இந்த பருவகாலத்திற்கான FA கிண்ணத்தின் காலிறுதிச் சுற்றுப் போட்டிகள் இந்த வார இறுதியில் சுகததாச விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளன. இந்நிலையில் குறித்த மோதலுக்கு தெரிவாகியுள்ள அணிகளின் பலம் எவ்வாறு உள்ளது மற்றும் அவர்கள் இந்த சுற்றுக்காக கடந்து வந்த பாதை என்பவை தொடர்பில் உங்களோடு ஒரு பகிர்வு.

>> மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க <<

ராணுவப்படை விளையாட்டுக் கழகம் எதிர் சூப்பர் சன் விளையாட்டுக் கழகம்
காலம் – மே 6ஆம் திகதி , நேரம் – மாலை 5.00 மணி

காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய விதம்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம்
4-1 விமானப்படை விளையாட்டுக் கழகம்
20-0 ஈஸ்வரன் விளையாட்டுக் கழகம்
3-0 மாயா விளையாட்டுக் கழகம் (வோர்க் ஓவர்)

சூப்பர் சன் விளையாட்டுக் கழகம்
1-0 சென் மேரிஸ் விளையாட்டுக் கழகம்
2-1 செரண்டிப் கால்பந்துக் கழகம்
3-0 ஒலிம்பிக் விளையாட்டுக் கழகம்

ராணுவப்படை அணியானது காலிறுதிக்கு முன்னைய சுற்றில் பிரபல அணியொன்றை வெற்றியீட்டியதன் மூலம் காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது. அத்துடன் ஈஸ்வரன் விளையாட்டுக் கழகத்துடனான போட்டியில் 20 கோல்களால் சாதனை வெற்றியையும் பெற்றது.

இவ்வணியில் பலம் வாய்ந்த முன்கள வீரர்கள் இருப்பதால் சூப்பர் சன் நுட்பமான முறையில் தடுப்பு வீரர்களை ஒழுங்கு செய்துகொள்வது முக்கியமாக இருக்கின்றது. அத்துடன், நுவான் ப்ரியங்கர மற்றும் சப்ராஸ் கயிஸ் ஆகிய வீரர்களை அவ்வணி நம்பியுள்ளது. அதனால் அவர்கள் தமக்குக் கிடைக்கக்கூடிய வாய்ப்புகளை நழுவ விடாமல் உரிய விதத்தில் பயன்படுத்திக்கொள்வதில் கவனம் செலுத்துவது முக்கிய விடயமாகும்.

முக்கிய வீரர்கள்

ராணுவப்படை விளையாட்டுக் கழகம்: சங்க தனுஷ்க
சூப்பர் சன் விளையாட்டுக் கழகம்: சப்ராஸ் கயிஸ்


ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம் எதிர் சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்
காலம் – மே 6ஆம் திகதி , நேரம் – இரவு 7.00 மணிக்கு

காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய விதம்

ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்
2-1 பாடும் மீன் விளையாட்டுக் கழகம்
3-0 லியோ விளையாட்டுக் கழகம்
3-0 ரினௌன் விளையாட்டு கழகம் (ஹட்டன்)

சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்
(3) 2-2 (1) நீர்கொழும்பு யூத் விளையாட்டுக் கழகம்
6-1 அப் கன்ட்றி லயன்ஸ் விளையாட்டுக் கழகம்
9-0 இரத்தினபுரி நகரசபை விளையாட்டுக் கழகம்

இவ்விரு அணிகளும் பலத்த போட்டிக்கு மத்தியில் காலிறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகின. யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற வலிமைமிக்க பாடும் மீன் அணியுடனான விறுவிறுப்பான போட்டியில் 2-1 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றும், சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம், நீர்கொழும்பு அணியுடனான போட்டி சமநிலையில் முடிவுற, பின்னர் பெனால்டி மூலமாக 3-1 எனவும் வெற்றியீட்டி காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றிருந்தன.

முதல்தர தொடரான சம்பியன்ஸ் லீக் போட்டிகளில் முன்னணி அணிகளாகத் திகழும் இரண்டு அணிகளை தோல்வியடையச் செய்து இந்த சுற்றுக்கு வந்துள்ள சௌண்டர்ஸ் அணி வீரர்கள் சற்று உறுதியான மனநிலையுடனேயே உள்ளனர். இளம் மற்றும் அனுபவ வீரர்களுடன் உள்ள சௌண்டர்ஸ் அணியின் மொஹமட் சஹீல் மற்றும் சௌன்தராஜ் நிரேஷ் அகியோர் நிச்சயம் ப்ளு ஸ்டாரின் பின்களத்திற்கு அழுத்தம் கொடுப்பார்கள்.

அதேநேரம், முதல் தடவையாக FA கிண்ண காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கும் ப்ளு ஸ்டார் அணிக்கு இது புது அனுபவமாக அமையவுள்ளது. எனினும், பாரிய நுட்பத்துடன் போட்டியைக் கையாளும் திறமைகளை உடைய ப்ளு ஸ்டார் அணி, நடைபெறவுள்ள காலிறுதிப் போட்டியில் சௌண்டர்ஸ் அணியின் மத்திய கள வீரர்களுக்கு நெருக்கடி கொடுக்கலாம்.

