கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 41ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து அணி, நியூசிலாந்து அணியை 119 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
டேர்ஹம் நகரில் நேற்று (3) ஆரம்பமான இப்போட்டி இரண்டு அணிகளுக்கும் கடைசி லீக் போட்டியாக அமைந்தது. போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்தார்.
Video – நம்பிக்கையுடன் நகரும் இலங்கை அணியின் அடுத்தக்கட்டம் என்ன? Cricket Kalam 21
இலங்கை கிரிக்கெட் அணியின் வெளியேற்றம், மேற்கிந்திய…..
இங்கிலாந்து அணி, தமது கடைசி உலகக் கிண்ண லீக் போட்டியில் இந்திய அணியினை தோற்கடித்ததன் மூலம், 10 புள்ளிகள் பெற்று தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உயிர்ப்பாக்கியிருந்தது.
எனவே, இங்கிலாந்து அணி தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்து கொள்ள நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை.
இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், லியம் ப்ளென்கட், ஆதில் ரஷீட், ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்
மறுமுனையில் தமது கடைசி இரண்டு உலகக் கிண்ண லீக் போட்டிகளிலும் தோல்வியினை தழுவி 11 புள்ளிகளுடன் காணப்படும் நியூசிலாந்து அணியும், தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பை இலகுவான முறையில் உறுதி செய்ய இப்போட்டியில் கட்டாய வெற்றியினை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது.
இப்போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அதன்படி, லொக்கி பெர்குஸன் மற்றும் இஷ் சோதி ஆகியோருக்கு பதிலாக டிம் சௌத்தி மற்றும் மேட் ஹென்ரி ஆகியோர் நியூசிலாந்து அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.
நியூசிலாந்து அணி – மார்டின் கப்டில், ஹென்ரி நிக்கோல்ஸ், கேன் வில்லியம்சன் (அணித்தலைவர்), ரொஸ் டெய்லர், டொம் லேதம், கொலின் டி கிரான்ட்ஹோம், ஜேம்ஸ் நீஷம், மிச்செல் சான்ட்னர், டிம் சௌத்தி, மேட் ஹென்றி, ட்ரென்ட் போல்ட்
இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை வழங்கினர். இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டுக்காக 123 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.
சதங்களில் சங்கக்காரவின் சாதனையை சமப்படுத்திய ரோஹித் சர்மா
ஒரே உலகக் கிண்ணத் தொடரில் நான்கு சதங்கள் அடித்து ரோஹித்…..
தொடர்ந்து இந்த உலகக் கிண்ணத் தொடரில் மூன்றாவது தடவையாக அரைச்சதம் பெற்ற, ஜேசன் ரோய் இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக மாறினார். ஜேம்ஸ் நீஷமின் பந்துவீச்சில் ஆட்டமிழந்த ஜேசன் ரோய் 8 பெளண்டரிகள் அடங்கலாக 61 பந்துகளில் 60 ஓட்டங்களை பெற்றிருந்தார். அதோடு, இந்த 60 ஓட்டங்கள் ஜேசன் ரோயின் 17ஆவது அரைச்சதமாகவும் மாறியது. இதனை அடுத்து புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஜோ ரூட் 24 ஓட்டங்களை மட்டும் பெற்று வெளியேறினார்.
எனினும், ஜொன்னி பெயர்ஸ்டோவ் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தொடர்ந்து இரண்டாவது முறையாக பெற்ற சதத்துடன், தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார். ஜொன்னி பெயர்ஸ்டோவின் சதத்துடன் இங்கிலாந்து அணி சிறந்த நிலைக்கு முன்னேறியது.
பின்னர் இங்கிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஓய்வறை நடந்த ஜொன்னி பெயர்ஸ்டோவ், 99 பந்துகளில் 15 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 106 ஓட்டங்களை குவித்துக் கொண்டார். இது பெயர்ஸ்டோவின் 11ஆவது ஒருநாள் சதமாகவும் அமைந்தது.
