இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் சோபிக்க தவறும் இந்திய அணி

332
© Getty

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பந்து வீச்சு மற்றும் துடுப்பாட்டம் என இரு துறைகளிலும் சிறப்பிக்கத் தவறிய இந்திய கிரிக்கெட் அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் தோல்வியை தழுவி தொடரில் 2-0 என பின்னிலையடைந்துள்ளது.

டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களில் உலகின் முதலிடத்தில் கோஹ்லி

துடுப்பாட்ட வீரர்களுக்கான உலக டெஸ்ட் தரவரிசையில்…

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதலாவது போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில் இரண்டாவது போட்டி கடந்த 9 ஆம் திகதி லோட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

இப்போட்டியில் இங்கிலாந்து அணி சார்பாக ஒல்லி போப் என்ற 20 வயதுடைய இளம் வீரர் தனது அறிமுக போட்டியில் விளையாடியிருந்தார். இங்கிலாந்து அணியின் சகலதுறை ஆட்டக்காரர் பென் ஸ்டோக்ஸ் விளையாடவில்லை என்ற காரணத்தால் அவருக்கு பதிலாக கிறிஸ் வோக்ஸ் இணைக்கப்பட்டிருந்தது விஷேட அம்சமாகும்.  

போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழை காரணமாக முழுமையாக கைவிடப்பட்டிருந்தது. தொடர்ந்து இரண்டாவது நாள், நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணித்தலைவர் ஜோ ரூட் களத்தடுப்பை தெரிவு செய்தார்.  மழை காரணமாக நிறுத்தி நிறுத்தி விளையாடப்பட்ட இரண்டாம் நாள் ஆட்டத்தில் ஜேம்ஸ் அன்டர்சனின் துள்ளியமான பந்து வீச்சின் மூலம் இந்திய அணியை 107 ஓட்டங்களுக்கு சுருட்டியது இங்கிலாந்து.

ஜேம்ஸ் அன்டர்சன் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்க விடயமாகும். இந்திய அணியின் இன்னிங்ஸ் முடிவோடு நிறைவுக்கு வந்தது இரண்டாம் நாள் ஆட்டம்.  

ஹெட்ரிக் சாதனையுடன் சதம் விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்த அன்ரோ ரசல்

மேற்கிந்திய தீவுகளில் மிகவும் கோலாகலமாக..

இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸிற்காக மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. இங்கிலாந்து அணியின் முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களுக்குள் ஆட்டமிழக்க 6 ஆவது விக்கெட்டுக்காக ஜோன்னி பைர்ஸ்டோவ் மற்றும் கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் 189 ஓட்டங்களை இணைப்பாட்டமாக சேர்த்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை உயர்த்தினர். ஜோன்னி பைர்டோவ் 93 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

மூன்றாம் நாள் நிறைவில் இங்கிலாந்து அணி 357 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணியை விட 250 ஓட்டங்கள் முன்னிலையில் இருந்தது. கிறிஸ் வோக்ஸ் தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

தொடர்ந்து நான்காவது நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி மொத்த ஓட்ட எண்ணிக்கை 396 ஆக இருந்த வேளை சாம் கரனின் ஆட்டமிழப்போடு தமது இன்னிங்ஸை நிறைவுக்கு கொண்டுவந்தது. கிறிஸ் வோக்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 137 ஓட்டங்களை பெற்றிருந்தார். இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஹர்திக் பான்டியா மற்றும் மொஹமட் சமி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

முதல் இன்னிங்ஸிற்காக 389 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் விளையாடிய இந்திய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 130 ஓட்டங்களை மட்டுமே பெற்று இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

உலகக் கிண்ண இலங்கை அணியில் மாலிங்கவுக்கு இடமுண்டு – ஹத்துருசிங்க

கிரிக்கெட் ஒழுக்க விதிமுறைகளை மீறிய…

இங்கிலாந்து அணி சார்பாக பந்து வீச்சில் ஜேம்ஸ் அன்டர்சன் மற்றும் ஸ்டுவர்ட் ப்ரோட் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீதம் வீழ்த்தினர். இப்போட்டியில் ஜேம்ஸ் அன்டர்சன் லோட்ஸ் மைதானத்தில் 100 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுக் கொண்டார்.  போட்டியின் ஆட்ட நாயகனாக கிறிஸ் வோக்ஸ் தெரிவானார்.

இரு அணிகளுக்குமிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

இந்தியா (முதல் இன்னிங்ஸ்) 107/10 – அஷ்வின் 29, கோஹ்லி 23, அன்டர்சன் 20/5, வோக்ஸ் 19/2

இங்கிலாந்து (முதல் இன்னிங்ஸ்) 396/7d – வோக்ஸ் 137*, பைர்ஸ்டோவ் 93, பான்டியா 66/3, சமி 96/3

இந்தியா (இரண்டாவது இன்னிங்ஸ்) 130/10 –  அஷ்வின் 33*, பான்டியா 26, அன்டர்சன் 23/4, ப்ரோட் 44/4

போட்டி முடிவு – இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ஓட்டங்களால் வெற்றி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<