அம்பாரை மாவட்ட கால்பந்து லீக்கின் அனுசரணையுடன் மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகம் நடாத்தும் ”EVEREADY CUP 2017″ பகலிரவு கால்பந்து சுற்றுப் போட்டி கடந்த 13ஆம் திகதி மருதமுனை மசூர் மௌலானா விளையாட்டு மைதானத்தில் கோலாகலமாக ஆரம்பமானது.
குறித்த தினம் இடம்பெற்ற முதலாவது போட்டியில் மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்து ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் மோதியது. இந்தப் போட்டி 02:02 என சமநிலையில் முடிவடைய, இறுதியில் பெனால்டி உதையில் (தண்ட உதை) 05:04 என்ற கோல்கள் வித்தியாசத்தில் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்று முதலாவது அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
இவ்வாரம் ஆரம்பமாகும் எவரெடி வெற்றிக் கிண்ணத் தொடர்
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்ளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16..
அதேதினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற இரண்டாவது போட்டியில் சவளக்கடை அமீர் அலி விளையாட்டுக் கழக அணியும், மட்டக்களப்பு டிஸ்கோ விளையாட்டுக் கழக அணியும் விளையாடின. இதில் 6 – 0 என்ற கோல்கள் அடிப்படையில் டிஸ்கோ அணி வெற்றி பெற்று இரண்டாவது அணியாக காலிறுதிக்கு தெரிவானது.
பின்னர் 14ஆம் திகதி மாலை இடம்பெற்ற மூன்றாவது போட்டியில் கல்முனை லக்கி ஸ்டார் அணியும், மருதமுனை யுனிவர்ஸ் அணியும் விளையாடின. இந்தப் போட்டியில் 7 – 3 என்ற கோல்கள் அடிப்படையில் லக்கி ஸ்டார் அணி வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற லக்கி ஸ்டார் அணி வேறு ஒரு லீக்கில் அங்கத்துவம் பெற்ற வீரரையும், வேறு ஒரு கழகத்தில் அங்கத்துவம் பெற்ற வீரரையும் இணைத்துக் கொண்டு விளையாடியதால் அம்பாரை மாவட்ட கால்பந்து லீக் இதனை விசாரணை செய்து, குறித்த விடயம் உண்மையெனக் கண்டதால் மருதமுனை யுனிவர்ஸ் அணிக்கு வெற்றி வழங்கப்பட்டது. எனவே, அவ்வணி காலிறுதிப் போட்டிக்கு தெரிவாகியது.
அதே தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெற்ற நான்காவது போட்டியில் மருதமுனை மருதம் அணியும், மருதமுனை கோல்ட் மைன்ட் அணியும் மோதின. இதில் 4 – 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் கோல்ட் மைன்ட் அணி வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்குத் தெரிவாகியது.
15ஆம் திகதி மாலை இடம்பெற்ற 5ஆவது போட்டியில் சாய்ந்தமருது பிளயிங்ஹோஸ் அணியும், மருதமுனை ஒலிம்பிக் அணியும் விளையாடின. இதில் ஒலிம்பிக் அணி 3 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று ஐந்தாவது அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
நடப்பு உலக சம்பியன் ஜெர்மனி FIFA தரவரிசையில் தொடர்ந்தும் முதலிடத்தில்
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இன்று (16) புதுப்பிக்கப்பட்ட FIFA உலக…
தொடரின் ஆறாவது போட்டியாக அதே நாள் இரவு மருதமுனை கிறின்மெக்ஸ் அணியும், மருதமுனை எவரெடி அணியும் விளையாடி ஆட்டத்தில் 4 – 1 என்ற கோல்கள் அடிப்படையில் கிறின்மெக்ஸ் அணி வெற்றி பெற்றது.
அதனைத் தொடர்ந்து முதல் சுற்றின் இறுதி நாளான 16ஆம் திகதி மாலை இடம்பெற்ற தொடரின் ஏழாவது போட்டியில் கல்முனை ப்ரில்லியன்ட் அணியும், மட்டக்களப்பு யங் ஸ்டார் அணியும் விளையாடின. இதில் யங் ஸ்டார் அணி 1 -0 என்ற கோல்கள் அடிப்படையில் வெற்றி பெற்று ஏழாவது அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
முதல் சுற்றின் இறுதிப் போட்டியாக கல்முனை சன்னிமவுன்ட் அணிக்கு எதிராக இடம்பெற்ற போட்டியில் ஏறாவூர் வை.எஸ்.எஸ்.சி அணி 1 -0 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று எட்டாவது அணியாக காலிறுதிப் போட்டிக்குத் தெரிவானது.
முதல் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில், தொடரின் இரண்டாவது சுற்றான காலிறுதிப் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று மாலை இடம்பெறவுள்ள முதலாவது காலிறுதிப் போட்டியில் டிஸ்கோ அணியும், மருதமுனை யுனிவர்ஸ் அணியும் விளையாடுவதுடன் இரவு 8.00 மணிக்கு இடம்பெறவுள்ள இரண்டாவது காலிறுதிப் போட்டியில் மருதமுனை ஒலிம்பிக் அணியும், மருதமுனை கிறின்மெக்ஸ் அணியும்விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.