உலக சம்பியன் பிரான்ஸ்யூரோ கிண்ணத்தை கைப்பற்றுமா?

Euro 2020

280

பிஃபா உலகக் கிண்ண நடப்பு சம்யினான, பிரான்ஸ் தங்களுடைய கடந்த போட்டிகளின் வெற்றிகளுடன், இம்முறை நடைபெறும் யூரோ கிண்ணத்தில் பலம் மிக்க அணியாக சாதிக்க காத்திருக்கிறது.

பிரான்ஸின் யூரோ கிண்ண வரலாறு

பிரான்ஸ் அணி தங்களுடைய முதலாவது யூரோ கிண்ணத்தை கடந்த 1984ம் ஆண்டு தங்களுடைய சொந்த மண்ணில் வெற்றிக்கொண்டது. குறித்த இறுதிப் போட்டியில் ஸ்பெயின் அணியை 2-0 என்ற கோல்கள் கணக்கில் வீழ்த்தியது

யூரோ அடுத்த சுற்றுக்குள் நுழைந்த இங்கிலாந்து, குரோசியா அணிகள்

இதனைத்தொடர்ந்து கடந்த 2000ம் ஆண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியதுடன், மிகவும் சிறந்த வெற்றியை பதிவுசெய்து, கிண்ணத்தை கைப்பற்றியது. இத்தாலி அணி ஆட்டத்தின் இறுதி தருணம் வரை 1-0 என முன்னிலை வகித்த போதும், இறுதி நொடிகளில் கோலடித்து போட்டியை சமப்படுத்தியதுடன், மேலதிக நேரத்தில் மற்றுமொரு கோலை செலுத்தி 2-1 என வெற்றிக்கொண்டது.

இறுதியாக கடந்த 2016ம் ஆண்டு பிரான்ஸ் அணி யூரோ கிண்ண இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்த போதும், போர்த்துகல் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சம்பியனாகியது.

பிரான்ஸ் அணி தகுதிபெற்றது எவ்வாறு?

பிரான்ஸ் அணி 2016ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ணத்தில் இரண்டாவது இடத்தை பிடித்ததிலிருந்து, உலகின் மிகவும் பலமிக்க கால்பந்து அணியாக வளம் வந்தது. எதிரணிகளுக்கு மிகவும் சவாலான அணியாகவும் பார்க்கப்பட்டது.

இதில், கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற பிஃபா உலகக் கிண்ண தொடரில், 4-0 என குரோசிய அணியை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்றது. இதனை தொடர்ந்து யூரோ குவாலிபையர் தொடரில் குழு H இல் விளையாடிய பிரான்ஸ் அணி 10 இல் 8 போட்டிகளில் வெற்றிபெற்றது. இதில், துருக்கி அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் 2-0 என தோல்வியடைந்தது.

அதேநேரம் மொத்தமாக 25 கோல்களை குவாலிபையர் தொடரில் பிரான்ஸ் அணி பெற்றதுடன், 6 கோல்களை மாத்திரமே எதிரணிக்கு வழங்கியுள்ளதுஇதில், ஐஸ்லாந்து மற்றும் அண்டோரா அணிகளுக்கு எதிராக பிரான்ஸ் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் சிறந்த வெற்றியை பதிவுசெய்திருந்தது.

அதுமாத்திரமின்றி, இறுதியாக நடைபெற்ற சர்வதேச நட்புரீதியான போட்டிகளில், வேல்ஸ் மற்றும் பல்கேரியா அணிகளை 3-0 என வீழ்த்தி, யூரோ கிண்ணத்தில் நுழைந்திருந்தது.

