ஆர்சனல் அணிக்கு எதிராக 2-0 என பின்னிலையில் இருந்த வட்போர்ட் அணி இரண்டாவது பாதியில் காண்பித்த அதிர்ச்சி கொடுக்கும் அபார ஆட்டம் காரணமாக போட்டியை 2-2 என போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது.
தனது சொந்த மைதானமான விகாரேஜ் ரோட் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (15) நடைபெற்ற இந்தப் போட்டியில் வட்போர்ட் ஆரம்பத்திலேயே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
நோர்விச் சிட்டியிடம் அதிர்ச்சி தோல்வியடைந்த மென்செஸ்டர் சிட்டி
இங்கிலாந்து ப்ரீமியர் லீக் தொடரின் முக்கிய சில …….
போட்டி ஆரம்பித்த விரைவிலேயே வட்போர்ட் வீரர்களான கெரார்ட் டவுடோபு மற்றும் டொம் கிளவலி ஆகியோர் எதிரணி கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோதும் அவர்களது முயற்சியை ஆர்சனல் போல்காப்பாளர் பேர்ன்ட் லெனோவினால் தடுக்க முடிந்தது.
இந்நிலையில் வருகை அணியான ஆர்சனல் செயற்பட ஆரம்பித்தது. டெனி செபலோன் பாதி தூரத்தில் பந்தை பறித்தெடுத்து சீட் கொலசினக்கிடம் கொடுக்க அவர் எதிரணி பெனால்டி பெட்டிக்குள் எடுத்துச் சென்றார். இதனைத் தொடர்ந்து அவுபமயங்கிடம் பந்தை பரிமாற்றியதன் மூலம் அவர் முதல் கோலை பெற்றார்.
போட்டியின் 21 ஆவது நிமிடத்தில் பெறப்பட்ட அந்த கோலை தொடர்ந்து ஆர்சனலின் ஆட்டம் வேகம் பெற்றது. இந்நிலையில் கபோன் நாட்டு வீரரான அவுபமயங் 10 நிமிடங்கள் கழித்து ஒசில் மற்றும் அயின்ஸ்லி மெயின்ட்லான் நில்ஸ் கடத்தி வந்த பந்தை வலைக்குள் செலுத்தி ஆசர்னல் அணியை 2-0 என முன்னிலை பெறச் செய்தார்.
முதல் பாதி: ஆர்சனல் 2 – 0 வட்போர்ட்
இரண்டாவது பாதியில் வட்போர்ட் ஒரு திருப்புமுனையான ஆட்டத்தை வெளிப்படத்த ஆரம்பித்தது. அந்த அணி எதிரணி பின்கள வீரர்களுக்கு அடிக்கடி சவால் கொடுப்பதை காண முடிந்தது.
இலங்கையுடன் போராடி வென்றது பலம் மிக்க வட கொரியா
எதிர்வரும் 2022ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ………
ஆர்சனல் பின்களத்தில் சொக்ரடிஸ் பபஸ்டதோபலஸ் செய்த தவறை சாதகமாக்கிக் கொண்ட டொம் கிளவலி 53 ஆவது நிமிடத்தில் வைத்து வட்போர்ட் அணிக்காக கோலை பெற்றார்.
இரண்டாவது பாதியில் தொடர்ச்சியான ஆதிக்கத்தை வெளிப்படுத்திய வட்போர்ட் போட்டியில் மேலும் 10 நிமிடங்களே எஞ்சியிருக்கும்போது இரண்டாவது கோலை பெற்று ஆட்டத்தை சமநிலைக்கு கொண்டுவந்தது. பெனால்டி பெட்டிக்குள் டேவிட், லுவிசினால் கீழே வீழ்த்தப்பட்டதைத் தொடர்ந்து கிடைத்த பெனால்டி மூலம் ரொபர்டோ பெரெய்ரா அந்த கோலை புகுத்தினார்.
எனினும் போட்டி நிறுத்தப்படும் தறுவாயில் அப்துலாயே டவுகோரேவுக்கு வட்போர்டை வெற்றிபெறச் செய்ய பொன்னான வாய்ப்பு ஒன்று கிட்டியது. எனினும் அவர் உதைத்த பந்து நேராக கோல்காப்பாளர் லெனோவிடம் சென்றது.
இந்த முடிவுடன் புள்ளிப் பட்டியலில் ஆர்சனல் ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டதோடு இன்னும் ஒரு வெற்றியைக் கூட பெறாத நிலையில் வட்போர்ட் தொடர்ந்து கடைசி இடத்தில் நீடிக்கிறது.
முழு நேரம்: ஆர்சனல் 2 – 2 வட்போர்ட்
கோல் பெற்றவர்கள்
ஆர்சனல் – அவுபமயங் 21’, 32’
வட்போர்ட் – டொம் கிளவலி 53’, ரொமர்டோ பெரெய்ரா 81’ (பெனால்டி)
>> மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<