Home Tamil மோர்கனின் உலக சாதனையோடு இங்கிலாந்து அணி இலகு வெற்றி

மோர்கனின் உலக சாதனையோடு இங்கிலாந்து அணி இலகு வெற்றி

647
Image Courtesy - ICC

கிரிக்கெட் உலகக் கிண்ணத் தொடரின் 24ஆவது லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியினை இங்கிலாந்து 150 ஓட்டங்களால் இலகுவாக தோற்கடித்துள்ளது.

மன்செஸ்டர் நகரில் இன்று (18) ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணியின் தலைவர் இயன் மோர்கன், மைதான நிலைமைகள் கருதி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காக தெரிவு செய்து கொண்டார்.

ரோஹித் சர்மாவின் சாதனையை தகர்த்து வரலாற்று சாதனை படைத்த இயன் மோர்கன்

இங்கிலாந்து அணியின் தலைவர் இயன்…….

கடைசியாக தாம் விளையாடிய இந்த உலகக் கிண்ணத் தொடரின் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியினை தோற்கடித்த இங்கிலாந்து அணி, அதே உத்வேகத்துடன் இப்போட்டியில் இரண்டு மாற்றங்கள் மேற்கொண்ட வண்ணம் களமிறங்கியது.

அதன்படி ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜேசன் ரோய், லியம் ப்ளன்கட் ஆகியோருக்கு பதிலாக மொயின் அலீ, ஜேம்ஸ் வின்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணிக்குள் உள்வாங்கப்பட்டிருந்தனர்.

இங்கிலாந்து அணி – ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜேம்ஸ் வின்ஸ், ஜோ ரூட், இயன் மோர்கன் (அணித்தலைவர்), பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொயின் அலி, கிறிஸ் வோக்ஸ், ஆதில் ரஷீத், ஜொப்ரா ஆர்ச்சர், மார்க் வூட்

மறுமுனையில் இந்த உலகக் கிண்ணத் தொடரில் வெற்றிகள் எதனையும் பதிவு செய்யாத ஆப்கானிஸ்தான் அணி, மூன்று மாற்றங்களை மேற்கொண்டிருந்தது.

ஆப்கானிஸ்தான் அணியில் தவ்லாத் சத்ரான், நஜிபுல்லா சத்ரான் மற்றும் முஜீபுர் ரஹ்மான் ஆகியோர் அப்தாப் ஆலம், ஹமீட் ஹஸன், ஹஸ்ரத்துல்லா சஷாய் ஆகியோருக்கு பதிலாக உள்வாங்கப்பட்டிருந்தனர்.

ஆப்கானிஸ்தான் அணி – றஹ்மத் சாஹ், நூர் அலி சத்ரான், ஹஸ்மத்துல்லா சஹிதி, அஸ்கர் ஆப்கான், மொஹமட் நபி, இக்ராம் அலி, குல்படின் நயீப் (அணித்தலைவர்), நஜிபுல்லா சத்ரான், ரஷீத் கான், முஜிபுர் ரஹ்மான், தவ்லத் சத்ரான்

தொடர்ந்து நாணய சுழற்சி முடிவுகளுக்கு அமைவாக இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்தை ஜேம்ஸ் வின்ஸ், ஜொன்னி பெயர்ஸ்டோவ் ஆகியோர் ஆரம்பித்தனர்.

இங்கிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜேம்ஸ் வின்ஸ், 26 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக மாறி ஏமாற்றம் தந்த போதிலும் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான ஜொன்னி பெயர்ஸ்டோவ், புதிய துடுப்பாட்ட வீரராக வந்த ஜோ ரூட்டுடன் இணைந்து இங்கிலாந்து அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 120 ஓட்டங்களை பகிர்ந்தார்.

தொடர்ந்து ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் குல்படின் நயீப்பின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து இங்கிலாந்து அணியின் இரண்டாம் விக்கெட்டாக ஆட்டமிழந்த பெயர்ஸ்டோவ் 99 பந்துகளில் தன்னுடைய 11ஆவது ஒருநாள் அரைச்சதத்துடன் 3 சிக்ஸர்கள் மற்றும் 8 பெளண்டரிகள் அடங்கலாக 90 ஓட்டங்களை பெற்றிருந்தார்.

