T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (23) இரவு நடைபெற்ற சுபர் 12 சுற்றின் 2ஆவது போட்டியில் நடப்புச் சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.
T20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று நடைபெற்ற 14ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியானது இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 55 ஓட்டங்களுக்குச் சுருண்டது. T20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3ஆவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.
>> வெற்றியுடன் T20 உலகக் கிண்ணத்தினை ஆரம்பித்த அவுஸ்திரேலியா
இதற்குமுன் T20 உலகக் கிண்ண வரலாற்றில் இலங்கைக்கு எதிரான இரண்டு போட்டிகளில் நெதர்லாந்து பெற்ற 39 ஓட்டங்கள் (2104), 44 ஓட்டங்களைப் (2021) பெற்று முதலிரண்டு இடங்களில் உள்ளது.
அத்துடன், T20 உலகக் கிண்ண வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் பதிவுசெய்த மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையும் இதுவாகும்.
மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கிறிஸ் கெயில் மாத்திரம் அதிகபட்சமாக 13 ஓட்டங்களைப் பெற்றுக்கொள்ள, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.
இங்கிலாந்து அணி தரப்பில் 2.2 ஓவர்களை வீசிய ஆடில் ரஷித் 2 ஓட்டங்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி T20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவுசெய்தார்.
>> சுபர் 12 சுற்று குழு 1 அணிகளின் நிலை எவ்வாறு உள்ளன?
அத்துடன், டைமல் மில்ஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.
அதன்பின் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
அந்த அணியின் ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் 11 ஓட்டங்களையும், ஜொன்னி பேர்ஸ்டோவ் 9 ஓட்டங்களையும், மொயின் அலி 3 ஓட்டங்களையும், லியாம் லிவிங்ஸ்டன் ஒரு ஓட்டத்தையும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.
இருப்பினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
>> பங்களாதேஷிற்கு எதிரான போட்டியை தவறவிடும் மஹீஷ் தீக்ஷன
இறுதியில் இங்கிலாந்து அணி, 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களை எடுத்தது.
இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி, முதல் முறையாக T20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.
இந்தப் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய இங்கிலாந்து வீரர் மொயின் அலிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
போட்டியின் சுருக்கம்
மேற்கிந்திய தீவுகள் – 55/10 (14.2) – கிறிஸ் கெயில் 13, ஆடில் ரஷித் 2/4, மொயின் அலி 17/2, டைமல் மில்ஸ் 17/2
இங்கிலாந்து அணி – 56/4 (8.2) – ஜோஸ் பட்லர் 24*, ஜேசன் ரோய் 11, அகீல் ஹொசைன் 24/2
முடிவு – இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுக்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lendl Simmons | c Liam Livingstone b Moeen Ali | 3 | 7 | 0 | 0 | 42.86 |
Evin Lewis | c Moeen Ali b Chris Woakes | 6 | 5 | 0 | 1 | 120.00 |
Chris Gayle | c Dawid Malan b Tymal Mills | 13 | 13 | 3 | 0 | 100.00 |
Shimron Hetmyer | c Eoin Morgan b Moeen Ali | 9 | 9 | 2 | 0 | 100.00 |
Dwayne Bravo | c Jonny Bairstow b Chris Jordan | 5 | 5 | 1 | 0 | 100.00 |
Nicholas Pooran | c Jos Buttler b Tymal Mills | 1 | 9 | 0 | 0 | 11.11 |
Kieron Pollard | c Jonny Bairstow b Adil Rashid | 6 | 14 | 0 | 0 | 42.86 |
Andre Russell | b Adil Rashid | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Akeal Hosein | b | 6 | 13 | 0 | 0 | 46.15 |
Obed McCoy | c Jason Roy b Adil Rashid | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Ravi Rampaul | b Adil Rashid | 3 | 8 | 0 | 0 | 37.50 |
Extras | 3 (b 0 , lb 0 , nb 0, w 3, pen 0) |
Total | 55/10 (14.2 Overs, RR: 3.84) |
Fall of Wickets | 1-8 (1.3) Evin Lewis, 2-9 (2.2) Lendl Simmons, 3-27 (4.4) Shimron Hetmyer, 4-31 (5.6) Chris Gayle, 5-37 (7.2) Dwayne Bravo, 6-42 (8.5) Nicholas Pooran, 7-44 (10.1) Andre Russell, 8-49 (12.1) Kieron Pollard, 9-49 (12.2) Obed McCoy, 10-55 (14.2) Ravi Rampaul, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Moeen Ali | 4 | 1 | 17 | 2 | 4.25 | |
Chris Woakes | 2 | 0 | 12 | 1 | 6.00 | |
Tymal Mills | 4 | 0 | 17 | 2 | 4.25 | |
Chris Jordan | 2 | 0 | 7 | 1 | 3.50 | |
Adil Rashid | 2.2 | 0 | 2 | 4 | 0.91 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | c Chris Gayle b Ravi Rampaul | 11 | 10 | 0 | 1 | 110.00 |
Jos Buttler | b | 24 | 22 | 3 | 0 | 109.09 |
Jonny Bairstow | c & b Akeal Hosein | 9 | 6 | 2 | 0 | 150.00 |
Moeen Ali | run out (Evin Lewis) | 3 | 4 | 0 | 0 | 75.00 |
Liam Livingstone | c & b Akeal Hosein | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Eoin Morgan | b | 7 | 7 | 1 | 0 | 100.00 |
Extras | 1 (b 0 , lb 0 , nb 1, w 0, pen 0) |
Total | 56/4 (8.2 Overs, RR: 6.72) |
Fall of Wickets | 1-21 (3.1) Jason Roy, 2-30 (4.1) Jonny Bairstow, 3-36 (5.2) Moeen Ali, 4-39 (6.1) Liam Livingstone, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Akeal Hosein | 4 | 0 | 24 | 2 | 6.00 | |
Ravi Rampaul | 2 | 0 | 14 | 1 | 7.00 | |
Obed McCoy | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
Kieron Pollard | 0.2 | 0 | 6 | 0 | 30.00 |