கிரிக்கெட்டின் தாயகமான இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் நேற்று (14) நடைபெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொண்ட இங்கிலாந்து அணி சுப்பர் ஓவரின் மூலமாக கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது.
மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 241 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணியும் 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன் போட்டி சமநிலையாகியது. இதன் பின்னர் நடைபெற்ற சுப்பர் ஓவரிலும் இரண்டு அணிகளும் 15 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஐ.சி.சி விதிமுறையின்படி இன்னிங்ஸில் அதிக பௌண்டரிகளை பெற்ற இங்கிலாந்து அணி கிண்ணத்தை கைப்பற்றியது.
மஹேலவின் சாதனையை முறியடித்த வில்லியம்சன்
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் மாபெரும்………..
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் மார்ட்டின் கப்டிலை (19) இழந்த போதும், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் மற்றும் ஹென்ரி நிக்கோல்ஸ் ஆகியோர் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை குவித்தனர்.
நியூசிலாந்து அணி தங்களுடைய திட்டத்தை நிறைவேற்றும் வகையில் முதல் 10 ஓவர்களில் ஒரு விக்கெட்டினை இழந்த நிலையில் துடுப்பாட்டத்தை தொடர்ந்தது. இரண்டாவது விக்கெட்டுக்காக வில்லியம்சன் மற்றும் நிக்கோல்ஸ் ஆகிய இருவரும் 74 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், கேன் வில்லியம்சனின் (30) விக்கெட்டினை ப்ளென்கெட் கைப்பற்றினார்.
தொடர்ந்து களமிறங்கிய நியூசிலாந்து அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ரொஸ் டெய்லர் 15 ஓட்டங்களுடன் மார்க் வூட்டின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழக்க நியூசிலாந்து அணி தடுமாற்றத்தை எதிர்கொள்ள தொடங்கியது.
எனினும் முன்னணி துடுப்பாட்ட வீரர்களின் ஆட்டமிழப்பின் பின்னர், கடந்த போட்டிகளில் சிறந்த முறையில் பிரகாசிக்க தவறியிருந்த வீரர்கள் அணியின் ஓட்டக்குவிப்பை பலப்படுத்தினர். ஹென்ரி நிக்கோல்ஸ் மற்றும் டொம் லேத்தம் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை பெற, ஹென்ரி நிக்கோல்ஸ் தனது 9ஆவது ஒருநாள் அரைச் சதத்தையும், இந்த உலகக் கிண்ணத்தில் தன்னுடைய முதல் அரைச் சதத்தையும் பெற்று 55 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவருக்கு அடுத்தபடியாக டொம் லேத்தம் இறுதிக்கட்டம் வரை போராடி 47 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க மறுமுனையில் ஜேம்ஸ் நீஷம் (19) மற்றும் கொலின் டி கிரெண்டோம் (16) ஆகியோர் துடுப்பாட்டத்தில் ஓரளவு பங்கை வழங்க நியூசிலாந்து அணி 40 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 241 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பந்துவீச்சில் க்ரிஸ் வோர்க்ஸ் மற்றும் லியம் பிளங்கட் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
தற்போதைய ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கு மிகப் பெரிய வெற்றி இலக்கு இல்லாவிட்டாலுமு், உலகக் கிண்ணம் போன்ற மிக முக்கியமான மற்றும் அழுத்தத்திற்கு மத்தியிலான இறுதிப் போட்டியொன்றில் இந்த வெற்றியிலக்கு சவால் மிக்கதாகவே இருக்கும்.
அப்படியான வெற்றியிலக்கினை நோக்கிய இங்கிலாந்து அணி, ஆரம்பத்தில் தடுமாறிய போதும், பென் ஸ்டோக்ஸின் இறுதிவரையான போராட்டம் மற்றும் ஜொஸ் பட்லரின் அரைச்சதத்தின் ஊடாக வெற்றியிலக்கை நெருங்கிய போதும், இறுதியில் 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் போட்டி சமநிலையாகியதுடன், சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. குறித்த சுப்பர் ஓவரும் சமநிலையில் முடிவடைய அதிக பௌண்டரிகளை விளாசியிருந்த இங்கிலாந்து அணி வெற்றியை தக்கவைத்தது.
உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இரண்டு இலங்கையர்
இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் உலகக்……….
