இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் சுழல் பந்துவீச்சாளர்களை துவம்சம் செய்து ஒருநாள் அரங்கில் வரலாற்று சாதனை படைத்துள்ளார். மேலும் உலகக்கிண்ண தொடரிலும், இங்கிலாந்து அணிக்கும் சாதனை படைக்க உதவி புரிந்துள்ளார்.
உலகக்கிண்ண தொடரின் 24 ஆவது லீக் போட்டி தற்சமயம் இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் மென்செஸ்டரில் நடைபெற்று வருகிறது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
இங்கிலாந்து ஆடுகளங்கள் குறித்து அதிருப்தியடையும் சங்கக்கார
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் ஒவ்வொரு மைதானங்களிலும் மாறுபட்ட ஆடுகளங்கள்…
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 397 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதில் இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் அபாரமான முறையில் துடுப்பெடுத்தாடி வெறும் 71 பந்துகளுக்கு முகங்கொடுத்து 148 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார். இதில் 17 சிக்ஸர்களும், 4 பௌண்டரிகளும் உள்ளடங்கும்.
இன்றைய போட்டியில் இயன் மோர்கன் விளாசிய 17 சிக்ஸர்களின் மூலம் உலக சாதனை ஒன்றை படைத்துள்ளார். ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு துடுப்பாட்ட வீரர் இன்னிங்ஸ் ஒன்றில் பெற்றுக்கொண்ட அதிக சிக்ஸர்கள் என்ற ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடித்து ஒருநாள் அரங்கில் உலக சாதனை படைத்துள்ளார் இயன் மோர்கன்.
குறித்த சாதனையை இதற்கு முன்னர் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக 16 சிக்ஸர்களை விளாசி 209 ஓட்டங்களை குவித்து சாதனை நிகழ்த்தியிருந்தார். தற்போது இந்த சாதனையே இயன் மோர்கனினால் முறியடிக்கப்பட்டுள்ளது.
மேலும் தென்னாபிரிக்க வீரர் ஏபி டி வில்லியர்ஸ் 2015 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராகவும், மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெய்ல் 2015 ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிராகவும் தலா 16 சிக்ஸர்களை விளாசி அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றனர். அத்துடன் 2011 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஷேன் வொட்சன் 15 சிக்ஸர்களை விளாசியமை பட்டியலில் இவர்களுக்கு அடுத்ததாக காணப்படுகின்றது.
அத்துடன் இயன் மோர்கன் இன்று (18) ஆப்கான் அணிக்கு எதிராக உலகக்கிண்ண தொடரில் அடித்த சதத்தின் மூலம், உலகக்கிண்ண தொடரில் வேகமாக (குறைந்த பந்துகளில்) சதமடித்த வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார்.
உலகக் கிண்ண வெற்றிக்கு இலங்கை தரப்பு என்ன செய்ய வேண்டும்?
இலங்கை அணி, 1996ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகக் கிண்ணத்தை வெல்லும் போது அதன்…
2011 ஆம் ஆண்டு அயர்லாந்து வீரர் கெவின் ஓ பிரைன் 50 பந்துகளில் அடித்த சதம் குறித்த பட்டியலில் முதலிடத்தில் காணப்படுகின்றது.
உலகக்கிண்ண தொடரில் வேகமாக சதமடித்த வீரர்கள் பட்டியல்.
- கெவின் ஓ பிரைன் (அயர்லாந்து) 2011 – 50 பந்துகள்
- கிளேன் மெக்ஸ்வெல் (அவுஸ்திரேலியா) 2015 – 51 பந்துகள்
- ஏபி டி வில்லியர்ஸ் (தென்னாபிரிக்கா) 2015 – 52 பந்துகள்
- இயன் மோர்கன் (இங்கிலாந்து) 2019 – 57 பந்துகள்
- மெத்யூ ஹெய்டன் (அவுஸ்திரேலியா) 2007 – 66 பந்துகள்
இதேவேளை இயன் மோர்கன் அடித்த 17 சிக்ஸர்களின் உதவியுடன் இங்கிலாந்து அணியும் அணி என்ற ரீதியில் சாதனை படைத்துள்ளது. ஒருநாள் சர்வதேச அரங்கில் இன்னிங்ஸ் ஒன்றில் ஒரு அணி அடித்த அதிக சிக்ஸர்கள் என்ற சாதனையும் இங்கிலாந்து அணியால் படைக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் அரங்கில் ஒரு அணி இன்னிங்ஸில் பெற்ற அதிக சிக்ஸர்கள் பட்டியல்
- 25 சிக்ஸர்கள் இங்கிலாந்து (2019) எதிர் ஆப்கானிஸ்தான் (இன்றைய போட்டி)
- 24 சிக்ஸர்கள் இங்கிலாந்து (2019) எதிர் மேற்கிந்திய தீவுகள்
- 23 சிக்ஸர்கள் மேற்கிந்திய தீவுகள் (2019) எதிர் இங்கிலாந்து
- 22 சிக்ஸர்கள் நியூசிலாந்து (2014) எதிர் மேற்கிந்திய தீவுகள்
- 22 சிக்ஸர்கள் மேற்கிந்திய தீவுகள் (2019) எதிர் இங்கிலாந்து
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<