய அணி ஜுன் மாதம் உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளில் பங்கேற்கும் நிலையில் FFSL சர்வதேச போட்டி அட்டவணையில் அதிகம் ஈடுபாடு காட்டுவதால் FA கிண்ணத்தில் மேலும் தாமதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இலங்கையின் பழைமையான போட்டித் தொடரான FA கிண்ணம் நாடெங்கும் அனைத்து தரம் கொண்ட அணிகளையும் கவர்ந்த தொடராகும்.
>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க<<