நியூசிலாந்து அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இங்கிலாந்து அணி மதிக்கத்தக்க ஆரம்பத்தை பெற்ற போதும், ஜேசன் ரோயின் (17) ஆட்டமிழப்பின் பின்னர் தடுமாற்றத்தை எதிர்கொண்டது.
எதிரணியின் ஓட்ட வேகத்தை கட்டுப்படுத்திய நியூசிலாந்து அணி, சீரான இடைவெளிகளில் முக்கியமான துடுப்பாட்ட வீரர்களின் விக்கெட்டுகளை வீழ்த்தியது. முறையே ஜோ ரூட் (7), ஜொனி பெயார்ஸ்டோவ் (36) மற்றும் அணித் தலைவர் இயன் மோர்கன் (9) ஆகியோர் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை பறிகொடுக்க, 86 ஓட்டங்களுக்கு இங்கிலாந்து அணி முதல் நான்கு துடுப்பாட்ட வீரர்களையும் இழந்தது.
ஆனால் அதன் பின்னர் ஜோடி சேர்ந்த இங்கிலாந்து அணியின் முன்னணி சகலதுறை வீரரான பென் ஸ்டோக்ஸ் மற்றும் விக்கெட்காப்பு துடுப்பாட்ட வீரர் ஜொஸ் பட்லர் ஆகியோர் மிகச்சிறந்த இணைப்பாட்டமொன்றின் ஊடாக நியூசிலாந்து அணிக்கு சவால் கொடுத்தனர். இவர்களின் இணைப்பாட்டம் இங்கிலாந்து அணியை வெற்றியை நோக்கி அழைத்துச் செல்ல, அரைச்சதம் கடந்திருந்த ஜொஸ் பட்லர் 59 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
இவரின் ஆட்டமிழப்பின் பின்னர் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டியதுடன் பென் ஸ்டோக்ஸ் (84*) இங்கிலாந்து அணியை இறுதிக்கட்டம் வரை அழைத்துச் சென்றார். குறிப்பாக அடுத்து வருகைதந்த ப்ளன்கெட் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணிக்கு இறுதி ஓவரில் 15 ஓட்டங்கள் தேவைப்பட்டன.
ட்ரென்ட் போல்ட் வீசிய இந்த இறுதி ஓவரில் முதல் இரண்டு பந்துகளுக்கு ஓட்டங்கள் பெறப்படாத நிலையில், 3ஆவது பந்தில் பென் ஸ்டோக்ஸ் சிக்ஸர் ஒன்றை விளாசினார். இதனையடுத்த பந்தை பௌண்டரி எல்லைக்கு அருகில் அடித்த பென் ஸ்டோக்ஸ் 2 ஓட்டங்களை பெற முற்பட்ட போது, களத்தடுப்பில் விடப்பட்ட தவறினால், விக்கெட் காப்பாளருக்கு வீசப்பட்ட பந்து பௌண்டரியை அடைய, இங்கிலாந்து அணிக்கு 6 ஓட்டங்கள் வழங்கப்பட்டது. பின்னர், இரண்டு பந்துகளில் மூன்று ஓட்டங்கள் என்ற நிலையில், குறித்த இரண்டு பந்துகளுக்கும் 2 ஓட்டங்களை மாத்திரமே பெறமுடிந்ததுடன், ரன்-அவுட் மூலமாக 2 விக்கெட்டுகளும் வீழ்த்தப்பட்டது.
இலங்கை வீரர்களின் சாதனையை முறியடித்த ஜேசன் ரோய் – பெயர்ஸ்டோ
தற்சமயம் நடைபெற்றுவரும் 12ஆவது ஐ.சி.சி…..
இதன் மூலம் இரண்டு அணிகளும் 50 ஓவர்கள் நிறைவில் 241 ஓட்டங்களை பெற்று சமநிலை பெற, உலகக் கிண்ண இறுதிப் போட்டி ஒன்றில் முதன்முறையாக சுப்பர் ஓவர் வழங்கப்பட்டது. குறித்த சுப்பர் ஓவரில் (ட்ரென்ட் போல்ட் வீசிய) முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோரின் உதவியுடன் 15 ஓட்டங்களை பெற்றுக்காள்ள, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணியும் 15 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. எனினும், ஐ.சி.சி விதிமுறைப்படி இன்னிங்ஸில் அதிக பௌண்டரிகளை பெற்ற இங்கிலாந்து அணிக்கு போட்டியின் வெற்றி வழங்கப்பட்டது.
