Home Tamil பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட்; முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

பொதுநலவாய விளையாட்டு விழா கிரிக்கெட்; முதல் போட்டியில் இலங்கை மகளிர் தோல்வி

428

தற்போது நடைபெற்று வரும் 2022ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டு விழாவிற்குரிய T20 கிரிக்கெட் தொடரில் தமது முதல் போட்டியில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியிருக்கின்றது.

>> மேஜர் லீக் தொடரின் இறுதிப் போட்டிக்கு தெரிவான முதல் அணியாக இராணுவப்படை

பொதுநலவாய விளையாட்டு விழாவிற்காக மகளிர் T20 கிரிக்கெட் தொடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், இதில் குழு B இல் இடம்பிடித்துள்ள இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தமது முதல் போட்டியில் சனிக்கிழமை (30) பேர்மிங்கம் நகரில் இங்கிலாந்து வீராங்கனைகளுடன் மோதியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை மகளிர் அணித்தலைவி சமரி அத்தபத்து முதலில் துடுப்பாட்டத்தினை தெரிவு செய்தார்.

துடுப்பாட்டத்தை ஆரம்பித்த இலங்கை மகளிர் அணிக்கு சிறந்த ஆரம்பம் அமையாத நிலையில் தொடர்ச்சியாக விக்கெட்டுக்களை பறிகொடுத்த இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 106 ஓட்டங்களை மாத்திரம் எடுத்தது.

Photos – Commonwealth Games 2022 – Day 02

இலங்கை மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக நிலக்ஷி டி சில்வா 25 ஓட்டங்கள் எடுக்க, அணித்தலைவி சமரி அத்தபத்து உட்பட ஏனைய அனைத்து வீராங்கனைகளும் ஏமாற்றம் தந்திருந்தனர்.

இங்கிலாந்து மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் சோபி எக்லெஸ்டோன் 3 விக்கெட்டுக்களையும், இஸ்ஸி வொங் மற்றும் பிரேயா கெம்ப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதமும் சாய்த்தனர்.

தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 107 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி ஆரம்பத்தில் தடுமாற்றம் காண்பித்த போதும், அலீஸ் கேப்சி இன் அபார ஆட்டத்தோடு போட்டியின் வெற்றி இலக்கினை 17.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 109 ஓட்டங்களுடன் அடைந்தது.

>> இலங்கைக்கு முதல் பதக்கத்தை வென்றுக்கொடுத்த டிலங்க!

இங்கிலாந்து மகளிர் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அலீஸ் கேப்சி 45 பந்துகளுக்கு 4 பெளண்டரிகள் அடங்கலாக 44 ஓட்டங்கள் எடுத்தார்.

இலங்கை மகளிர் அணியின் பந்துவீச்சு சார்பில் இனோகா ரணவீர 3 விக்கெட்டுக்களையும், ஒசதி ரணசிங்க 2 விக்கெட்டுக்களையும் சாய்த்த போதும் அவர்கள் இருவரினதும் பந்துவீச்சு வீணாகி இருந்தது.

இதேநேரம் குழு B அணிகளுக்கான மற்றைய மோதலில் தென்னாபிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியினை நியூசிலாந்து 13 ஓட்டங்களால் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

இலங்கை – 106/9 (20) நிலக்ஷி டி சில்வா 25, சோபி எக்லெஸ்டோன் 25/3, இஸ்ஸி வோங் 10/2

இங்கிலாந்து – 109/5 (17.1) அலீஸ் கேப்சி 44, இனோகா ரணவீர 29/3, ஓசதி ரணசிங்க 20/2

முடிவு – இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றி

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<

Result


England Women
109/5 (17.1)

Sri Lanka Women
106/9 (20)

Batsmen R B 4s 6s SR
Vishmi Gunaratne lbw b Katherine Brunt 0 1 0 0 0.00
Chamari Athapaththu b Freya Kemp 10 18 2 0 55.56
Hasini Perera c & b Sophie Ecclestone 17 18 3 0 94.44
Nilakshi de Silva c Danni Wyatt b Issy Wong 25 28 4 0 89.29
Kavisha Dilhari c Alice Capsey b Freya Kemp 10 10 1 0 100.00
Anushka Sanjeewani c Amy Jones b Issy Wong 2 9 0 0 22.22
Ama Kanchana c Katherine Brunt b Sarah Glenn 6 7 1 0 85.71
Oshadi Ranasinghe c Amy Jones b Sophie Ecclestone 13 20 1 0 65.00
Sugandika Kumari b Sophie Ecclestone 4 7 0 0 57.14
Inoka Ranaweera not out 1 1 0 0 100.00
Achini Kulasuriya not out 1 1 0 0 100.00


Extras 17 (b 2 , lb 3 , nb 0, w 12, pen 0)
Total 106/9 (20 Overs, RR: 5.3)
Bowling O M R W Econ
Katherine Brunt 3 0 8 1 2.67
Issy Wong 3 1 10 2 3.33
Alice Capsey 1 0 11 0 11.00
Nat Sciver 3 0 14 0 4.67
Sophie Ecclestone 4 0 25 3 6.25
Sarah Glenn 4 0 19 1 4.75
Freya Kemp 2 0 14 2 7.00


Batsmen R B 4s 6s SR
Danni Wyatt c Ama Kanchana b Oshadi Ranasinghe 5 5 1 0 100.00
Sophia Dunkley b Oshadi Ranasinghe 17 16 3 0 106.25
Alice Capsey st Anushka Sanjeewani b Inoka Ranaweera 44 45 4 0 97.78
Nat Sciver lbw b Inoka Ranaweera 17 14 2 0 121.43
Amy Jones c Sugandika Kumari b Inoka Ranaweera 3 5 0 0 60.00
Maia Bouchier not out 21 18 2 0 116.67
Sophie Ecclestone not out 0 0 0 0 0.00


Extras 2 (b 0 , lb 0 , nb 0, w 2, pen 0)
Total 109/5 (17.1 Overs, RR: 6.35)
Bowling O M R W Econ
Sugandika Kumari 2 0 19 0 9.50
Oshadi Ranasinghe 4 0 20 2 5.00
Achini Kulasuriya 1 0 10 0 10.00
Inoka Ranaweera 4 0 29 3 7.25
Kavisha Dilhari 3 0 13 0 4.33
Ama Kanchana 1 0 7 0 7.00
Chamari Athapaththu 2.1 0 11 0 5.24