கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் மற்றுமொரு காலிறுதிப் போட்டி நேற்று கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் இலங்கை விமானப்படை அணியும் இலங்கை இராணுவ அணியும் மோதின.
போட்டியின் ஆரம்பம் முதல் இரு அணிகளும் சிறப்பாக விட்டுக் கொடுக்காமல் விளையாடியது. ஆனால் போட்டியின் 21ஆவது நிமிடத்தில் இலங்கை இராணுவ அணி வீரர் முஹமத் இஸ்ஸடீனால் முதலாவது கோல் போடப்பட்டது. அதன் பின் முதல் பாதியில் எந்தவொரு கோல்களும் போடப்படவில்லை. இதனால் முதல் பாதி முடிவில் இலங்கை இராணுவ அணி 1க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுக்காணப்பட்டது.
அதன் பின் இரண்டாவது பாதி ஆரம்பித்து 17 நிமிடங்கள் கழிந்த பின் 62ஆவது நிமிடத்தில் இலங்கை இராணுவ அணி வீரர் முஹமத் இஸ்ஸடீனால் இலங்கை இராணுவ அணி சார்பாக இரண்டாவது கோல் அடிக்கப்பட்டது. இந்த் கோலின் மூலம் இலங்கை இராணுவ அணி 2க்கு 0 என்ற அடிப்படையில் முன்னிலை பெற்றுக்காணப்பட்டது.
சமீரவிற்குப் பதிலாக சமிந்த பண்டார
ஆனால் இலங்கை விமானப்படை அணி, இராணுவ அணி 2ஆவது கோல் அடித்து 7 நிமிடங்கள் கழித்து 69ஆவது நிமிடத்தில் டில்ஷான் பெர்னாண்டோவால் இலங்கை விமானப்படை அணி சார்பாக முதலாவது கோல் போடப்பட்டது. பின் மீண்டும் 74ஆவது நிமிடத்தில் கவிந்து இஷானால் விமானப்படை அணி சார்பாக இரண்டாவது கோல் போடப்பட்டது. இதன் பின் இரண்டாவது பாதி முடிவில் போட்டி 2-2 என்று சமநிலை பெற்றுக்காணப்பட்டது.
இதனால் இரண்டு அணிகளுக்கும் பெனால்டி முறை வழங்கப்பட்டது. அதன் படி பெனால்டி முறையில் 4-3 என்ற அடிப்படையில் இலங்கை இராணுவ அணி வெற்றி பெற்று அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது .
பெனால்டி முறையில் இலங்கை இராணுவ அணி சார்பாக மதுஷன் டி சில்வா, ரொஷான் அப்புஹாமி, சன்க தனுஷ்க மற்றும் ரஹுமான் ஆகியோரால் கோல்கள் போடப்பட்டன. அது போல் இலங்கை விமானப்படை அணி சார்பாக ஹப்பு ஆராச்சி, சதுரங்க பெர்னாண்டோ மற்றும் நிபுன பண்டாரா ஆகியோரால் கோல்கள் போடப்பட்டன.
மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்