FA கிண்ண 16 அணிகள் சுற்றின் போட்டி விபரம்

1172

இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் ஏற்பாட்டில் தற்பொழுது நடைபெற்று வரும் இந்த பருவகாலத்திற்கான FA கிண்ண சுற்றுத் தொடரில் 16 அணிகள் மோதும் சுற்றுக்கான அணிகளை நிரல்படுத்தும் குலுக்கல் நிகழ்வு இன்று (02) இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைமையகத்தில் இடம்பெற்றது.   

இந்த சுற்றுத் தொடரின் 64 அணிகளுக்கான சுற்றில் இருந்து அரையிறுதிப் போட்டிகள்வரை அனைத்து சுற்றுகளுக்கும் திறந்த முறையிலான குலுக்கல் முறை இடம்பெறுகின்றது.  

மலேசியாவை எதிர்கொள்ளவுள்ள இலங்கை கால்பந்து அணி

இலங்கை மற்றும் மலேசிய தேசிய கால்பந்து அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான போட்டியொன்று

அந்த வகையில், இன்று இடம்பெற்ற குலுக்கலின்படி, FA கிண்ண தொடரின் 16 அணிகள் சுற்றில், டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரில் பங்கு கொள்ளும் முக்கிய அணிகள் சில ஒன்றை ஒன்று மோதவுள்ளன.   

இந்த சுற்றின் 8 போட்டிகளும் இடம்பெறும் மைதானங்கள் இலங்கை கால்பந்து சம்மேளனத்தினால் தெரிவு செய்யப்படும் என்றும், அனைத்துப் போட்டிகளும் இந்த வார இறுதிக்குள் நடாத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

  • 16 அணிகள் சுற்றுக்கான குலுக்கல்
அணி 1 அணி 2
ஜாவா லேன் வி.க கொழும்பு கால்.க
இலங்கை கடற்படை வி.க /  சௌண்டர்ஸ் வி.க எவரடி வி.க
இலங்கை விமானப்படை வி.க / புளு ஸ்டார் வி.க   ரினௌன் வி.க / கிறிஸ்டல் பெலஸ் கா.க
இலங்கை பொலிஸ் வி.க   நீர்கொழும்பு யூத் வி.க
நியு யங்ஸ் கா.க ரெட் சன் வி.க / நகரசபை வி.க, இரத்தினபுரி
சிவில் பாதுகாப்பு வி.க / சிறைச்சாலை வி.க   சென். நீக்கிலஸ் வி.க
யுனைடட் வி.க (மாவனல்லை) / SLTB வி.க உருத்திரபுரம் வி.க
இலங்கை இராணுவப்படை வி.க நியு ஸ்டார் வி.க

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க