இராணுவ விளையாட்டுக் கழகம் எதிர் ப்ரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்
இராணுவ விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ரில்லியண்ட் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி களனி கால்பந்தாட்டக் கட்டிடத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பத்திலேயே 4ஆவது நிமிடத்தில் ப்ரில்லியண்ட் விளையாட்டுக் கழகம் ஒரு கோலைப் போட்டது. ஆனால் அதற்குப் பின் இராணுவ விளையாட்டுக் கழகத்தால் 10, 12, 15, 27, 39ஆவது நிமிடங்களில் கோல்கள் போடப்பட்டன. முதல் பாதியின் முடிவில் இராணுவ விளையாட்டுக் கழகம் 5-1 என்ற ரீதியில் போட்டியில் முன்னிலையில் இருந்தது.
அதன் பின்பு இரண்டாவது பாதியில் முதல் பாதியில் விளையாடியதை விட மிக அபாரமாக விளையாடிய இராணுவ விளையாட்டுக் கழகம் மொத்தமாக 7 கோல்களைப் போட்டது. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 12 – 1 ஏற்ற அடிப்படையில் போட்டியை இராணுவ விளையாட்டுக் கழகம் வெற்றி கொண்டது. இராணுவ விளையாட்டுக் கழகம் சார்பாக முஹமத் இஸ்ஸடீன் 8 கோல்களைப் போட்டார்
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – முஹமத் இஸ்ஸடீன் (இராணுவ விளையாட்டுக் கழகம்)
ஹிலரி விளையாட்டுக் கழகம் எதிர் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம்
ஹிலரி விளையாட்டுக் கழகம் மற்றும் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி களுத்தறை வெர்னன் பெர்னாண்டோ மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பத்தில் இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாடின. முதல் பாதியின் 14ஆவது நிமிடத்தில் சுப்பர் சன் விளையாட்டுக் கழகம் சார்பாக அஹமத் ரிஷ்மானினால் முதலாவது கோல் போடப்பட்டது. அதன் பின் 17ஆவது நிமிடத்தில் ஹிலரி விளையாட்டுக் கழகத்தின் முதல் கோல் பெனால்டி முறையில் போடப்பட்டது. முதல் பாதியின் முடிவில் இரண்டு அணிகளும் ஒரு கோல்களைப் போட்டு போட்டி 1-1 என்ற அடிப்படையில் சமநிலை பெற்றுக் காணப்பட்டது. அதன் பின்பு இரண்டாவது பாதியில் ஹிலரி விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடி 2 கோல்களைப் போட்டு இறுதியில் போட்டியின் முழுநேர முடிவில் 3 – 1 என்ற அடிப்படையில் போட்டியை வெற்றி கொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – சரத்பாபு
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் எதிர் மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம்
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் மற்றும் மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்டி லீக் கால்பந்தாட்டக் கட்டிடத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியின் ஆரம்பம் முதல் இரண்டு அணிகளும் கோல்களைப் போட முயன்றாலும் இரு அணிகளாளும் கோல்களைப் போட முடியவில்லை. முதல் பாதியின் முடிவில் போட்டி 0-0 என்ற நிலையில் காணப்பட்டது. பின்பு இரண்டாவது பாதியிலும் இரண்டு அணிகளும் கோல்களைப் போட முயன்றாலும் அது பலனளிக்கவில்லை. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டி முடிவடைய 15 நிமிடங்கள் இருக்கும் போது ஜாவா லேன் விளையாட்டுக் கழக வீரர் மாலக பெரெராவினால் வெற்றி கோல் போடப்பட்டது. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 1 – 0 ஏற்ற அடிப்படையில் போட்டியை ஜாவா லேன் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – மாலக பெரெரா (ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்)
ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் நியு யங்ஸ் விளையாட்டுக் கழகம்
ரினௌன் விளையாட்டுக் கழகம் மற்றும் நியு யங்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி வென்னப்புவ சேர் ஆல்பர்ட் எப் பீரிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டி ஆரம்பித்து 3ஆவது நிமிடத்தில் நியு யங்ஸ் விளையாட்டுக் கழகத்தின் ஹசித ப்ரியங்கரவால் முதல் கோல் போடப்பட்டது. போட்டியின் முதல் பாதி முடிவில் நியு யங்ஸ் விளையாட்டுக் கழகம் 1-0 என்ற ரீதியில் போட்டியில் முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாவது பாதியின் ஆரம்பம் முதல் ரினௌன் விளையாட்டுக் கழகம் கோல்களைப் போட முயற்சித்து, முயற்சியின் பலனாக முஹமத் ரிப்னாசால் 56ஆவது நிமிடத்தில் முதல் கோல் போடப்பட்டது. பின் முஹமத் பசால் 76ஆவது நிமிடத்திலும் ஜொப் மைக்கேல் போட்டி முடிவடைய 3 நிமிடங்கள் இருக்கும் போதும் கோல்களைப் போட போட்டியின் முழு நேர முடிவில் 3 – 1 என்ற அடிப்படையில் போட்டியை ரினௌன் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.
கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் எதிர் ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம்
கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் மற்றும் ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி சிட்டி லீக் கால்பந்தாட்டக் கட்டிடத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் ஆரம்பம் முதல் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் கோல்களைப்போட முயன்று அவர்களது முயற்சி 34ஆவது நிமிடத்தில் நிறைவேறியது. போட்டியின் முதல் பாதி முடிவில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 1-0 என்ற ரீதியில் முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாவது பாதியில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் 6 கோல்களைப் போட்டது. ஆனால் ஜெட் லைனர்ஸ் விளையாட்டுக் கழகத்தால் ஒரே ஒரு கோலை மட்டுமே போட முடிந்தது. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 7 – 1 என்ற அடிப்படையில் போட்டியை கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் வெற்றிகொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – ஹெட்றிக் கோல்களைப் அடித்த பொட்ரி திமித்ரி தெரிவுசெய்யப்பட்டார். (கொழும்பு கால்பந்தாட்டக் கழகம்)
விமானப்படை எதிர் சொலிட் விளையாட்டுக் கழகம் .
விமானப்படை மற்றும் சொலிட் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி ஏகல விமானப்படை மைதானத்தில் நடைபெற்றது. போட்டி ஆரம்பித்து 11ஆவது நிமிடத்தில் விமானப் படையினால் முதல் கோல் போடப்பட்டது. போட்டியின் முதல் பாதி முடிவில் விமானப் படை 1-0 என்ற ரீதியில் போட்டியில் முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாவது பாதியின் 48ஆவது மற்றும் 50ஆவது நிமிடங்களில் சொலிட் விளையாட்டுக் கழகத்தினால் கோல்கள் போடப்பட்டன. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 2 – 1 என்ற அடிப்படையில் போட்டியை சொலிட் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – எடிசன் பிகர்டோ
சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் எதிர் பிலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்
சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் பிலிகன்ஸ் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி களனி கால்பந்தாட்டக் கட்டிடத் தொகுதி மைதானத்தில் நடைபெற்றது.
முதல் பாதியின் ஆரம்பம் முதல் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் சிறப்பாக விளையாடியது. முதல் பாதி முடிவில் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் 2-0 என்ற ரீதியில் போட்டியில் முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாவது பாதியின் 70ஆவது நிமிடத்தில் சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தால் இன்னுமொரு கோல் போடப்பட்டது. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 3 – 0 என்ற அடிப்படையில் போட்டியை சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – அப்துல் முஹம்மத் (சவுண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்)
பொலிஸ் விளையாட்டுக் கழகம் எதிர் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்
பொலிஸ் விளையாட்டுக் கழகம் மற்றும் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் ஆகிய அணிகளுக்கு இடையிலான போட்டி பொலிஸ் மைதானத்தில் நடைபெற்றது.
போட்டியின் முதல் பாதியின் 8ஆவது நிமிடத்தில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தால் முதல் கோல் போடப்பட்டது. முதல் பாதி முடிவில் ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் 1-0 என்ற ரீதியில் முன்னிலையில் இருந்தது. பின் இரண்டாவது பாதியில் இரு அணிகளும் கோல்களைப் போட முயன்றாலும் கோல்கள் போடப்படவில்லை. இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் 1 – 0 என்ற அடிப்படையில் போட்டியை ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றிகொண்டது.
ThePapare.com இன் போட்டியின் சிறந்த வீரர் – நசிரு ஒபயெமி (ப்ளூ ஸ்டார் விளையாட்டுக் கழகம்)