மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டுக் கழகத்தின் வெளிநாடுவாழ் அங்கத்துவர்களின் உதவியோடு முதல் முறையாக ஒழுங்கு செய்யப்பட்ட EPP T20 கிரிக்கெட் திருவிழா மிகவும் கோலகலமாக நிறைவுக்கு வந்திருக்கின்றது.
டிசம்பர் மாதம் 27, 28 மற்றும் 29 ஆம் திகதிகளில் மட்டக்களப்பு சிவானந்தா மைதானத்தில் நடைபெற்ற இந்த கிரிக்கெட் திருவிழா 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களுக்கான தொடராக அமைந்திருந்தது.
இந்திய தொடருக்கான இலங்கை T20I குழாம் வெளியானது!
இந்திய அணிக்கு எதிராக எதிர்வரும் 5ம் திகதி….
அதன்படி, இந்த கிரிக்கெட் திருவிழாவில் மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிவானந்தா வித்தியாலயம் மற்றும் EPP அணி ஆகியவற்றின் 13 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் பங்கெடுத்திருந்தன.
தொடர்ந்து தொடரின் குழுநிலைப் போட்டிகளின் முடிவுகளுக்கு அமைவாக மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியும், சிவானந்தா கல்லூரியும் இறுதிப் போட்டிக்கு தெரிவாகின.
சிவானந்தா கல்லூரி மைதானத்தில் கடந்த சனிக்கிழமை தொடரின் (29) இறுதிப் போட்டி இடம்பெற்றது. இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பாடிய சிவானந்தா கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 114 ஓட்டங்கள் பெற்றது.
இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 115 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய மட்டக்களப்பு மெதடிஸ்த கல்லூரி அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 102 ஓட்டங்கள் மட்டும் பெற்று இறுதிப் போட்டியில் 12 ஓட்டங்களால் தோல்வியினை தழுவியது.
இதனால், சிவானந்தா வீரர்கள் EPP கிரிக்கெட் தொடரின் சம்பியனாக தெரிவாகியது. இறுதிப் போட்டியின் சிறப்பாட்டக்காரராக சிவானந்தா அணியின் சாரூஜன் தெரிவாகினார்.
EPP கிரிக்கெட் தொடரின் தொடர் நாயகன் விருதினையும், சிறந்த துடுப்பாட்ட வீரருக்குமான விருதினை EPP அணி வீரரான திவ்யேஸ் வென்றதோடு, சிறந்த பந்துவீச்சாளர் விருதை துவாரகன் பெற்றுக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<