இவ்வாறு 1992 ஆம் ஆண்டுக்கு பின்னர் உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற இங்கிலாந்து அணி தங்களுடைய கன்னி உலகக் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Martin Guptill | lbw b Chris Woakes | 19 | 18 | 2 | 1 | 105.56 |
Henry Nicholls | b Liam Plunkett | 55 | 77 | 4 | 0 | 71.43 |
Kane Williamson | c Jos Buttler b Liam Plunkett | 30 | 53 | 2 | 0 | 56.60 |
Ross Taylor | lbw b Mark Wood | 15 | 31 | 0 | 0 | 48.39 |
Tom Latham | c JM Vince b Chris Woakes | 47 | 56 | 2 | 1 | 83.93 |
Jimmy Neesham | c Joe Root b Liam Plunkett | 19 | 25 | 3 | 0 | 76.00 |
Colin de Grandhomme | c JM Vince b Chris Woakes | 16 | 28 | 0 | 0 | 57.14 |
Mitchell Santner | not out | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Matt Henry | b Jofra Archer | 4 | 2 | 1 | 0 | 200.00 |
Trent Boult | not out | 1 | 2 | 0 | 0 | 50.00 |
Extras | 30 (b 0 , lb 12 , nb 1, w 17, pen 0) |
Total | 241/8 (50 Overs, RR: 4.82) |
Did not bat | Lockie Ferguson, |
Fall of Wickets | 1-29 (6.2) Martin Guptill, 2-103 (22.4) Kane Williamson, 3-118 (26.5) Henry Nicholls, 4-141 (33.1) Ross Taylor, 5-173 (38.6) Jimmy Neesham, 6-219 (46.5) Colin de Grandhomme, 7-232 (48.3) Tom Latham, 8-240 (49.3) Matt Henry, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 9 | 0 | 37 | 3 | 4.11 | |
Jofra Archer | 10 | 0 | 42 | 1 | 4.20 | |
Liam Plunkett | 10 | 0 | 42 | 3 | 4.20 | |
Mark Wood | 10 | 1 | 49 | 1 | 4.90 | |
Adil Rashid | 8 | 0 | 39 | 0 | 4.88 | |
Ben Stokes | 3 | 0 | 20 | 0 | 6.67 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | c Tom Latham b Matt Henry | 17 | 20 | 3 | 0 | 85.00 |
Jonny Bairstow | b Lockie Ferguson | 36 | 55 | 7 | 0 | 65.45 |
Joe Root | c Tom Latham b Colin de Grandhomme | 7 | 30 | 0 | 0 | 23.33 |
Eoin Morgan | c Lockie Ferguson b Jimmy Neesham | 9 | 22 | 0 | 0 | 40.91 |
Ben Stokes | not out | 84 | 98 | 5 | 2 | 85.71 |
Jos Buttler | c Tim Southee b Lockie Ferguson | 59 | 60 | 4 | 0 | 98.33 |
Chris Woakes | c Tom Latham b Lockie Ferguson | 2 | 4 | 0 | 0 | 50.00 |
Liam Plunkett | c Trent Boult b Jimmy Neesham | 10 | 10 | 1 | 0 | 100.00 |
Jofra Archer | b Jimmy Neesham | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Adil Rashid | run out (Mitchell Santner) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Mark Wood | run out (Trent Boult) | 0 | 0 | 0 | 0 | 0.00 |
Extras | 17 (b 2 , lb 3 , nb 0, w 12, pen 0) |
Total | 241/10 (50 Overs, RR: 4.82) |
Fall of Wickets | 1-28 (5.4) Jason Roy, 2-59 (16.3) Joe Root, 3-71 (19.3) Jonny Bairstow, 4-86 (23.1) Eoin Morgan, 5-196 (44.5) Jos Buttler, 6-203 (46.1) Chris Woakes, 7-220 (48.3) Liam Plunkett, 8-227 (48.6) Jofra Archer, 9-240 (49.5) Adil Rashid, 10-240 (49.6) Mark Wood, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Trent Boult | 10 | 0 | 67 | 0 | 6.70 | |
Matt Henry | 10 | 2 | 40 | 1 | 4.00 | |
Colin de Grandhomme | 10 | 2 | 25 | 1 | 2.50 | |
Lockie Ferguson | 10 | 0 | 50 | 3 | 5.00 | |
Jimmy Neesham | 7 | 0 | 43 | 3 | 6.14 | |
Mitchell Santner | 3 | 0 | 11 | 0 | 3.67 |