இலங்கை வீரர்களுக்கு மஹேல கூறும் அறிவுறை

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்……

பெயர்ஸ்டோவை அடுத்து களத்தில் நின்ற ஜோ ரூட், இங்கிலாந்து அணித்தலைவர் இயன் மோர்கன் ஆகியோர் தமது தரப்பின் மூன்றாம் விக்கெட்டுக்காக இமாலய இணைப்பாட்டம் ஒன்றை உருவாக்கினர். இரண்டு வீரர்களும் இங்கிலாந்து அணியின் இரண்டாம் விக்கெட்டுக்காக 189 ஓட்டங்களை பகிர்ந்தனர்.

இந்த இணைப்பாட்டத்திற்குள் இயன் மோர்கன் அவரது 13ஆவது ஒருநாள் சதத்தை அதிரடி ஆட்டம் மூலம் பெற, ஜோ ரூட் ஒருநாள் போட்டிகளில் 32ஆவது அரைச்சதத்தினை பூர்த்தி செய்தார்.

இந்த இரு வீரர்களதும் இணைப்பாட்டம் ஜோ ரூட்டின் விக்கெட்டோடு நிறைவுக்கு வந்தது. இங்கிலாந்து அணியின் மூன்றாம் விக்கெட்டாக ஜோ ரூட், 82 பந்துகளில் 5 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 88 ஓட்டங்களை குவித்திருந்தார்.

எனினும், இப்போட்டியில் மோர்கன் வெளிப்படுத்திய அதிரடி துடுப்பாட்டம் இங்கிலாந்து அணி பாரிய மொத்த ஓட்டங்களை பெறுவதற்கு போதுமாக இருந்தது.

அதன்படி, இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 397 ஓட்டங்களை குவித்துக் கொண்டது. இந்த 397 ஓட்டங்கள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி உலகக் கிண்ணத் தொடரில் பெற்ற அதிகூடிய ஓட்டங்களாகவும் அமைந்தது.

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டம் சார்பில் இயன் மோர்கன் வெறும் 71 பந்துகளில் 4 பெளண்டரிகள் மற்றும் 17 இமாலய சிக்ஸர்கள் அடங்கலாக 148 ஓட்டங்களை குவித்துக் கொண்டார். மோர்கன் இப்போட்டி மூலம் ஒருநாள் போட்டிகள் வரலாற்றில் இன்னிங்ஸ் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் பெற்ற வீரராகவும் உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இதேநேரம், மொயின் அலி வெறும் 9 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பெளண்டரி அடங்கலாக 31 ஓட்டங்கள் பெற்று ஆட்டமிழக்காமல் நின்று இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டத்திற்கு பங்களிப்பு வழங்கினார்.

ஆப்கானிஸ்தான் அணியின் பந்துவீச்சு சார்பில் அதன் தலைவர் குல்படின் நயீப் மற்றும் தவ்லத் சத்ரான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர்.

இதனை அடுத்து மிகவும் சவால் நிறைந்த போட்டியின் வெற்றி இலக்கான 398 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது.

ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் ஒருவராக வந்த நூர் அலி சத்ரான் ஓட்டங்கள் ஏதுமின்றி, இங்கிலாந்து அணியின் முதல் விக்கெட்டாக மாறினார்.

பங்களாதேஷுடான தோல்விக்குப் பிறகு நம்பிக்கையை கைவிட்ட ஹோல்டர்

பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில்…….

மறுமுனையில், வெற்றி இலக்கு பெரியது என்பதால் ஆப்கானிஸ்தான் அணியின் ஏனைய ஆரம்ப துடுப்பாட்ட வீரரான அதன் தலைவர் குல்படின் நயீப் அதிரடியான ஆட்டம் மூலம் ஓட்டங்கள் பெற முயன்றார். எனினும் அவரது விக்கெட் மார்க் வூடின் வேகத்திற்கு இரையானது. நயீப், 28 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 4 பெளண்டரிகள் அடங்கலாக 37 ஓட்டங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதன் பின்னர், ஆப்கானிஸ்தான் அணி மந்த கதியிலேயே தமது துடுப்பாட்டத்தை போட்டி முழுவதும் முன்னெடுத்தது.  இதனால், ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறைவுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வி அடைந்தது.

ஆப்கானிஸ்தான் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஹஷ்மதுல்லா சஹிதி அவரின் 9ஆவது ஒருநாள் அரைச்சதத்தோடு 5 பெளண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 76 ஓட்டங்களை பெற்று அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தார். இதேநேரம், றஹ்மத் ஷாஹ் 46 ஓட்டங்களையும், அஸ்கர் ஆப்கான் 44 ஓட்டங்களையும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ஜொப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்க்க, மார்க் வூட் 2 விக்கெட்டுக்களுடன் தனது தரப்பு வெற்றியினை உறுதி செய்தார்.