பயிற்றுவிப்பாளர் மற்றும் விளையாடும் விதம்

.எஸ் மொனாகோ, ஜுவாண்டஸ் மற்றும் மெர்சில்லே ஆகிய கழகங்களில் சிறப்பாக பணிபுரிந்த டிடியர் டெஷ்சாம்ப்ஸ், பிரான்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். இவரது பணி மெதுவானதாக இருந்த போதும், 2018ம் ஆண்டு பிஃபா உலகக் கிண்ணத்தை பிரான்ஸ் அணி கைப்பற்றியது

சர்வதேச கால்பந்தில் டிடியர் டெஷ்சாம்ப்ஸ் மிக உயரிய கௌரவத்தை பெற்றவர். சர்வதேசத்தில் நால்வர் மாத்திரமே வீரர் மற்றும் பயிற்றுவிப்பாளராக உலகக் கிண்ணத்தை வென்றுள்ளனர். அதில் ஒருவர் டிடியர் டெஷ்சாம்ப்ஸ் ஆவார்.

டெஷ்சாம்ப்ஸ் சாதாரணமாக உடைமை சார்ந்த பாணியை கொண்ட விளையாடும் விதத்தை செயற்படுத்துபவர். பிரான்ஸ் அணியின் 4-3-3 என்ற விளையாட்டு விதத்தை 4-4-2 என மாற்றியமைத்ததுடன், எதிரணிகளுக்கு ஏற்ற வகையில் 4-2-3-1 எனவும் செயற்படுத்துவார்.

அதேநேரம், முன்னணி அணிகளுக்கு எதிரான விளையாடும் போது, தமது அணி முன்னிலைப்பெற்றாலும், தாக்குதல் ஆட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவதுடன், பின் களத்தில் பந்துகளை தடுப்பதற்கான தீர்மானங்களை அதிகமாக டெஷ்சாம்ப்ஸ் எடுக்கமாட்டார்.

அதுமாத்திரமின்றி, இவரின் தலைமைத்துவத்தின் கீழ், பிரான்ஸ் அணி 115 போட்டிகளில் 76 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன், 18 போட்டிகளில் மாத்திரமே தோல்வியடைந்துள்ளது. டெஷ்சாம்ப்ஸ் 2000ம் ஆண்டு பிரான்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய போது, இந்த அணி யூரோ கிண்ணத்தை வென்றிருந்தது. எனவே, இப்போது தங்களுடைய வீரர்கள் முழு பலத்துடன் இருப்பார்கள் என நம்பிக்கை கொண்டுள்ளார்.

யூரோ கிண்ணத்தை பிரான்ஸ் அணி கைப்பற்றும் பட்சத்தில், தலைவர் மற்றும் வீரராக இந்த கிண்ணத்தை கைப்பற்றும் இரண்டாவது நபர் என்ற பெருமையை இவர் பெற்றுக்கொள்வார் என்பதுடன், உலகக் கிண்ணம் மற்றும் யூரோ கிண்ணங்களை தலைவர் மற்றும் வீரர் என்ற ரீதியில் வெற்றிக்கொண்ட முதல் நபர் என்ற பெருமையையும் பெற்றுக்கொள்வார்.

பலம் மற்றும் பலவீனம்

இம்முறை யூரோ கிண்ணத்துக்காக பெயரிடப்பட்டுள்ள பிரான்ஸ் அணி திறமை மற்றும் அனுபவம் என்ற ரீதியில் மிகச்சிறந்த அணியாக உள்ளது. முன் களம், பின் களம் மற்றும் மத்திய களம் என ஒரு அணிக்கு தேவையான அனைத்து விடயங்களையும் சரியாக பிரான்ஸ் அணி வைத்துள்ளது.

பிரான்ஸ் அணியின் ஆழத்தை பார்க்கும் போது, பிரான்ஸின் B அணியொன்றை உருவாக்கினாலும், யூரோ கிண்ணத்தில் உள்ள பல அணிகளுக்கு குறித்த B அணி சவால் கொடுக்கும்.

அணியின் இந்த ஆழத்தை கொண்டு அணி வீரர்களை தொடர்ந்தும் மாற்றத்துக்கு உள்ளாக்கும் வாய்ப்பு டெஷ்சாம்ப்ஸிற்கு கிடைத்துள்ளது. இதனூடாக போட்டியின் போது, மாற்று வீரர்களை களமிறக்குவதிலும் பிரான்ஸ் அணிக்கு வாய்ப்பு அதிகம். அத்துடன், பிரான்ஸ் அணியின் முன் களம் வேகம், துல்லியம், படைப்பாற்றல் என்பவற்றை சிறப்பாக கொண்ட அணியாக உள்ளது.

