உலகக் கிண்ணத் தொடரின் 12ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணியினை இங்கிலாந்து அணி 106 ஓட்டங்களால் தோற்கடித்துள்ளது.
கார்டிப் நகர மைதானத்தில் நேற்று (08) ஆரம்பமாகிய இப்போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இங்கிலாந்து அணிக்கு வழங்கியது.
இளையோர் உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் தடவையாக விளையாடவுள்ள ஜப்பான்
அடுத்த ஆண்டு (2020 இல்) தென்னாபிரிக்காவில் இடம்பெறவுள்ள 19 வயதுக்கு உட்பட்ட…..
இந்த உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்ற வீதம் இரண்டு அணிகளும் இப்போட்டியில் களமிறங்கின.
இங்கிலாந்து அணி இப்போட்டியில் தமது சுழல் பந்து சகலதுறை வீரரான மொயின் அலிக்கு ஓய்வு வழங்கி, லியம் ப்ளன்கெட்டினை உள்வாங்கியிருந்தது.
இங்கிலாந்து அணி – ஜேசன் ரோய், ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், லியம் ப்ளன்கெட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத்
இதேநேரம் பங்களாதேஷ் அணி, எவ்வித மாற்றங்களுமின்றி போட்டியில் களமிறங்கியது.
பங்களாதேஷ் அணி – தமிம் இக்பால், செளம்யா சர்க்கார், சகீப் அல் ஹஸன், முஸ்பிகுர் ரஹீம், மொஹமட் மிதுன், மஹ்மதுல்லாஹ், மொசாதீக் ஹொசைன், மொஹமட் சயீபுத்தின், மெஹிதி ஹஸன், மஷ்ரபி மொர்தஸா (அணித்தலைவர்), முஸ்தபிசுர் ரஹ்மான்
இதன் பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைய முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த ஜேசன் ரோய் மற்றும் ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஜோடி அட்டகாசமான ஆரம்பத்தை வழங்கியது.
இந்த ஆரம்ப ஜோடி இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டுக்காக 128 ஓட்டங்களை பகிர்ந்த நிலையில், இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆட்டமிழந்தார். ஆட்டமிழக்கும் போது ஜொன்னி பெயர்ஸ்டோவ் தனது 10ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 50 பந்துகளில் 6 பெளண்டரிகள் உடன் 51 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
இதன் பின்னர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்திற்கு ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் அதிரடியான ஆட்டம் மூலம் பெறுமதி சேர்த்தனர். இவர்களில் ஜேசன் ரோய் ஒருநாள் போட்டிகளில் தனது 9ஆவது சதத்தை பூர்த்தி செய்ய, ஜோஸ் பட்லர் ஒருநாள் போட்டிகளில் தனது 19ஆவது அரைச்சதத்தினை பெற்றார்.
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக உலக சாதனை படைத்த மிச்செல் ஸ்டார்க்
நொட்டிங்கம் நகரில் நேற்று (6) இடம்பெற்ற கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின்…..
இவர்கள் இருவரினதும் அதிரடியோடு இங்கிலாந்து அணி நிர்ணயம் செய்யப்பட்ட 50 ஓவர்களுக்கு 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 386 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
இப்போட்டியில் இங்கிலாந்து அணி பெற்றுக் கொண்ட இந்த மொத்த ஓட்டங்கள், உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் அவர்கள் ஒரு போட்டியில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாக அமைந்ததோடு, உலகக் கிண்ண வரலாற்றில் ஒரு போட்டியொன்றில் பெறப்பட்ட 7ஆவது அதிகூடிய ஓட்டங்களாகவும் மாறியது.
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பாக ஜேசன் ரோய் 121 பந்துகளில் 14 பெளண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்கள் அடங்கலாக 153 ஓட்டங்களை எடுத்திருந்தார். மறுமுனையில் ஜோஸ் பட்லர் 44 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பெளண்டரிகள் உடன் 64 ஓட்டங்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இவர்களோடு இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் 33 ஓட்டங்களைப் பெற்று சிறு பங்களிப்பினை வழங்கினார்.
பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சு சார்பில் மொஹமட் சயீபுத்தின் மற்றும் மெஹிதி ஹஸன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான கடும் சவால் நிறைந்த 387 ஒட்டங்களை 50 ஓவர்களில் அடைய பங்களாதேஷ் அணி தமது துடுப்பாட்டத்தை ஆரம்பம் செய்தது.
பங்களாதேஷ் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான தமிம் இக்பால் மற்றும் செளம்யா சர்க்கார் ஆகியோர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்த தவறினர். இவர்களில் செளம்யா சர்க்கார் 2 ஓட்டங்களுடன் பங்களாதேஷ் அணியின் முதல் விக்கெட்டாக ஓய்வறை நடக்க, தமிம் இக்பால் 19 ஓட்டங்கள் மாத்திரம் பெற்று ஆட்டமிழந்தார்.
இதன் பின்னர் தொடக்கத்திலேயே சரிவு ஒன்றினை எதிர்கொண்ட பங்களாதேஷ் அணிக்கு சகீப் அல் ஹஸன் மற்றும் முஸ்பிகுர் ரஹீம் ஆகியோர் பொறுமையான முறையில் துடுப்பாடி இணைப்பாட்டம் ஒன்றை கட்டியெழுப்பினர்.
மொத்தமாக 103 ஓட்டங்கள் வரையில் நீடித்த இந்த இணைப்பாட்டத்திற்குள் சகீப் அல் ஹஸன் இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற இரண்டாவது தொடர்ச்சியான அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார். தொடர்ந்து முஸ்பிகுர் ரஹீம் பங்களாதேஷ் அணியின் நான்காம் விக்கெட்டாக 44 ஓட்டங்களுடன் ஓய்வறை நடந்தார்.
டி வில்லியர்ஸின் மீள்வருகையை மறுத்த தென்னாபிரிக்கா?
தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியிலிருந்து ஓய்வுபெற்ற முன்னணி துடுப்பாட்ட வீரர்….
முஸ்பிகுர் ரஹீமினை அடுத்து சகீப் அல் ஹஸன் சதம் ஒன்றுடன் போராடிய போதிலும், வெற்றி இலக்கு பெரியது என்பதால் பங்களாதேஷ் அணிக்கு போட்டியில் வெற்றி பெற முடியாமல் போனது.
இறுதியில் 48.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த பங்களாதேஷ் அணி 280 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.
பங்களாதேஷ் அணியின் துடுப்பாட்டத்தில் தனது 8ஆவது ஒருநாள் சதத்தோடு சகீப் அல் ஹஸன் 12 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 119 பந்துகளில் 121 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்ததனர். அதேநேரம், மார்க் வூடும் 2 விக்கெட்டுக்களுடன் தனது தரப்பு வெற்றிக்கு உதவினார்.
போட்டியின் ஆட்ட நாயகனாக இங்கிலாந்து அணியின் ஜேசன் ரோய் தெரிவாகியிருந்தார். இப்போட்டியுடன் இம்முறைக்கான உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றியினை பதிவு செய்துள்ள இங்கிலாந்து அணி தமது அடுத்த மோதலில் மேற்கிந்திய தீவுகள் அணியினை அடுத்த வெள்ளிக்கிழமை (14) செளத்எம்ப்டன் நகரில் எதிர்கொள்ளவுள்ளது.
மறுமுனையில் பங்களாதேஷ் அணி தமது அடுத்த போட்டியில் இலங்கை வீரர்களை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (11) பிரிஸ்டல் நகரில் வைத்து சந்திக்கவுள்ளது.
