Home Tamil உலகக் கிண்ண அரையிறுதிக்கு முதல் அணியாக தடம்பதித்த அவுஸ்திரேலியா

உலகக் கிண்ண அரையிறுதிக்கு முதல் அணியாக தடம்பதித்த அவுஸ்திரேலியா

299
Image Courtesy - ICC

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 32 ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்து வீரர்களை 64 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது. 

தற்போதைய லீக் போட்டிகள் உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதிச் சுற்றில் விளையாடும் அணிகளை தீர்மானிக்கும் ஆட்டங்களாக உள்ள காரணத்தினால் பலத்த எதிர்பார்ப்புக்களுடன் இப்போட்டி இன்று (25) லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் ஆரம்பமானது.

“பிடியெடுப்பை தவறவிட்டதால் பயந்துவிட்டேன்”: குசல் மெண்டிஸ்

இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு……….

போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன், முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை அவுஸ்திரேலிய அணிக்காக வழங்கினார்.

இந்த உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் காணப்படும் அவுஸ்திரேலிய அணி, இப்போட்டியில் இரண்டு மாற்றங்களை மேற்கொண்டிருந்தது. அந்தவகையில், அடம் சம்பா மற்றும் நதன் கோல்டர் நைல் ஆகியோருக்கு பதிலாக அவுஸ்திரேலிய அணியில் நேதன் லயன் மற்றும் ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். 

அவுஸ்திரேலிய அணி – டேவிட் வோர்னர், ஆரோன் பின்ச் (அணித் தலைவர்), உஸ்மான் கவாஜா, ஸ்டீவன் ஸ்மித், கிளென் மெக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டொய்னிஸ், அலெக்ஸ் கேரி, பெட் கம்மின்ஸ், மிச்செல் ஸ்டார்க், நதன் லயன், ஜேசன் பெஹ்ரென்ட்ரோப்

மறுமுனையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தாம் விளையாடிய 6 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ள இங்கிலாந்து அணி, கடந்த வாரம் இலங்கை அணியுடன் பெற்ற அதிர்ச்சி தோல்விக்கு பின்னர் இப்போட்டியில் நல்ல முடிவு ஒன்றை எதிர்பார்த்த வண்ணம் களமிறங்கியது. இப்போட்டிக்கான இங்கிலாந்து அணியில் மாற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை. 

இங்கிலாந்து அணி – ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித் தலைவர்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீட், மார்க் வூட்

பின்னர் நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக துடுப்பாட்டத்தை தொடங்கிய அவுஸ்திரேலிய அணிக்கு அதன் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக வந்த டேவிட் வோர்னர் மற்றும் அணித் தலைவர் ஆரோன் பின்ச் ஆகியோர் சிறந்த ஆட்டத்தினை வெளிப்படுத்தி உதவினர். இதனால், அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டுக்காக 123 ஓட்டங்கள் இணைப்பாட்டமாக பெறப்பட்டது.

இங்கிலாந்தை வீழ்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையோடு பந்து வீசினோம் – மாலிங்க

இங்கிலாந்ததை வீழ்த்த முடியும் என்ற………

தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியின் முதல் விக்கெட்டாக மொயின் அலியின் பந்துவீச்சில் டேவிட் வோர்னர் ஆட்டமிழந்தார். டேவிட் வோர்னர், இந்த உலகக் கிண்ணத் தொடரில் பெற்றுக் கொண்ட 3ஆவது அரைச்சதத்துடன் 61 பந்துகளில் 6 பெளண்டரிகள் உடன் 53 ஓட்டங்களை பெற்றிருந்தார். அத்தோடு இந்த 53 ஓட்டங்கள் வோர்னரின் 20 ஆவது ஒருநாள் அரைச்சதமாகவும் அமைந்தது.

டேவிட் வோர்னரை அடுத்து அவுஸ்திரேலிய அணியின் முன்வரிசை வீரர்களில் ஒருவராக வந்த உஸ்மான் கவாஜா 23  ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டமிழந்தார். எனினும், ஆரோன் பின்ச் இந்த உலகக் கிண்ணத் தொடரில் தான் பெற்றுக் கொண்ட 2 ஆவது சதத்துடன் தனது தரப்பிற்கு வலுச்சேர்த்தார். 