அடுத்ததாக இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன் மாத்திரமே இங்கிலாந்து அணியின் மத்திய வரிசையில் எதிர்பார்த்த அளவிற்கு சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தியிருந்தார்.
முடிவில் மோர்கனின் துடுப்பாட்ட உதவியோடு இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இயன் மோர்கன் 40 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 42 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதேநேரம் நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரென்ட் போல்ட், மேட் ஹென்ரி மற்றும் ஜேம்ஸ் நீஷம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.
தொடர்ந்து போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 306 ஓட்டங்களை 50 ஓவர்களில் பெற நியூசிலாந்து அணி பதிலுக்கு துடுப்பாடியது.
நியூசிலாந்து அணிக்கு ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த மார்டின் கப்டில் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஏமாற்றம் தந்தனர். ஹென்ரி நிக்கோல்ஸ் ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழக்க, மார்டின் கப்டில் 8 ஓட்டங்களை மாத்திரமே பெற்றார்.
தொடர்ந்து நியூசிலாந்து அணிக்காக அதன் முன்வரிசை, மத்திய வரிசையில் துடுப்பாடிய வீரர்களில் டொம் லேதமைத் தவிர ஏனைய அனைவரும் ஜொலிக்க தவறினர்.
குலசேகரவுடன் இணைந்து ஓய்வுபெற விரும்பும் மாலிங்க
இணைப்பு என்பது கிரிக்கெட்டில் எப்போதும் உள்ளது. ஆடுகளத்தில்…
இதனால், நியூசிலாந்து அணி 45 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 186 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது.
நியூசிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் டொம் லேதம் அவரின் 15ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு, 65 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை பெற்றிருந்தார். ஏனைய நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரேனும் கூட 30 ஓட்டங்களையேனும் தாண்டியிருக்கவில்லை.
அதேவேளை இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் அதன் வெற்றியினை மார்க் வூட் 34 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை கைப்பற்றி உறுதி செய்திருந்தார். இதேநேரம் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு கிறிஸ் வோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், லியம் ப்ளன்கட், ஆதில் ரஷீட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர்.
போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் ஜொன்னி பெயர்ஸ்டோவ் தெரிவாகியிருந்தார்.
இப்போட்டியில் கிடைத்த வெற்றியுடன் இங்கிலாந்து அணி, 12 புள்ளிகள் பெற்று உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு செல்லும் மூன்றாவது அணியாக மாறியிருக்கின்றது.
இதேநேரம் இப்போட்டியில் தோல்வியடைந்து தொடர்ந்தும் 11 புள்ளிகளுடன் உள்ள நியூசிலாந்து அணி, தமது உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினை இழக்கவில்லை.
அதன்படி, எதிர்வரும் வெள்ளிக்கிழமை (5) பங்களாதேஷுடன் இடம்பெறவுள்ள பாகிஸ்தான் அணியின் கடைசி லீக் போட்டியை வைத்தே நியூசிலாந்து அணியின் அரையிறுதி சுற்று வாய்ப்பு உறுதி செய்யப்படும்.
