மூன்று சிங்கங்களை இலட்சினையாக கொண்டுள்ள இங்கிலாந்து கால்பந்து அணி, 1966 பிஃபா உலகக் கிண்ணத்தை கைப்பற்றிய பின்னர், நீண்ட இடைவேளைக்கு பின்னர் மற்றுமொரு சர்வதேச கிண்ணத்தை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கியுள்ளது.
யூரோ கிண்ண வரலாறு
இங்கிலாந்து அணி தங்களுடைய முதல் யூரோ கிண்ண பயணத்தில் (1960), அரையிறுதிவரை முன்னேறி, யூகோஸ்லோவியா அணிக்கு எதிரான போட்டியில், 1-0 என தோல்வியடைந்தது. எனினும், மூன்றாவது இடத்துக்கான போட்டியில் சோவியத் யூனியனை வீழ்த்தி இங்கிலாந்து சிறந்த பெறுபேற்றினை பெற்றிருந்தது.
உலக சம்பியன் பிரான்ஸ்யூரோ கிண்ணத்தை கைப்பற்றுமா?
அதேநேரம், 1996ம் ஆண்டு யூரோ கிண்ண தொடரில் அரையிறுதிக்கு முன்னேறிய இங்கிலாந்து அணி, ஜேர்மனியிடம் 6-5 என்ற பெனால்டி உதைகளால் தோல்வியடைந்திருந்தது.
தகுதிபெற்றது எவ்வாறு?
இறுதியாக 2016ம் ஆண்டு இறுதி 16 அணிகளுக்கு இடையிலான சுற்றுடன் ஐஸ்லாந்து அணியிடம் 2-1 என்ற கோல்கள் கணக்கில் தோல்வியடைந்தது இங்கிலாந்து. இதன் பின்னர் தலைமை பயிற்றுவிப்பாளர் ரோய் ஹொட்ஸன் பதவி விலகியதுடன், செம் எல்லர்டைஸ் புதிய பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டார். எனினும், இவர் 2 மாதங்கள் மாத்திரமே பயிற்றுவிப்பாளராக செயற்பட்டிருந்தார்.
தொடர்ந்து பயிற்றுவிப்பாளராக கெரத் சௌத்கேட் நியமிக்கப்பட, இங்கிலாந்து 2018 பிஃபா உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு 1990ம் ஆண்டுக்கு பின்னர் முன்னேறியிருந்தது. எனினும், அரையிறுதி மற்றும் மூன்றாம் இடங்களுக்கான போட்டிகளில் தொடர்ச்சியாக இரண்டு தடவைகள் இங்கிலாந்து அணி தோல்வியுற்றிருந்தது.
யூரோ கிண்ண தகுதி சுற்றில் ஏ குழுவில் இடம்பெற்றிருந்த இங்கிலாந்து அணி 8 போட்டிகளில் 7 இல் வெற்றிபெற்றிருந்தது. செக்குடியரசு அணிக்கு எதிரான போட்டியில் மாத்திரம் 2-1 என தோல்விக்கண்டது. எனினும், மொன்டீனக்ரோ மற்றும் பல்கேரிய அணிகளுக்கு எதிரான போட்டியில் 7-0 மற்றும் 6-0 என்ற கோல்கள் கணக்கில் இங்கிலாந்து அணி அபார வெற்றியை பதிவுசெய்திருந்தது.
நொக் அவுட் சுற்றுக்குள் சென்ற ஜெர்மனி, போர்த்துக்கல், பிரான்ஸ், ஸ்பெயின்
இதனைத்தொடர்ந்து நடைபெற்ற சர்வதேச நட்புரீதியான போட்டிகளில் ஆஸ்திரியா, ரோமானியா ஆகிய அணிகளை 1-0 என வீழ்த்தியிருந்தது.
பயிற்றுவிப்பாளர் மற்றும் விளையாடும் விதம் & Playing Style
சௌத்கேட் 1996ம் ஆண்டு நடைபெற்ற யூரோ கிண்ண அரையிறுதியில் ஜேர்மனி அணிக்கு எதிரான பெனால்டி உதையை தவறவிட்டிருந்த நிலையில், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை இங்கிலாந்து அணி இழந்திருந்தது. எனினும், இம்முறை அவரது பயிற்றுவிப்பில் கிண்ணத்தை நோக்கி முன்னேற வேண்டும் என பயிற்சிகள் கொடுத்து வருகின்றார்.
இவரது பயிற்றுவிப்பு முறை உடைமை அடிப்படையிலான பாணியை கொண்டது. அதிகமாக 4-3-3 என்ற அடிப்படையில், ஆட்டத்தை நகர்த்துவதுடன், தாக்குதல் ஆட்டத்துக்கு முன்னுரிமை வழங்குவார். கழகங்களுக்கான இவரது பயிற்றுவிப்பு பேசும் அளவிற்கு இல்லாவிடினும், இவரது நுணுக்கங்கள் மற்றும் தந்திரோபாயங்கள் இங்கிலாந்து அணிக்கு தலைமை பயிற்றுவிப்பாளராக்கியது.
இவரது வித்தியாசமான உடையமைப்பை போன்று, அணியில் மிகச்சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியவர். குறிப்பாக வீரர்களிடையில் தலைமமைத்துவ பண்பு மற்றும் வீரர்களுக்கு இடையிலான நட்பு என்பவற்றை உருவாக்கியவர். அத்துடன், அமைதியாகவும், நட்பாகவும் வீரர்களிடம் பழகக்கூடியவர். இதனை அவர் மைதானத்திலும் வெளிப்படுத்தியிருக்கிறார்.