போட்டியின் ஆட்டநாயகனாக இங்கிலாந்து அணியின் தலைவரான இயன் மோர்கன் தெரிவு செய்யப்பட்டார்.

இந்த வெற்றியோடு, உலகக் கிண்ணத் தொடரில் நான்காவது வெற்றியோடு முன்னேறும் இங்கிலாந்து அணி தமது அடுத்த மோதலில் வெள்ளிக்கிழமை (21) இலங்கை அணியை லீட்ஸில் எதிர்கொள்கின்றது.

மறுமுனையில் மற்றுமொரு தோல்வியுடன் ஏமாற்றம் அடைந்துள்ள ஆப்கானிஸ்தான் அணி தமது அடுத்த உலகக் கிண்ண மோதலில் எதிர்வரும் சனிக்கிழமை (22) இந்திய அணியினை செளத்எம்ப்டன் நகரில் எதிர்கொள்கின்றது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<

ஸ்கோர் விபரம்

Result


England
397/6 (50)

Afghanistan
247/8 (50)

Batsmen R B 4s 6s SR
JM Vince c Mujeeb ur Rahman b Dawlat Zadran 26 31 3 0 83.87
Jonny Bairstow c & b Gulbadin Naib 90 99 8 3 90.91
Joe Root c Rahmat Shah b Gulbadin Naib 88 82 5 1 107.32
Eoin Morgan c Rahmat Shah b Gulbadin Naib 148 71 17 4 208.45
Jos Buttler c Mohammad Nabi b Dawlat Zadran 2 2 0 0 100.00
Ben Stokes b Dawlat Zadran 2 6 0 0 33.33
Moeen Ali not out 31 9 1 4 344.44
Chris Woakes not out 1 1 0 0 100.00


Extras 9 (b 0 , lb 1 , nb 1, w 7, pen 0)
Total 397/6 (50 Overs, RR: 7.94)
Fall of Wickets 1-44 (9.3) JM Vince, 2-164 (29.5) Jonny Bairstow, 3-353 (46.4) Joe Root, 4-359 (46.6) Eoin Morgan, 5-362 (47.4) Jos Buttler, 6-378 (47.4) Ben Stokes,

Bowling O M R W Econ
Mujeeb ur Rahman 10 0 44 0 4.40
Dawlat Zadran 10 0 85 3 8.50
Mohammad Nabi 9 0 70 0 7.78
Gulbadin Naib 10 0 68 3 6.80
Rahmat Shah 2 0 19 0 9.50
Rashid Khan 9 0 110 0 12.22


Batsmen R B 4s 6s SR
Noor Ali Zadran b Jofra Archer 0 7 0 0 0.00
Gulbadin Naib c Jos Buttler b Mark Wood 37 28 4 1 132.14
Rahmat Shah c Jonny Bairstow b Adil Rashid 46 74 3 1 62.16
Hashmatullah Shahidi b Jofra Archer 76 100 5 2 76.00
Asghar Afghan c Joe Root b Adil Rashid 44 48 3 2 91.67
Mohammad Nabi c Ben Stokes b Adil Rashid 9 7 0 1 128.57
Najibullah Zadran b Mark Wood 15 13 0 1 115.38
Rashid Khan c Jonny Bairstow b Jofra Archer 8 13 1 0 61.54
Ikram Alikhil not out 3 10 0 0 30.00
Dawlat Zadran not out 0 0 0 0 0.00


Extras 9 (b 0 , lb 1 , nb 0, w 8, pen 0)
Total 247/8 (50 Overs, RR: 4.94)
Fall of Wickets 1-4 (1.2) Noor Ali Zadran, 2-52 (1.2) Gulbadin Naib, 3-104 (24.5) Rahmat Shah, 4-198 (40.5) Asghar Afghan, 5-210 (42.4) Mohammad Nabi, 6-234 (45.5) Hashmatullah Shahidi, 7-234 (46.2) Najibullah Zadran, 8-247 (49.4) Rashid Khan,

Bowling O M R W Econ
Chris Woakes 9 0 41 0 4.56
Jofra Archer 10 1 52 3 5.20
Moeen Ali 7 0 35 0 5.00
Mark Wood 10 1 40 2 4.00
Ben Stokes 4 0 12 0 3.00
Adil Rashid 10 0 66 3 6.60



முடிவு – இங்கிலாந்து அணி 150 ஓட்டங்களால் வெற்றி