பிரான்ஸ் அணியில் மிகப்பெரிய பலவீனங்களாக கூறுவதற்கு ஒன்றுமில்லை. குறிப்பாக கோல் காப்பில் மாத்திரம் சற்று முன்னேறவேண்டும். அணியின் தலைவரான ஹூகோ ல்லோரிஸ் முதன்மை கோல் காப்பாளராக இருந்தாலும், கடந்த பருவகாலத்தில் டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணிக்காக சாதாரானமான திறமையை மாத்திரமே வெளிப்படுத்தியுள்ளார்.

நொக் அவுட் சுற்றுக்குள் சென்ற ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின்

எனவே, தங்களுடைய முதன்மை கோல் காப்பாளராக மைக் மைக்னனை மாற்றியமைக்கும் பட்சத்தில், குறித்த இந்த சிக்கலினை பிரான்ஸ் அணியால் தீர்த்துக்கொள்ள முடியும்

எதிர்பார்க்கப்படும் வீரர்கள்

பிரான்ஸ் அணியை பொருத்தவரை அவர்களுடைய முன் கள வீரர் கெய்லியன் எம்பாப்வே, உலக கால்பந்தில் உள்ள மிகச்சிறந்த முன் கள வீரராவார். இவரின் கோல்களை சரியாக முடிக்கும் திறன் அணிக்கு மிகப்பெரிய பலமாக உள்ளதுடன், ஒலிவீர் கிரோடின் முன் கள தாக்குதல்களும் சிறப்பாக அமைந்திருந்தன.

அதேநேரம், என்கலோ கென்டே உலகில் உள்ள நட்சத்திர மத்திய கள வீரராக உள்ளார். இவரின் சிறந்த பங்களிப்புடன் செல்ஸி அணி, சம்பியன்ஸ் லீக்கை வெற்றிக்கொண்டது. இவரின் பங்களிப்பு மற்றும் போல் பொக்பாவின் அபரிமிதமான மத்திய கள திறமை என்பன அணிக்கு மேலும் பலமாகும்.

அணியின் பின் களத்தை பொருத்தவரை, ரெப்பேல் வாரனே முக்கிய வீரராக உள்ளார். அதேநேரம், ஐந்து வருடங்களுக்கு பின்னர் அணிக்குள் அழைக்கப்பட்டுள்ள கரீம் பென்ஷெமா அணியின் முதல் நிலை முன் கள வீரராக எதிர்பார்க்கப்படுவதுடன், மத்திய பின் கள வீரர் ஜொலுஸ் கவுண்டே ஆகியோர் எதிர்பார்க்கப்படும் வீரர்களாக உள்ளனர்.

குழாம்

Goalkeepers: Hugo Lloris (Tottenham), Steve Mandanda (Marseille), Mike Maignan (Lille) 

Defenders: Raphael Varane (Real Madrid), Lucas Digne (Everton), Benjamin Pavard (Bayern Munich), Lucas Hernandez (Bayern Munich), Presnel Kimpembe (PSG), Clement Lenglet (Barcelona), Kurt Zouma (Chelsea), Leo Dubois (Lyon), Jules Kounde (Sevilla) 

Midfielders: Paul Pogba (Man Utd), Moussa Sissoko (Tottenham), N’Golo Kante (Chelsea), Corentin Tolisso (Bayern Munich), Adrien Rabiot (Juventus) 

Forwards: Karim Benzema (Real Madrid), Olivier Giroud (Chelsea), Kylian Mbappe (PSG), Marcus Thuram (Borussia Monchengladbach), Kingsley Coman (Bayern Munich), Wissam Ben Yedder (Monaco), Antoine Griezmann 

மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க…