மேல் மாகாண கூடைப்பந்து சம்மேளனத்தின் ஏற்பட்டில் நடாத்தப்படும் ‘ஈவா’ (EVA) அகில இலங்கை (திறந்த) வலைப்பந்து தொடர் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை முதலாம் திகதி வரை கொழும்பு 2, கொம்பனித்தெரு விமானப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
நட்பு ரீதியிலான வலைப்பந்து அழைப்பு சுற்றுத் தொடரின் சம்பியனாக இலங்கை
இலங்கை வலைப்பந்தாட்ட சம்மேளனத்தினால் ஒழுங்கு…
அனைத்து கழகங்கள், வர்த்தக நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், வங்கிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் சர்வதேச பாடசாலைகள் என அவற்றுடன் தொடர்புடைய சங்கங்களுக்கு திறந்ததாக இந்த தொடர் அமையவுள்ளது. இந்த தொடருக்கு ”இன்டர்நசனல் கொஸ்மடிக்“ தனியார் நிறுவனம் அனுசரணை வழங்குகிறது.
கடந்த முறை போட்டித் தொடரில் விமானப்படை விளையாட்டுக் கழகம் வெற்றி பெற்றதோடு கடற்படை விளையாட்டுக் கழகம் இரண்டாவது இடத்தை பிடித்தது. மொத்தம் 120 அணிகள் பங்கேற்ற அந்த தொடர் வெற்றிகரமாக நிறைவடைந்தது. ஆடவர் பிரிவில் ஐக்கிய விளையாட்டுக் கழகம் சம்பியனானதோடு அந்த தொடரில் மொத்தம் 10 அணிகள் பங்கேற்றிருந்தன.
இந்த தொடர் முறையே நான்கு பிரிவுகளில் நடைபெறவுள்ளது
- ‘A’ பிரிவு (ஆடவர் மற்றும் மகளிர் திறந்த போட்டி)
- ‘B’ பிரிவு (பெண்கள் திறந்த போட்டி)
- பாடசாலை பிரிவு – 15, 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டது
- மூத்தோர் பிரிவு (40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்)
இந்த தொடரில் அணி ஒன்றுக்கு தலா 12 வீரர்கள் மற்றும் 3 அதிகாரிகள் மாத்திரமே பதிவு செய்ய முடியும் என்பதோடு ஒரு வீரருக்கு அதிகபட்சம் ஒரு அணியிலேயே ஆட முடியும்.
உலக பதினொருவர் அணியை இலகுவாக வென்ற உலக சம்பியன் மேற்கிந்திய தீவுகள்
உலக பதினொருவர் அணியுடனான T20 போட்டியில்..
‘மேல் மாகாண கூடைப்பந்து தொடருக்கு 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஈவா அனுசரணை வழங்க ஆரம்பித்ததோடு, பெண்கள் விளையாட்டு மற்றும் கூடைப்பந்துக்கு ஊக்குவிப்பு அளிக்கும் வர்த்தக குறியீடு என்ற வகையில் அது நல்லதொரு சந்தர்ப்பமாக அமைந்தது. நாம் 25 ஆண்டுகளாக இந்த தொடரின் ஓர் அங்கமாக இருப்பதோடு, மேலும் 250 ஆண்டுகளுக்கு அதன் ஓர் அங்கமாக இருக்க விரும்புகிறோம்‘ என்று இன்டர்நசனல் கொஸ்மடிக் தனியார் நிறுவன சந்தைப்படுத்தல் இயக்குனர் ஷிரானாஸ் கானி குறிப்பிட்டார்.
போட்டிகளுக்கான பதிவுகள் ஜுன் 20 ஆம் திகதியுடன் முடிவடைவதோடு போட்டிக்கான குலுக்கல் கொழும்பு 7, சுதந்திர சதுக்கத்தில் அமைந்துள்ள விளையாட்டுக் கல்லூரியில் மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.
இந்த தொடருக்கான செயலாளர் ஷெர்வோன் பெரேரா அல்லது ரியோ ரம்லானிடம் நுழைவு படிவங்களை பெற முடியும்.
>> மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க <<