FA கிண்ண இறுதிப்போட்டியில் இராணுவ அணியை சந்திக்கிறது ரினொவ்ன்

479
FA Cup 2 semi finals

FA  கிண்ணம் அரையிறுதி – 01

கார்கில்ஸ் புட் சிட்டி நடத்தும் FA கிண்ணத்தின் 1ஆவது அரையிறுதிப் போட்டி நேற்று கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது.

இப்போட்டியில் கொழும்பு கால்பந்தாட்டக் கழகத்தை இராணுவ அணி எதிர்த்து விளையாடியது.

போட்டியின் முதல் பாதியின் ஆதிக்கம் இராணுவ அணியிடமே காணப்பட்டது. இதன் பிரதிபலனாக முதல் பாதியின் 19ஆவது நிமிடத்தில் இராணுவ அணி வீரர் சஜித் குமார தனது அணிக்காக முதல் கோலைப் போட்டார். இதனால் முதல் பாதி முடிவில் இராணுவ அணி 1-0 என்ற அடிப்படையில் போட்டியில் முன்னிலை வகித்தது.

பின் இரண்டாவது பாதி ஆரம்பிக்கப்பட்டது. 2ஆவது பாதியின் ஆரம்பம் முதல் கொழும்பு கால்பந்தாட்டக் கழகம் எவ்வாறாவது கோல் ஒன்றைப் போட்டு போட்டியை சமநிலைப்படுத்தும் முயற்சியில் களமிறங்கி விளையாடியது. ஆனால் அவர்களுக்கு பந்தை கோலினுள்ளே செலுத்த முடியாமல் போனது. இதனால் 2ஆவது  பாதியில் கோல்களைப் போடும் வாய்ப்புக் கிடைக்கவில்லை. இறுதியில் இராணுவ அணி 1-0 என்ற அடிப்படையில் போட்டியை வெற்றிக் கொண்டு கார்கில்ஸ் புட் சிட்டி நடத்தும் FA கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத்  தகுதிபெற்றது.

Photo Album – Colombo FC vs Army SC – FA Cup Semi Final 1


FA  கிண்ணம் அரையிறுதி – 02

கார்கில்ஸ் புட் சிட்டி FA கிண்ணத்தின் 2ஆவது  அரையிறுதிப் போட்டியும் நேற்று கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டியில் சவுண்டர்ஸ் கழகத்தை ரினொவ்ன் கழகம் எதிர்த்து விளையாடியது.

போட்டியின் முதல் பாதியில் சவுண்டர்ஸ் கழகம் சிறப்பாக விளையாடி கோல்களைப் போட முயற்சித்து ரினொவ்ன் கழகத்திற்கு நெருக்கடியை அளித்தது. ஆனால் ரினொவ்ன் கழக வீரர்கள் அதை சவாலாக எடுத்து கோல்களைப் போடவிடவில்லை. இதன் மூலம் முதல் பாதி முடிவில் போட்டி 0-0 என்று சமநிலையில் காணப்பட்டது.

பின் இரண்டாவது பாதி ஆரம்பிக்கப்பட்டது. 2ஆவது பாதியில் முதல் பாதிக்கு எதிர்மாற்றமாக ரினொவ்ன் கழகம் போட்டியின் முழு ஆதிக்கத்தையும் செலுத்தியது. கோலொன்றைப் போட்டு போட்டியில் முன்னிலை பெறுவோம் என்ற நோக்கில் விளையாடினாலும் அவர்களால்  இறுதிவரை கோல்களைப் போடமுடியவில்லை.

இறுதியில் போட்டியின் முழு நேர முடிவில் இரு அணிகளும் கோல்களைப் போட்டு இருக்கவில்லை. இதனால் போட்டி பெனால்டி முறை மூலம் தீர்மானிக்கப்பட்டது. சவுண்டர்ஸ் கழகத்தின் சார்பாக தலைவர் சனோஜ் சமீர மற்றும் மொஹமத் சஹீல் என்பவர்களால் பெனால்டி கோல்கள் தவறவிடப்பட்டது. அதே வகையில்  ரினொவ்ன் கழகத்தின் சார்பாக பசால் மொஹமத்  பெனால்டி கோலை தவறவிட்டார். இதனால் இந்த பெனால்டி முறையில் ரினொவ்ன் கழகம்  4-2 என்ற அடிப்படையில் பெற்றது. இதன் மூலம் ரினொவ்ன் கழகம் கார்கில்ஸ் புட் சிட்டி நடத்தும் FA கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்குத்  தகுதி பெற்றுள்ளது.

கார்கில்ஸ் புட் சிட்டி நடத்தும் FA கிண்ணத்தின் இறுதிப் போட்டிஎதிர்வரும் 11ஆம் திகதி மாலை 6.30மணிக்கு கொழும்பு ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இடம் பெறவுள்ளது. இந்த இறுதிப் போட்டியில் ரினொவ்ன் கழகதை இரணுவ அணி எதிர்த்து விளையாடுகிறது.

Photo Album – Renown SC vs Saunders SC – FA Cup Semi Final 2