T20I போட்டிகளில் அதிவேக சதம் விளாசிய எஸ்தோனிய வீரர்

177

ஆடவர் T20 சர்வதேச போட்டிகளில் அதிவேக சதத்தினை எஸ்தோனிய கிரிக்கெட் அணி வீரரான சாஹில் சோஹ்ன் பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. 

நெதர்லாந்து கிரிக்கெட் அணியின் தென்னாபிரிக்க வம்சாவளி வீரர் ஓய்வு

ஆடவர் T20 சர்வதேச போட்டிகளில் அதிவேக சதத்தினை சுமார் 4 மாதங்களின் முன்னர் நமீபிய வீரரான ஜேன்-நிகோல் லொப்டி ஈட்டன்  பெற்றிருந்தார். லொப்டி ஈட்டன் குறிப்பிட்ட சாதனைக்காக 33 பந்துகளை எடுத்துக் கொண்ட நிலையில் தற்போது எஸ்தோனிய வீரர் 27 பந்துகளில் சதம் விளாசி புதிய சாதனையினை நிலைநாட்டியிருக்கின்றார் 

சாஹில் சோஹ்ன் இந்த சாதனையினை சைப்ரஸ் அணிக்கு எதிரான போட்டியில் நிலை நாட்டியதோடு, இதுவே அனைத்து வகை T20  போட்டிகளிலும் வீரர் ஒருவர் குறைந்த பந்துகளில் சதம் பெற்ற நிகழ்வாகவும் பதிவாகியிருக்கின்றது.  

அத்துடன் சோஹ்ன் சாதனை நிலைநாட்டிய போட்டியில் மொத்தமாக  18 சிக்ஸர்களை விளாசியதோடு அது ஆடவர் T20 சர்வதேச போட்டியொன்றின் இன்னிங்ஸ் ஒன்றில் துடுப்பாட்டவீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய சிக்ஸர்களாகவும் பதிவாகியிருந்தது 

அதேநேரம் சைப்ரஸ் நாட்டின் எபிஸ்கோப்பியில் நேற்று (17) நடைபெற்றிருந்த போட்டியில் மொத்தமாக 41 பந்துகளை மாத்திரம் எதிர் கொண்டு 144 ஓட்டங்களை பெற்றிருந்த சோஹ்ன், போட்டியின் வெற்றி இலக்காக சைப்ரஸ் அணி நிர்ணயம் செய்த 192 ஓட்டங்களை எஸ்தோனியா 13 ஓவரின் நிறைவில் அடைவதற்கு காரணமாகியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.  

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<