முக்கிய வீரர்கள்

ப்ளு ஸ்டார் விளையாட்டுக் கழகம்: பாஹிர் அலி
சௌண்டர்ஸ் விளையாட்டுக் கழகம்: சனோஜ் சமீர


கொழும்பு கால்பந்துக் கழகம் எதிர் விமானப்படை விளையாட்டுக் கழகம்
காலம்: மே 7ஆம் திகதி , நேரம்: மாலை 5.00 மணி

காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய விதம்

கொழும்பு கால்பந்துக் கழகம்
5-0 பெலிகன்ஸ் விளையாட்டுக் கழகம்
3-0 யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் (வோக் ஓவர்)
2-0 SLTB விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம்
3-0 மாத்தறை சிட்டி விளையாட்டுக் கழம்
(4) 1-1 (3) சிவில் பாதுகாப்பு அதிகாரசபை வி.க
13-0 ரியலைன்ஸ் விளையாட்டுக் கழகம்

இவ்விரண்டு அணிகளும் தமது முன்னைய போட்டிகளில் சிறந்த முறையில் விளையாடி வெற்றி பெற்றதன் மூலமே காலிறுதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றன.

குறிப்பாக, விமானப்படை அணியின் முன்கள வீரர் கவிந்து இஷான் மற்றும் கொழும்பு கால்பந்துக் கழகத்தின் முன்கள வீரர் சர்வான் ஜோஹர் ஆகியோர் முன்னைய போட்டிகளில் அதிக கோல்ளை அடித்து திறமைகளை வெளிப்படுத்திய முக்கிய வீரர்களாக இருக்கின்றனர்.

கொழும்பு அணி இவ்வருட FA கிண்ணத் தொடரில் எதிர்வரும் போட்டியிலேயே முதல் பிரிவு போட்டிகளில் விளையாடும் ஒரு அணியுடன் மோதவுள்ளது. இவர்கள் அண்மைய கால தொடர்கள் சிலவற்றில் வெற்றி பெற்றிருந்தாலும், இம்முறை வெளிநாட்டு வீரர்கள் இல்லாத நிலையில் காலிறுதி போட்டியை எதிர்கொள்ளவுள்ளமை முக்கிய விடயமாகும்.

எனினும் வலிமைமிக்க வீரர்களைக் கொண்ட விமானப்படையின் திறமையும், நுட்பங்களும் ஆட்டத்தில் தாக்கம் செலுத்தும் என்றால் அவர்களுக்கும் வெற்றி வாய்ப்பு நிச்சயம்.

முக்கிய வீரர்கள்

விமானப்படை விளையாட்டுக் கழகம்க: கவிந்து இஷான்
கொழும்பு கால்பந்துக் கழகம்: சர்வான் ஜோஹர்

இவ்விரு அணிகளுக்கிடையிலான அண்மைய போட்டியில், கொழும்பு கால்பந்துக் கழகம் 2-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்றிருந்தமை நினைவு கூறத்தக்கது.


ரினௌன் விளையாட்டுக் கழகம் எதிர் ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்
காலம்: மே 7ஆம் திகதி , நேரம்: மாலை 7.00 மணி

காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகிய விதம்

ரினௌன் விளையாட்டுக் கழகம்
8-0 பிரில்லியண்ட் விளையாட்டுக் கழகம்
4-1 கோல்டன் விளையாட்டுக் கழகம்
3-0 யங் பேர்ட்ஸ் விளையாட்டுக் கழகம் (வோர்க் ஓவர்)

ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்
2-0 கிறிஸ்டல் பெலஸ் விளையாட்டுக் கழகம்
5-1 கிருலப்பனை யுனைடட் விளையாட்டுக் கழகம்
2-0 சிறைச்சாலைகள் விளையாட்டுக் கழகம்

சமபலம் கொண்ட இவ்விரு அணிகளும் மீண்டும்மொருமுறை காலிறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளவுள்ளன. இரண்டு அணிகளும் பந்து நகர்தல்களில் மிகவும் தேர்ச்சியும் சிறப்பும் வாய்ந்த வீரர்களைக் கொண்டுள்ளன.

அத்துடன் ரினௌன் அணிக்காக ரிப்னாஸ் மற்றும் பசால் ஆகியோர் நல்ல திறமைகளுடன் காணப்படுகின்றனர். அதேவேளை, ஜாவா லேன் அணிக்காக ரிஸ்கான் மற்றும் இளம் வீரர் நவீன் ஆகியோர் சிறப்பாக விளையாடி வருகின்றனர்.

மேலும், இவ்விரு அணிகளும் அண்மைய காலங்களில் வெளிப்படுத்திய திறமையைப் பார்க்கும்பொழுது இரு அணிகளும் சம பலத்தினை வெளிப்படுத்தியிருந்தன. எனவே, இந்தப் போட்டி இறுதி வரை விறுவிறுப்பிற்கு எந்தக் குறையும் இன்றி இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

முக்கிய வீரர்கள்

ரினௌன் விளையாட்டுக் கழகம்: மொஹமட் ரிப்னாஸ்
ஜாவா லேன் விளையாட்டுக் கழகம்: நவீன் ஜூட்

இரு அணிகளுக்கு இடையிலான அண்மைய போட்டிகளில்
ரினௌன் 2-3 ஜாவா லேன் (சிட்டி கால்பந்து லீக் போட்டிகள்)
ரினௌன் 1-0 ஜாவா லேன் (டயலொக் சம்பியன்ஸ் லீக் – 2016/17)
ரினௌன் 5-1 ஜாவா லேன் (FA கிண்ண காலிறுதிப் போட்டி – 2016)

குறித்த போட்டிகள் அனைத்தையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையதளமான ThePapare.com ஊடாக நேரடியாகப் பார்வையிடலாம்.