இங்கிலாந்து அணி பிஃபா உலகக் கிண்ண தரவரிசையில் 4வது இடத்தில் உள்ளதுடன், சௌத்கேட்டின் கீழ் 55 போட்டிகளில் 35 போட்டிகளில் வெற்றியையும், 10 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது.
பலம் மற்றும் பலவீனம்Strengths & Weaknesse
இங்கிலாந்து அணியின் முக்கியமான பலம் அவர்களுடைய முன் களம். அணித்தலைவர் ஹரி கேன் உட்பட மார்கஸ் ரஷ்போர்ட், ரஹீம் ஸ்ட்ரெலிங், ஜேடன் சென்கோ மற்றும் ஜெக் கிரேலிஸ் ஆகியோர் மிகச்சிறந்த முன் கள வீரர்கள்.
யூரோ கிண்ணத்துக்கான அணிக்குழாத்தை பார்க்கும் போதும், அணி சிறந்த ஆழத்தை கொண்டிருக்கிறது. குறிப்பாக மேலதிக வீரர்கள் மற்றும் போட்டிக்கான மேலதிக வீரர்களை பயிற்றுவிப்பாளர் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றார். எனினும், இங்கிலாந்து அணியின் பின் களம் உபாதைகள் காரணமாக சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. பின் கள வீரர் ஹரி மெக்குயைர் உபாதைக்குள்ளாகியுள்ளதுடன், கோல் காப்பாளர் டீன் ஹெண்டர்சனுக்கு பதிலாக ஆரோன் ரெம்ஸ்டேல் இணைக்கப்பட்டுள்ளார். அதேநேரம், முக்கிய மத்திய கள வீரர் ஜோர்டன் ஹெண்டர்சன் உபாதையிலிருந்து தற்போதுவரை குணமடைந்து வருவதும் சிக்கலை ஏற்படுத்தி வருகின்றது.
அனுபவ ரீதியில் பார்க்கும் போது, இரண்டாவது இளம் அணியாக யூரோ கிண்ணத்தில் களமிறங்கியுள்ள இங்கிலாந்து அணிக்கு, சர்வதேச அனுபம் குறைவு. ஹரி கேன், ஜோர்டன் ஹெண்டர்சன், ஸ்ட்ரெலிங் மற்றும் கெயல் வோல்கர் ஆகியோர் மாத்திரமே 50 இற்கும் அதிகமான சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளனர். ஏனைய 16 வீரர்கள் சர்வதேச கால்பந்துக்கு புதிய வீரர்கள். இதனால், அனுபவம் இங்கிலாந்து அணிக்கு முக்கிய காரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், முன்னணி அணிகளுக்கு எதிரான போட்டிகளில், இங்கிலாந்து அணியால் அந்தளவு திறமையை வெளிப்படுத்த முடியாமல் போயிருக்கிறது. எனவே, இந்த தொடர் இங்கிலாந்து அணிக்கு மிக சவாலானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எதிர்பார்க்கப்படும் வீரர்கள்
இங்கிலாந்து அணியின் தலைவர் ஹரி கேன், டொட்டென்ஹம் ஹொட்ஸ்பர் அணிக்காக இந்த பருவகாலத்தில் 23 கோல்களை அடித்துள்ளார். கடந்த பிரீமியர் லீக் பருவாகலத்தில் வீரராக இது அதிகூடிய கோல் எண்ணிக்கையாகும். அணியின் கோல்களின் எதிர்பார்ப்புக்கான முக்கிய வீரர். எனவே இவர் மீதான பார்வை அதிகமாக உள்ளது.
அதேநேரம், அஸ்டன் வில்லா அணிக்காக மிகச்சிறந்த பெறுபெற்றை இந்த பருவகாலத்தில் பெற்றுள்ள ஜெக் கிரேலிஸ், ஜோர்டன் ஹெண்டர்சன் ஆகியோரும் எதிர்பார்க்கப்படும் வீரராக உள்ளனர். அதேநேரம் பின் களத்தில் ஜோன் ஸ்டோன்ஸ் மிக முக்கிய வீரராக இருப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, 21 வயதான பில் போடன், பிரீமியர் லீக் மற்றும் தொழில்முறை கால்பந்து சங்கம் என்பவற்றின் ஆண்டின் சிறந்த இளம் வீரர் என்ற கௌரவத்தை பெற்றிருந்தார். இவருடன், லீட்ஸ் அணியின் மத்திய கள வீரர் கெல்வின் பிலிப்ஸும் எதிர்பார்க்கக்கூடிய வீரராக உள்ளார்.
குழாம்
Goalkeepers – Aaron Ramsdale (Sheffield United), Sam Johnstone (West Brom), Jordan Pickford (Everton)
Defenders – Ben Chilwell (Chelsea), Conor Coady (Wolves), Reece James (Chelsea), Harry Maguire (Manchester United), Tyrone Mings (Aston Villa), Luke Shaw (Manchester United), John Stones (Manchester City), Kieran Trippier (Atletico Madrid), Kyle Walker (Manchester City), Ben White (Brighton)
Midfielders – Jude Bellingham (Borussia Dortmund), Jordan Henderson (Liverpool), Mason Mount (Chelsea), Kalvin Phillips (Leeds), Declan Rice (West Ham)
Forwards – Dominic Calvert-Lewin (Everton), Phil Foden (Man City), Jack Grealish (Aston Villa), Harry Kane (Tottenham), Marcus Rashford (Manchester United), Bukayo Saka (Arsenal), Jadon Sancho (Borussia Dortmund), Raheem Sterling (Man City)
மேலும் பல கால்பந்து செய்திகளை படிக்க…