வைத்தியசாலையில் இருந்து வெளியேறினார் எரங்க

327
Shaminda Eranga,

இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷாமிந்த எரங்க அதிகபடியான இதய துடிப்பால் அவதிப்பட்டு அயர்லாந்தின் டப்ளின் நகரில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்து தற்போது அவர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கிரிக்கட் போட்டிகளில் பந்துவீச எரங்காவிற்குத் தடை

அயர்லாந்து அணியுடனான 2ஆவது ஒருநாள் போட்டியில்இலங்கை அணி துடுப்பெடுத்தாடும் போது அவர் இறுதிப்பந்தை முகங்கொடுக்க வந்திருந்தாலும் பந்துவீச வரவில்லை. அதற்குப் பதிலாக அவர் வைத்தியசாலைக்கு சென்றிருந்தார். அங்கு சென்ற போது அவரது இதயத் துடிப்பு வேகம் நிமிடத்திற்கு 220 ஆக இருந்தது. இதன் பின் 24 மணித்தியாலங்கள் வைத்தியசாலை கண்காணிப்பில் இருந்து மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அதன் முடிவுகள் இன்று வெளிவந்த நிலையில் அந்தப் பரிசோதனை முடிவில் ஷாமிந்த எரங்கவிற்கு எந்தவித நோயோ / ஆபத்தோ இல்லை என மருத்துவர்கள் குழு கூறியுள்ளது. இதனால் எரங்க வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுளளார்.

29 வயதாகும் எரங்க இலங்கை அணிக்காக தலா 19 டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டி, 3 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். டெஸ்ட் போட்டியில் 57 விக்கெட்டுகள் வீழத்தியுள்ளார் என்பது முக்கிய அம்சமாகும்.

மேலும் விளையாட்டு செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்