நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2021 T20 உலகக் கிண்ணத்தின் முதல் அரையிறுதிப்போட்டியில், டார்லி மிச்சல் மற்றும் ஜிம்மி நீஷமின் அதிரடி துடுப்பாட்டத்தின் உதவியுடன் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று முதன்முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இங்கிலாந்து அணி நிர்ணயித்த 167 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், டெவோன் கொன்வே, டார்லி மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷத்தின் அதிரடி துடுப்பாட்டத்தால் வெற்றியை பதிவுசெய்தது.
>>LPL வீரர்கள் ஏலம் தொடர்பில் விமர்சனம் செய்துள்ள மஹேல ஜயவர்தன
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்ஸன், முதலில் துடுப்பெடுத்தாடும் வாய்ப்பை இங்கிலாந்து அணிக்கு வழங்கியிருந்தார்.
அதன் அடிப்படையில் களமிறங்கிய இங்கிலாந்து அணியில், உபாதைக்கு முகங்கொடுத்திருந்த ஜேசன் ரோய் நீக்கப்பட்டிருந்த நிலையில், அவருக்கு பதிலாக செம் பில்லிங்ஸ் இணைக்கப்பட்டார். இந்தநிலையில், இங்கிலாந்து அணியில் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோவ் ஆகியோர் பிரகாசிக்க தவறியிருந்தனர்.
எவ்வாறாயினும், முக்கியமான போட்டிகளில் இங்கிலாந்து அணிக்கு சிறந்த பங்களிப்பை வழங்கிவரும் மொயீன் அலி, அபாரமாக ஆடி இந்த ஆண்டு T20 உலகக்கிண்ணத்தில் முதல் அரைச்சதத்தை பதிவுசெய்ய, டேவிட் மலான் சிறந்த இன்னிங்ஸ் ஒன்றை ஆடினார். இதன்காரணமாக இங்கிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 166 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
மொயீன் அலி இறுதிவரை ஆட்டமிழக்காமல் 37 பந்துகளில் 51 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, டேவிட் மலான் 30 பந்துகளில் 41 ஓட்டங்களையும், ஜோஸ் பட்லர் 29 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் நியூசிலாந்து அணிசார்பாக, ஜேம்ஸ் நீஷம், டிம் சௌதி, எடம் மில்ன் மற்றும் இஸ் சோதி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணிசார்பாக, கேன் வில்லியம்ஸன் மற்றும் மார்டின் கப்டில் ஆகிய அனுப துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பத்தில் ஆட்டமிழந்தாலும், டெவோன் கென்வோ, டார்லி மிச்சல் மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் அணியை மிகச்சிறந்த வெற்றிக்கு அழைத்துச்சென்றனர்.
ஒரு கட்டத்தில் டெவோன் கொன்வே 46 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இதன்காரணமாக, 13.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 107 ஓட்டங்களை நியூசிலாந்து அணி பெற்றிருந்ததுடன், 38 பந்துகளில் 70 ஓட்டங்கள் தேவைப்பட்டது. எனினும், அதன் பின்னர் களமிறங்கிய ஜேம்ஸ் நீஷம் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டார்லி மிச்சலுடன் இணைந்து அதிரடியாக ஆடினார்.
இதில், ஜேம்ஸ் நீஷம் 11 பந்துகளில் 27 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, நியூசிலாந்து அணியின் வெற்றிவாய்ப்பு அதிகரித்தது. எனினும், டார்லி மிச்சல் ஆரம்பத்திலிருந்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்று, 47 பந்துகளில் 72 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, 19 ஓவர்கள் நிறைவில், 5 விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி வெற்றியிலக்கை அடைந்தது.
>>பொலிஸ், குருநாகல் இளையோர் அணிகள் வெற்றி
நியூசிலாந்து அணி 2019ம் ஆண்டு உலகக்கிண்ண இறுதிப்போட்டியில், இங்கிலாந்து அணியிடம் தோல்வியடைந்து, கிண்ணத்தை தவறவிட்டது. எனினும், இம்முறை அதிக எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடைபெற்ற இந்தப்போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றியை தக்கவைத்துக்கொண்டது. அதன்படி, நியூசிலாந்து அணி முதன்முறையாக T20 உலகக்கிண்ணத்தின் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதேவேளை, T20 உலகக்கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில், பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் நாளைய தினம் (11) மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jonny Bairstow | lbw b Ish Sodhi | 29 | 23 | 4 | 0 | 126.09 |
Jos Buttler | c Kane Williamson b Adam Milne | 13 | 17 | 2 | 0 | 76.47 |
Dawid Malan | c Devon Conway b Tim Southee | 41 | 30 | 4 | 1 | 136.67 |
Moeen Ali | not out | 51 | 37 | 2 | 2 | 137.84 |
Liam Livingstone | c Mitchell Santner b James Neesham | 17 | 10 | 1 | 1 | 170.00 |
Eoin Morgan | not out | 4 | 2 | 0 | 0 | 200.00 |
Extras | 11 (b 0 , lb 2 , nb 0, w 9, pen 0) |
Total | 166/4 (20 Overs, RR: 8.3) |
Fall of Wickets | 1-37 (5.1) Jos Buttler, 2-53 (8.1) Jonny Bairstow, 3-116 (15.2) Dawid Malan, 4-156 (19.2) Liam Livingstone, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tim Southee | 4 | 0 | 24 | 1 | 6.00 | |
Trent Boult | 4 | 0 | 40 | 0 | 10.00 | |
Adam Milne | 4 | 0 | 31 | 1 | 7.75 | |
Ish Sodhi | 4 | 0 | 32 | 1 | 8.00 | |
Mitchell Santner | 1 | 0 | 8 | 0 | 8.00 | |
James Neesham | 1 | 0 | 7 | 0 | 7.00 | |
Glenn Phillips | 2 | 0 | 18 | 1 | 9.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | c Moeen Ali b Chris Woakes | 4 | 3 | 1 | 0 | 133.33 |
Daryl Mitchell | not out | 72 | 47 | 4 | 4 | 153.19 |
Kane Williamson | c Adil Rashid b Chris Woakes | 5 | 11 | 0 | 0 | 45.45 |
Devon Conway | st Jos Buttler b Liam Livingstone | 46 | 38 | 5 | 1 | 121.05 |
Glenn Phillips | c Sam Billings b Liam Livingstone | 2 | 4 | 0 | 0 | 50.00 |
James Neesham | c Eoin Morgan b Adil Rashid | 27 | 11 | 1 | 3 | 245.45 |
Mitchell Santner | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 10 (b 1 , lb 4 , nb 1, w 4, pen 0) |
Total | 167/5 (19 Overs, RR: 8.79) |
Fall of Wickets | 1-4 (0.3) Martin Guptill, 2-13 (2.4) Kane Williamson, 3-95 (13.4) Devon Conway, 4-107 (15.1) Glenn Phillips, 5-147 (17.6) James Neesham, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 4 | 1 | 36 | 2 | 9.00 | |
Chris Jordan | 3 | 0 | 31 | 0 | 10.33 | |
Adil Rashid | 4 | 0 | 39 | 1 | 9.75 | |
Mark Wood | 4 | 0 | 34 | 0 | 8.50 | |
Liam Livingstone | 4 | 0 | 22 | 2 | 5.50 |