இலங்கைக்கு முதல் போர்முயுலா 3 வெற்றியை பெற்றுத்தந்த இஷான் பீரிஸ்

231

போர்முயுலா 3 (F3) கார் பந்தய தொடரில் அறிமுகமாகியுள்ள இலங்கையைச் சேர்ந்த கார் ஓட்டப்பந்தய வீரர் இஷான் பீரிஸ், ஆசிய விண்டர் சீரிஸ் கார் ஓட்டப்பந்தயத் தொடரில் முதலாவது வெற்றியினை சுவீகரித்துள்ளார். அத்துடன், F3 காரோட்டப்பந்தயத்தில் இலங்கைக்கு முதல் வெற்றியினை பெற்றுக்கொடுத்தவர் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார்.

சீகிரிய மோட்டார் பந்தயத்தில் சாதிப்பாரா கமால்தீன் ஹம்தான்?

இலங்கை மோட்டார் வாகன சாரதிகள் சங்கமும், இலங்கை விமானப் படையின் சேவா…

இந்த குளிர் பருவகாலத்துக்கான ஆசியாவின் இறுதி கார் பந்தயமான ஆசிய விண்டர் சீரிஸ் F3 கார் பந்தயத் தொடர் மலேசியாவின் செபாங் சர்வதேச சேர்க்கிட்டில் நடைபெற்று முடிந்தது. முன்னணி வீரர்கள் பங்குபற்றும் இந்த தொடரில், இலங்கையைச் சேர்ந்த இஷான் பீரிஸ், எப்சொலுயுட் ரேஸிங் (Absolute Racing) அணி சார்பாக பந்தயத்தில் போட்டியிட்டார்.

போட்டித் தொடரின் முதலாவது தகுதிகாண் சுற்றில் இரண்டாவது இடத்தை பிடித்த இஷான் பீரிஸ், மிகச்சிறந்த ஆரம்பத்தை பெற்றுக்கொண்டார்.  தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது தகுதிகாண் சுற்றில் ஐந்தாவது இடத்தை பிடித்த இவர், பந்தயத்துக்கான இடத்தை பிடித்துக்கொண்டார்.

எனினும், காரோட்டப்பந்தயத்தின் முதலாவது சுற்றில், எதிர் காரோட்டப்பந்தய வீரர் ஒருவர் முந்துகைக்கு எடுத்த முயற்சியொன்றின் போது, அவரது கார் 6வது வீரராக சென்றுக்கொண்டிருந்த இஷானின் கார் மீது மோதியது. இதனால், இஷான் பீரிஸினால் சுற்றினை நிறைவுசெய்ய முடியவில்லை. எனினும், அடுத்து நடைபெற்ற சுற்றில் இஷான் பீரிஸ் 5வது இடத்தை பிடித்துக்கொண்டார்.

பின்னர், வெற்றியை தீர்மானிக்கும் இறுதிப் பந்தயத்தில், ஐந்தாவது இடத்துடன் ஆரம்பத்தை பெற்ற இஷான் பீரிஸ், இரண்டாவது இடத்துக்கு முன்னேறினார். எனினும், இரண்டாவது சுற்றின் (lap) போது, தனது அணியின் யே யிபெய் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜெக் டூஹன் ஆகியோர் இஷான் பீரிஸை முந்திச் சென்றனர். இதில், பந்தயத்தின் 11வது சுற்றின் போது, யே யிபெய் மற்றும் அவுஸ்திரேலியாவின் ஜெக் டூஹன் ஆகியோரின் கார்கள் மோதிக்கொண்டதை அவதானித்த இஷான் பீரிஸ், அவர்களை முந்திச் சென்று தன்னுடைய முதல் போர்முயுலா 3 வெற்றியினை பெற்றுக்கொண்டார். இஷான் பீரிஸ் போட்டித் தூரத்தை 30 நிமிடங்கள் மற்றும் 51.871 செக்கன்களில் நிறைவுசெய்து வெற்றியினை தக்கவைத்தார்.

சுவாரசியமான பந்தயங்களோடு நடைபெறவுள்ள வளவ சுப்பர் க்ரொஸ் 2018

சபரகமுவ மாகாணத்தின் எல்லை ஓரத்தில் அமைந்திருக்கும் உடவளவை ஒரு தேசிய….

இந்த வெற்றி தொடர்பில் கருத்து தெரிவித்த இஷான் பீரிஸ், “மிகச் சிறந்த வீரர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றமை மகிழ்ச்சியளிக்கிறது. எனது வாழ்நாளில் அதி சிறந்த பிரதிகளை வெளிப்படுத்தியதன் மூலம் இந்த வெற்றியை பெறக்கூடியதாக இருந்தது. எனது கார் சிறப்பாக உருவாக்கப்பட்டிருந்தது. அதற்காக, எனது முகாமையாளர் மற்றும் அணியில் உள்ள அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இவர்களுடன் இணைந்து செயற்படுவதை பெருமையாக நினைக்கிறேன்.

அதேநேரம், எனக்கு இவ்வளவு நாளாகவும் ஆதரவு வழங்கி வந்த எனது பெற்றோருக்கு நன்றிகளை தெரிவிப்பதுடன், எனக்கு இத்தனை நாளாகவும் ஆதரவாக இருந்த அனைவருக்கும் முக்கியமாக இலங்கையில் எனக்கு ஆதரவு வழங்கியவர்களுக்கும் இந்த வெற்றியை காணிக்கையாக செலுத்துகிறேன்” என்றார்.

>>மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க<<