தொடர்ந்து அவுஸ்திரேலிய அணியினர், அவர்களது மூன்றாம் விக்கெட்டாக ஆரோன் பின்ச்சை பறிகொடுத்தனர். ஜொப்ரா ஆர்ச்சரின் வேகத்திற்கு இரையான ஆரோன் பின்ச், ஒருநாள் போட்டிகளில் தான் பெற்ற 15 ஆவது சதத்துடன் 11 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 116 பந்துகளில் 100 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பின்ச்சின் விக்கெட்டினை அடுத்து அவுஸ்திரேலிய அணி குறுகிய இடைவெளிகளில் விக்கெட்டுக்களை பறிகொடுத்து சிறிய தடுமாற்றம் ஒன்றை காட்டியது. எனினும், ஸ்டீவன் ஸ்மித் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோர் தமது ஆட்டத்தின் மூலம் அவுஸ்திரேலிய அணிக்கு பெறுமதி சேர்த்திருந்தனர்.

இவர்களின் துடுப்பாட்ட உதவியோடு அவுஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கும் 7 விக்கெட்டுக்களை இழந்து 285 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.

அவுஸ்திரேலிய அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த அலெக்ஸ் கேரி, 27 பந்துகளில் 5 பெளண்டரிகள் அடங்கலாக 35 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம், ஸ்டீவன் ஸ்மித்தும் 38 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணிக்காக பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, ஜொப்ரா ஆர்ச்சர், மொயின் அலி, பென் ஸ்டோக்ஸ் மற்றும் மார்க் வூட் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சுருட்டியிருந்தனர்.

இதன் பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 286 ஓட்டங்களை அடைய இங்கிலாந்து அணி தமது பதில் துடுப்பாட்டத்தை தொடங்கியது. 

சனத்தின் சாதனையை சமப்படுத்திய சகிப் அல் ஹசன்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற …..

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் வின்ஸ், ஓட்டம் எதனையும் பெறாமல் ஜேசன் பெஹ்ரென்ட்ரோபின் போல்ட் முறையில் ஆட்டமிழக்க ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ், 27 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இதன் பின்னர், இங்கிலாந்து அணித் தலைவர் இயன் மோர்கன் மற்றும் ஜோ ரூட் ஆகியோரும் மோசமான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தி ஏமாற்றம் தந்தனர். இதனால் இங்கிலாந்து அணி ஒரு கட்டத்தில் 53 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது. 

இந்நிலையில் இங்கிலாந்து அணிக்காக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜோஸ் பட்லர் ஆகியோர் நிதானமான முறையில் துடுப்பாடி இணைப்பாட்டம் ஒன்றினை உருவாக்க முயன்றனர். இருவரின் முயற்சியினாலும் இங்கிலாந்து அணியின் 5 ஆம் விக்கெட்டுக்காக 71 ஓட்டங்கள் பகிரப்பட்ட போதிலும் ஜோஸ் பட்லரின் விக்கெட்டோடு இந்த இணைப்பாட்டம் நிறைவுக்கு வந்தது. பட்லர் 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

ஜோஸ் பட்லரின் விக்கெட்டை அடுத்து பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் உடன் இணைந்து இங்கிலாந்து அணிக்காக போராடியிருந்த போதிலும், பென் ஸ்டோக்ஸின் விக்கெட் அவர் அரைச்சதம் பெற்ற நிலையில் பறிபோனது. 

பென் ஸ்டோக்ஸினை அடுத்து கிறிஸ் வோக்ஸ் அவரை அடுத்து வந்த மொயின் அலி ஆகியோரும் இங்கிலாந்து அணிக்காக ஜொலிக்க தவறிய நிலையில் இங்கிலாந்து அணி 44.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 221 ஓட்டங்களை மட்டும் பெற்று போட்டியில் தோல்வியடைந்தது. 

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் போராடியிருந்த பென் ஸ்டோக்ஸ் அவரின் 19 ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 115 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 89 ஓட்டங்களை பெற்றிருந்தார். இதேநேரம் கிறிஸ் வோக்ஸ் 26 ஓட்டங்களை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

அவுஸ்திரேலிய அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் வெற்றிக்கு உதவிய ஜேசன் பெஹ்ரென்ட்ரோப் 44 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை கைப்பற்றி ஒருநாள் போட்டிகளில் அவரின் சிறந்த பந்துவீச்சு பிரதியினை பதிவு செய்திருந்தார். அதேநேரம் மிச்செல் ஸ்டார்க் 4 விக்கெட்டுக்களை கைப்பற்றி அவுஸ்திரேலிய அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

எனது வெற்றிக்கு கடின உழைப்பும், அதிஷ்டமும் காரணம் – சகிப்

இம்முறை உலகக் கிண்ணத் தொடரில்……

இப்போட்டியின் வெற்றியோடு மொத்தமாக 12 புள்ளிகள் பெற்று உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தெரிவாகியுள்ள அவுஸ்திரேலிய அணி, தமது அடுத்த உலகக் கிண்ணப் லீக் போட்டியில் நியூசிலாந்து அணியினை எதிர்வரும் சனிக்கிழமை (29) இங்கிலாந்து அணியுடனான போட்டி நடைபெற்ற இதே லண்டன் லோர்ட்ஸ் மைதானத்தில் சந்திக்கின்றது.

