பிரீமியர் லீக்: நடப்புச் சம்பியன் சிட்டி மற்றும் லிவர்பூல் அணிகளுக்கு உறுதியான வெற்றி

296

உலகின் முன்னணி கால்பந்து தொடர்களில் ஒன்றான இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து தொடரில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்ற முக்கிய போட்டிகளின் விபரம் வருமாறு,

லிவர்பூல் எதிர் வெஸ்ட் ஹார்ம் யுனைடெட்

முஹமட் சலாஹ்வின் ஆரம்ப கோலுடன் வெஸ்ட் ஹார்முக்கு எதிராக தனது பிரீமியர் லீக் ஆரம்ப போட்டியில் லிவர்பூல் அணி 4-0 என பெரும் வெற்றியை பெற்றது. இதன்போது லிவர்பூல் அணிக்காக செனகல் வீரர் சார்டியோ மானே இரட்டை கோலை புகுத்தினார்.

லிவர்பூல் அணி 1932 தொடக்கம் லீக் போட்டி வரலாற்றில் தனது ஆரம்பப் போட்டியில் பெற்ற மிகப்பெரிய வெற்றியாக இது பதிவானது.

முன்னணி அணிகளின் வெற்றியுடன் ஆரம்பமான பீரீமியர் லீக்

27 ஆவது பருவத்திற்கான இங்கிலாந்து பிரீமியர் லீக் …

லவர்பூலின் ஆன்பீல்ட் அரங்கில் நடைபெற்ற போட்டியின் 19 ஆவது நிமிடத்தில் அன்ட்ரூ ரொபட்சன் வழங்கிய பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு மிக நெருக்கமான தூரத்தில் இருந்து எகிப்தைச் சேர்ந்த முன்கள வீரர் முஹமட் சலாஹ் கோலாக மாற்றினார்.

இதனைத் தொடர்ந்து மானே 45+2 மற்றும் 53 ஆவது நிமிடங்களில் பெற்ற கோல்கள் மூலம் லிவர்பூல் அணி 3-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் டேனியல் ஸ்ரூரிட்ஜ் கடைசி நேரத்தில் லிவர்பூல் சார்பில் மற்றொரு கோலை பெற்றார்.

குறிப்பாக கோல்காப்பாளர் ஒருவருக்கு இரண்டாவது மிகப்பெரிய தொகையான 114 மில்லியன் டொலர்களுக்கு வாங்கப்பட்ட பிரேசிலின் அலிசன் பெக்கர் லிவர்பூல் அணிக்காக தனது முதல் பிரீமியர் லீக் போட்டியில், எதிரணிக்கு எந்த கோலையும் விட்டுக்கொடுக்கவில்லை.

1989-90 பருவத்திற்கு பின்னர் பிரீமியர் லீக் பட்டம் வென்றிராத லிவர்பூல் கழகம் கடந்த பருவத்தில் சம்பியனான மன்செஸ்டர் சிட்டியை விடவும் 25 புள்ளிகள் பின்தங்கியமை குறிப்பிடத்தக்கது.      

எனினும் கடந்த பருவத்தில் சம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி வரை முன்னேறிய லிவர்பூல் பெரும் நம்பிக்கையுடனேயே இம்முறை தொடரை ஆரம்பித்துள்ளது.

மன்செஸ்டர் சிட்டி எதிர் ஆர்சனல்

நடப்புச் சம்பியனான மன்செஸ்டர் சிட்டி இரட்டை கோல்களை பெற்று ஆர்சனல் அணிக்கு எதிராக இம்முறை பிரீமியர் லீக் பருவத்தை உறுதியான வெற்றி ஒன்றுடன் ஆரம்பித்துள்ளது.  

லண்டனில் உள்ள ஆர்சனல் கழகத்தின் எமிரேட்ஸ் அரங்கில் நடைபெற்ற போட்டியில் அந்த அணி ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்த தவறியது.

பூட்டானிடமும் தோல்வியை சந்தித்த இலங்கை அணி

தெற்காசிய கால்பந்து சம்மேளனத்தின் (SAFF) …

போட்டியின் 14 ஆவது நிமிடத்தின் பெனால்டி எல்லையின் இடது மூலையில் இருந்து பந்தை பெற்ற ரஹீம் ஸ்டெர்லிங் இரு வீரர்களை முறியடித்து பந்தை கடத்திச் சென்று 20 யார்ட் தூரத்தில் இருந்து சிட்டி அணிக்காக அபார கோல் ஒன்றை பெற்றார். மத்தியகள வீரர் ஸ்டெர்லிங்கின் லீக் போட்டிகளில் 50ஆவது கோலாகவும் இது இருந்தது.

இந்த கோலுடன் 1-0 என முன்னிலை பெற்ற மன்செஸ்டர் சிட்டி அணி 65 ஆவது நிமிடத்தில் பெர்னாடோ சில்வா மூலம் இரண்டாவது கோலையும் பெற்றது. ஆர்சனல் அணி ஒரு கோல் கூட பெறாத நிலையில் மென்செஸ்டர் நம்பிக்கையுடன் இம்முறை பிரீமியர் லீக் தொடரை ஆரம்பித்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மன்செஸ்டர் யுனைடெடுக்கு பின்னர் பிரீமியர் லீக் பட்டத்தை தக்கவைத்துக் கொள்ளும் அணியாக சாதனை படைக்கும் நோக்குடனேயே சிட்டி அணி இம்முறை களமிறங்கியுள்ளது.

மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க…