சொந்த மண்ணில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ள இலங்கை மகளிர்

194

இலங்கை மகளிர் அணிக்கு எதிராக மூன்று ஐசிசி சம்பியன்ஷிப் ஒருநாள் போட்டிகள் மற்றும் மூன்று T20I  போட்டிகளில் விளையாடும் முகமாக, இங்கிலாந்து மகளிர் அணி எதிர்வரும் மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.

சமரி அட்டபத்துவின் அதிரடி ஆட்டம் வீண்; தென்னாபிரிக்க மங்கைகளிடம் வீழ்ந்த இலங்கை மங்கைகள்

தென்னாபிரிக்க மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் இலங்கை மகளிர்

தென்னாபிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த இலங்கை மகளிர் அணி, மூன்று T20I மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடியிருந்தது. இந்த தொடரை முற்றுமுழுதாக இழந்திருந்த இலங்கை அணி, வெற்றியின்றி நாடு திரும்பியது.

இந்த நிலையில், எதிர்வரும் மாதம் இலங்கை மகளிர் அணி, இங்கிலாந்து அணியை தங்களுடைய சொந்த மண்ணில் எதிர்கொள்ளவுள்ளது. எதிர்வரும் மாதம் 10ம் திகதி இலங்கையை வந்தடையவுள்ள இங்கிலாந்து அணி, 13ம் திகதி பி சரா ஓவல் மைதானத்தில் பயிற்சிப் போட்டியொன்றில் விளையாடவுள்ளது.

குறித்த பயிற்சிப் போட்டியை தொடர்ந்து இலங்கை மகளிர் மற்றும் தென்னாபிரிக்க மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி, சூரியவெவ மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் 16ம் திகதி (மார்ச்) ஆரம்பமாகவுள்ளதுடன், இரண்டாவது ஒருநாள் போட்டி 18ம் திகதி அதே மைதானத்தில் நடைபெறவுள்ளது. பின்னர் மூன்றாவதும், இறுதியுமான ஒருநாள் போட்டி கட்டுநாயக்க மேரியன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் 21ம் திகதி நடைபெறுவதுடன், ஒருநாள் தொடர் நிறைவுக்கு வருகின்றது.

இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர், 24ம் திகதி கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாவதுடன், இரண்டாவது போட்டி அதே மைதானத்தில் 26ம் திகதியும், இறுதி T20I  போட்டி, எஸ்.எஸ்.சி மைதானத்தில் 28ம் திகதியும் நடைபெறவுள்ளது.

இதேவேளை, இலங்கை மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதவுள்ள மூன்று ஒருநாள் போட்டிகளும் ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான போட்டிகளாக அமையவுள்ளன. இதுவரை இலங்கை அணி விளையாடியுள்ள ஐசிசி மகளிர் சம்பியன்ஷிப் தொடருக்கான 12 போட்டிகளில், ஒரு போட்டியில் மாத்திரமே வெற்றிபெற்றுள்ளதுடன், 11 தோல்விகளை சந்தித்து, புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தென்னாபிரிக்க மகளிர் அணியுடன் போராடித் தோற்ற இலங்கை மகளிர்

தென்னாபிரிக்க மகளிர் அணியுடனான முதலாவது ஒருநாள் போட்டியில் இலங்கை மகளிர் அணி கடைசி ஓவர் வரை போராடிய நிலையில்

போட்டி அட்டவணை

திகதி போட்டி மைதானம்
13 மார்ச் 2019 பயிற்சிப் போட்டி பி சரா ஓவல்
16 மார்ச் 2019 முதல் ஒருநாள் போட்டி சூரியவெவ
18 மார்ச் 2019 2வது ஒருநாள் போட்டி சூரியவெவ
21 மார்ச் 2019 3வது ஒருநாள் போட்டி கட்டுநாயக்க
24 மார்ச் 2019 முதல் T20I போட்டி கோல்ட்ஸ் CC
26 மார்ச் 2019 2வது T20I போட்டி கோல்ட்ஸ் CC
28 மார்ச் 2019 3வது T20I போட்டி

எஸ்.எஸ்.சி