மறுமுனையில் உலகக் கிண்ண அரையிறுதி வாய்ப்பினை தொடர்ந்தும் தக்கவைக்க தமது அடுத்த 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ள இங்கிலாந்து அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் இந்திய அணியினை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (30) பர்மிங்ஹமில் வைத்து சந்திக்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

Result


England
221/10 (44.4)

Australia
285/7 (50)

Batsmen R B 4s 6s SR
Aaron Finch c Chris Woakes b Jofra Archer 100 116 11 2 86.21
David Warner c Joe Root b Moeen Ali 53 61 6 0 86.89
Usman Khawaja b Ben Stokes 23 29 1 0 79.31
Steve Smith c Jofra Archer b Chris Woakes 38 34 5 0 111.76
Glenn Maxwell c Jos Buttler b Mark Wood 12 8 1 1 150.00
Marcus Stoinis run out () 8 15 1 0 53.33
 Alex Carey not out 38 27 5 0 140.74
Pat Cummins c Jos Buttler b Chris Woakes 1 4 0 0 25.00
Mitchell Starc not out 4 6 0 0 66.67


Extras 8 (b 0 , lb 4 , nb 0, w 4, pen 0)
Total 285/7 (50 Overs, RR: 5.7)
Fall of Wickets 1-123 (22.4) David Warner, 2-173 (32.2) Usman Khawaja, 3-185 (35.3) Aaron Finch, 4-213 (38.2) Glenn Maxwell, 5-228 (41.5) Marcus Stoinis, 6-250 (45.4) Steve Smith, 7-259 (47.1) Pat Cummins,

Bowling O M R W Econ
Chris Woakes 10 0 46 2 4.60
Jofra Archer 9 0 56 1 6.22
Mark Wood 9 0 59 1 6.56
Ben Stokes 6 0 29 1 4.83
Moeen Ali 6 0 42 1 7.00
Adil Rashid 10 0 49 0 4.90


Batsmen R B 4s 6s SR
JM Vince b Jason Behrendorff 0 2 0 0 0.00
Jonny Bairstow c Pat Cummins b Jason Behrendorff 27 39 5 0 69.23
Joe Root lbw b Mitchell Starc 8 9 2 0 88.89
Eoin Morgan c Pat Cummins b Mitchell Starc 4 7 1 0 57.14
Ben Stokes b Mitchell Starc 89 115 8 2 77.39
Jos Buttler c Usman Khawaja b Marcus Stoinis 25 27 2 0 92.59
Chris Woakes c Aaron Finch b Jason Behrendorff 26 34 2 0 76.47
Moeen Ali c  Alex Carey b Jason Behrendorff 6 9 1 0 66.67
Adil Rashid c Marcus Stoinis b Mitchell Starc 25 20 3 1 125.00
Jofra Archer c David Warner b Jason Behrendorff 1 4 0 0 25.00
Mark Wood not out 1 2 0 0 50.00


Extras 9 (b 1 , lb 5 , nb 0, w 3, pen 0)
Total 221/10 (44.4 Overs, RR: 4.95)
Fall of Wickets 1-1 (0.2) JM Vince, 2-15 (3.3) Joe Root, 3-26 (5.5) Eoin Morgan, 4-53 (13.5) Jonny Bairstow, 5-124 (27.2) Jos Buttler, 6-177 (36.6) Ben Stokes, 7-189 (39.3) Moeen Ali, 8-202 (41.3) Chris Woakes, 9-211 (43.3) Jofra Archer, 10-221 (44.4) Adil Rashid,

Bowling O M R W Econ
Jason Behrendorff 10 0 44 5 4.40
Mitchell Starc 8.4 1 44 4 5.24
Pat Cummins 8 1 41 0 5.12
Nathan Lyon 9 0 43 0 4.78
Marcus Stoinis 7 0 29 1 4.14
Glenn Maxwell 2 0 15 0 7.50