குறித்த போட்டியில் பாகிஸ்தான் அணி பாரிய ஓட்ட வித்தியாசம் ஒன்றில் வெற்றிபெறும் பட்சத்தில் நியூசிலாந்து அணியின் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் போகும் சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எனினும், பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட்டால் நியூசிலாந்து அணி, உலகக் கிண்ண அரையிறுதி சுற்றுக்கு நேரடியாக தெரிவாக முடியும்.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | c Mitchell Santner b Jimmy Neesham | 60 | 61 | 8 | 0 | 98.36 |
Jonny Bairstow | b Henry Nicholls | 106 | 99 | 15 | 1 | 107.07 |
Joe Root | c Tom Latham b Trent Boult | 24 | 25 | 1 | 0 | 96.00 |
Jos Buttler | c Kane Williamson b Trent Boult | 11 | 12 | 1 | 0 | 91.67 |
Eoin Morgan | c Mitchell Santner b Matt Henry | 42 | 40 | 5 | 0 | 105.00 |
Ben Stokes | c Matt Henry b Mitchell Santner | 11 | 27 | 0 | 0 | 40.74 |
Chris Woakes | c Kane Williamson b Jimmy Neesham | 4 | 11 | 0 | 0 | 36.36 |
Liam Plunkett | not out | 15 | 12 | 1 | 0 | 125.00 |
Adil Rashid | b Tim Southee | 16 | 12 | 1 | 0 | 133.33 |
Jofra Archer | not out | 1 | 1 | 0 | 0 | 100.00 |
Extras | 15 (b 4 , lb 4 , nb 0, w 7, pen 0) |
Total | 305/8 (50 Overs, RR: 6.1) |
Did not bat | Mark Wood, |
Fall of Wickets | 1-123 (18.4) Jason Roy, 2-194 (30.1) Joe Root, 3-206 (31.4) Jonny Bairstow, 4-214 (34.2) Jos Buttler, 5-248 (41.6) Ben Stokes, 6-259 (44.5) Chris Woakes, 7-272 (46.1) Eoin Morgan, 8-301 (49.3) Adil Rashid, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Mitchell Santner | 10 | 0 | 65 | 1 | 6.50 | |
Trent Boult | 10 | 0 | 56 | 2 | 5.60 | |
Tim Southee | 9 | 0 | 70 | 1 | 7.78 | |
Matt Henry | 10 | 0 | 54 | 2 | 5.40 | |
Colin de Grandhomme | 1 | 0 | 11 | 0 | 11.00 | |
Jimmy Neesham | 10 | 1 | 41 | 2 | 4.10 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | c Jos Buttler b Jofra Archer | 8 | 16 | 1 | 0 | 50.00 |
Henry Nicholls | lbw b Chris Woakes | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Kane Williamson | run out (Mark Wood) | 27 | 40 | 3 | 0 | 67.50 |
Ross Taylor | run out (Adil Rashid) | 28 | 42 | 2 | 0 | 66.67 |
Tom Latham | c Jos Buttler b Liam Plunkett | 57 | 65 | 5 | 0 | 87.69 |
Jimmy Neesham | b Mark Wood | 19 | 27 | 1 | 0 | 70.37 |
Colin de Grandhomme | c Joe Root b Ben Stokes | 3 | 13 | 0 | 0 | 23.08 |
Mitchell Santner | lbw b Mark Wood | 12 | 30 | 1 | 0 | 40.00 |
Tim Southee | not out | 7 | 16 | 0 | 0 | 43.75 |
Matt Henry | b Mark Wood | 7 | 13 | 0 | 0 | 53.85 |
Trent Boult | not out | 4 | 7 | 1 | 0 | 57.14 |
Extras | 14 (b 2 , lb 6 , nb 0, w 6, pen 0) |
Total | 186/9 (45 Overs, RR: 4.13) |
Fall of Wickets | 1-2 (0.5) Henry Nicholls, 2-14 (5.2) Martin Guptill, 3-61 (15.1) Kane Williamson, 4-69 (16.4) Ross Taylor, 5-123 (25.1) Jimmy Neesham, 6-128 (28.1) Colin de Grandhomme, 7-164 (38.3) Tom Latham, 8-166 (39.2) Mitchell Santner, 9-181 (43.4) Matt Henry, 10-186 (44.6) Trent Boult, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 8 | 0 | 44 | 1 | 5.50 | |
Jofra Archer | 7 | 1 | 17 | 1 | 2.43 | |
Liam Plunkett | 8 | 0 | 28 | 1 | 3.50 | |
Mark Wood | 9 | 0 | 34 | 3 | 3.78 | |
Joe Root | 3 | 0 | 15 | 0 | 5.00 | |
Adil Rashid | 5 | 0 | 30 | 1 | 6.00 | |
Ben Stokes | 5 | 0 | 10 | 1 | 2.00 |
முடிவு – இங்கிலாந்து அணி 119 ஓட்டங்களால் வெற்றி