மருதமுனை எவரெடி விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்படும் ” EVEREADY CUP 2017″ பகலிரவு உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டி எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முதல் இடம்பெறவுள்ளது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்ளைப் பிரதிநிதித்துவப்படுத்தி 16 முன்னணி உதைப்பந்தாட்டக் கழக அணிகள் இச்சுற்றுப் போட்டியில் பங்குபற்றுகின்றன.
ஆபிரிக்க கண்டத்தின் முதல் அணியாக உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்ற நைஜீரியா
அடுத்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்து போட்டிக்கு…
”EVEREADY CUP 2017″ உதைப்பந்தாட்டச் சுற்றுப் போட்டியில் பங்குபற்றும் அணிகளை நிரல்படுத்தும் நிகழ்வும், சுற்றுப் போட்டி குறித்து விளக்கமளிக்கும் செய்தியாளர்கள் சந்திப்பும் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு தொகுதியில் அமைந்துள்ள கேட்போர் கூடத்தில் (8ஆம் திகதி) இடம்பெற்றது.
எவரெடி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம்.உவைஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக்கின் செயலாளர் ஏ.எம்.இப்றாஹீம், பொருளாளர் எம்.ஐ.எம்.மனாப், சுற்றுப் போட்டிக் குழுத் தலைவர் யு.எல்.றமீஸ், எவரெடி கழகத்தின் செயலாளர் ஏ.கமால்டீன், பணிப்பாளர் ஏ.ஆர்.அமீர் உட்பட சுற்றுப் போட்டியில் கலந்து கொள்ளும் சகல அணிகளின் தலைவர், செயலாளர்களும் கலந்துகொண்டனர்.
இந்த சுற்றுப் போட்டியில் அம்பாறை மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 12 அணிகளும், மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 04 அணிகளுமாக மொத்தம் 16 அணிகள் விளையாடவுள்ளன.
நொக் அவுட் முறையில் இடம்பெறும் இச்சுற்றுப் போட்டியில் மொத்தம் 15 போட்டிகள் இடம்பெறுவதுடன் ஒரு நாளைக்கு 02 போட்டிகளை நடாத்த ஏற்பாட்டுக்குழு திட்டமிட்டுள்ளது. இதன்படி, முதல் போட்டி மாலை 05:15 மணிக்கு ஆரம்பித்து பகல் இரவுப் போட்டியாக இடம்பெறும். இரண்டாவது போட்டி இரவு 08:00 மணிக்கு ஆரம்பிக்கப்படும்.
இத்தொடரின் முதலாவது போட்டியில் மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழக அணியும், ஏறாவூர் லக்கி ஸ்டார் விளையாட்டுக் கழக அணியும் மோதவுள்ளன. இப்போட்டி மாலை 5.15 மணிக்கு இடம்பெறும். அதே தினம் இரவு 8.00 மணிக்கு இடம்பெறும் இரண்டாவது போட்டியில் சவலக்கடை அமீர் அலி உதைப்பந்தாட்ட அணியும், டிஸ்கோ உதைப்பந்தாட்ட அணியும் விளையாடவுள்ளன.
முதல் சுற்றில் எட்டுப் போட்டிகள் இடம்பெறும். அவற்றில் வெற்றி பெறும் 08 அணிகள் இரண்டாம் சுற்றான காலிறுதிக்கு தெரிவாகும். அதிலிருந்து 04 அணிகள் அரையிறுதிப் போட்டியில் விளையாடி, அதில் வெற்றி பெறும் அணிகள் கிண்ணத்திற்கான இறுதிப் போட்டியில் மோதும்.
இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 40,000 ரூபாய் பணமும் வெற்றிக் கிண்ணமும், இரண்டாவது இடம்பெறும் அணிக்கு 25,000 ரூபாய் பணமும் வெற்றிக் கிண்ணமும் வழங்கப்படவுள்ளன.
அனைத்து போட்டிகளும் மருதமுனை மசூர் மெளலானா விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளன.
குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் எவரெடி விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், இறைவரித் திணைக்களத்தின் உதவி ஆணையாளருமான எம்.ஐ.எம்.உவைஸ் கருத்து தெரிவிக்கும்பொழுது, ”உதைப்பந்தாட்ட வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகவும், இன நல்லினக்கத்தையும் கருத்தில் கொண்டு இச்சுற்றுப் போட்டியை ஆரம்பித்துள்ளோம். மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்களின் நலன்கருதியே இப்போட்டிகளை பகல் – இரவுப் போட்டியாக ஏற்பாடு செய்துள்ளோம்.
2018 உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெறுமா ஆர்ஜன்டீனா?
பேருவுடனான போட்டியை கோலின்றி சமநிலையில் முடித்த ஆர்ஜன்டீனா 1970 ஆம்….
போட்டிகளில் விளையாடும்போது மத்தியஸ்தர்களின் முடிவுகளை ஏற்றுக் கொண்டு விளையாடுகின்ற பக்குவம் வீரர்களுக்கு இருக்க வேண்டும். மாறாக மத்தியஸ்தர்கள் மீது பழிபோட்டு போட்டியைக் குழப்புகின்ற செயற்பாட்டுக்கு இடமளிக்கப்பட மாட்டாது. அவ்வாறு இடம்பெறுமாயின் அம்பாறை மாவட்ட உதைப்பந்தாட்ட லீக் உரிய கழகங்கள் மீதும், வீரா்கள் மீதும் நடவடிக்கைகளை எடுக்கும்” என்றார்.
முதல் சுற்றுப் போட்டி அட்டவணை
மாலை 5.15 மணி
1 . ஈஸ்டன் யூத் அணி மருதமுனை எதிர் லக்கி ஸ்டார் அணி ஏறா வூர் –இரவு 8.00 மணி
2. அமீர் அலி வி.க, சவலக்கடை – டிஸ்கோ வி.க, –2017.10.14 (சனி)
மாலை 5.15 மணி
3. லக்கி ஸ்டார் வி.க, கல்முனை – யுனிவர்ஸ் வி.க, மருதமுனைஇரவு 8.00 மணி
4.கோல்ட் மைன்ட் வி.க, – மருதம் வி.க, மருதமுனை2017.10.15 (ஞாயிறு)
மாலை 5.15 மணி
5. எவரெடி வி.க, மருதமுனை – கிறின்மெக்ஸ் வி.க, மருதமுனைஇரவு 8.00 மணி
6. பிர்லியன்ட் வி.க, கல்முனை – யங்ஸ்டார் வி.க, மட்டக்களப்பு2017.10.16 (திங்கள்)
மாலை 5.00 மணி
7. பிளயிங்ஹோஸ் வி.க, சாய்ந்தமருது – ஒலிம்பிக் வி.கஇ மருதமுனைஇரவு 8.00 மணி
8. சனி மவுன்ட் வி.க, கல்முனை – இளம்தாரகை வி.க, ஏறாவுர்