ஸ்கோர் விபரம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jason Roy | c Mashrafe Mortaza b Mehidy Hasan Miraz | 153 | 121 | 14 | 5 | 126.45 |
Jonny Bairstow | c Mehidy Hasan Miraz b Mashrafe Mortaza | 51 | 50 | 6 | 0 | 102.00 |
Joe Root | b Mohammad Saifuddin | 21 | 29 | 1 | 0 | 72.41 |
Jos Buttler | c Soumya Sarkar b Mohammad Saifuddin | 64 | 44 | 2 | 4 | 145.45 |
Eoin Morgan | c Soumya Sarkar b Mehidy Hasan Miraz | 35 | 33 | 1 | 2 | 106.06 |
Ben Stokes | c Mashrafe Mortaza b Mustafizur Rahman | 6 | 7 | 0 | 0 | 85.71 |
Chris Woakes | not out | 18 | 8 | 0 | 2 | 225.00 |
Liam Plunkett | not out | 27 | 9 | 4 | 1 | 300.00 |
Extras | 11 (b 0 , lb 3 , nb 1, w 7, pen 0) |
Total | 386/6 (50 Overs, RR: 7.72) |
Fall of Wickets | 1-128 (19.1) Jonny Bairstow, 2-205 (31.3) Joe Root, 3-235 (34.4) Jason Roy, 4-330 (45.2) Jos Buttler, 5-340 (46.5) Eoin Morgan, 6-341 (47.1) Ben Stokes, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Shakib Al Hasan (vc) | 10 | 0 | 71 | 0 | 7.10 | |
Mashrafe Mortaza | 10 | 0 | 68 | 1 | 6.80 | |
Mohammad Saifuddin | 9 | 0 | 78 | 2 | 8.67 | |
Mustafizur Rahman | 9 | 0 | 75 | 1 | 8.33 | |
Mehidy Hasan Miraz | 10 | 0 | 67 | 2 | 6.70 | |
Mosaddek Hossain | 2 | 0 | 24 | 0 | 12.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Tamim Iqbal | c Eoin Morgan b Mark Wood | 19 | 29 | 1 | 0 | 65.52 |
Soumya Sarkar | b Jofra Archer | 2 | 8 | 0 | 0 | 25.00 |
Shakib Al Hasan (vc) | b Ben Stokes | 121 | 119 | 12 | 1 | 101.68 |
Mushfiqur Rahim | c Jason Roy b Liam Plunkett | 44 | 50 | 2 | 0 | 88.00 |
Mohammad Mithun | c Jonny Bairstow b Adil Rashid | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Mahmudullah | c Jonny Bairstow b Mark Wood | 28 | 41 | 1 | 1 | 68.29 |
Mosaddek Hossain | c Jofra Archer b Ben Stokes | 26 | 16 | 4 | 0 | 162.50 |
Mohammad Saifuddin | b Ben Stokes | 5 | 8 | 0 | 0 | 62.50 |
Mehidy Hasan Miraz | c Jonny Bairstow b Jofra Archer | 12 | 8 | 2 | 0 | 150.00 |
Mashrafe Mortaza | not out | 5 | 9 | 0 | 0 | 55.56 |
Mustafizur Rahman | c Jonny Bairstow b Jofra Archer | 0 | 3 | 0 | 0 | 0.00 |
Extras | 18 (b 0 , lb 8 , nb 0, w 10, pen 0) |
Total | 280/10 (48.5 Overs, RR: 5.73) |
Fall of Wickets | 1-8 (3.2) Soumya Sarkar, 2-63 (11.6) Tamim Iqbal, 3-169 (28.6) Mushfiqur Rahim, 4-170 (29.3) Mohammad Mithun, 5-219 (39.3) Shakib Al Hasan (vc), 6-254 (43.1) Mosaddek Hossain, 7-261 (44.6) Mahmudullah, 8-264 (45.4) Mohammad Saifuddin, 9-280 (48.2) Mehidy Hasan Miraz, 10-280 (48.5) Mustafizur Rahman, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 8 | 0 | 67 | 0 | 8.38 | |
Jofra Archer | 8.5 | 2 | 30 | 3 | 3.53 | |
Liam Plunkett | 8 | 0 | 36 | 1 | 4.50 | |
Mark Wood | 8 | 0 | 52 | 2 | 6.50 | |
Adil Rashid | 10 | 0 | 64 | 1 | 6.40 | |
Ben Stokes | 6 | 1 | 23 | 3 | 3.83 |
முடிவு – இங்கிலாந்து அணி 106 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<