Home Tamil இளையோர் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை இளையோர் அணி

இளையோர் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை இளையோர் அணி

390

சுற்றுலா இங்கிலாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணிக்கு எதிரான இளையோர் ஒருநாள் தொடரின் நான்காவது போட்டியில் 126 ஓட்டங்களால் அபார வெற்றியினைப் பதிவு செய்திருக்கும் இலங்கை 19 வயதின்கீழ் அணி 5 போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினை இன்னும் ஒரு போட்டி மீதமிருக்க 3-1 எனக் கைப்பற்றியருக்கின்றது.

போராட்டத்தின் பின் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்தின் 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி, இங்கே ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் விளையாடிவருகின்றது.

கொழும்பு SSC மைதானத்தில் நடைபெற்றுவருகின்ற இந்த இளையோர் ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளும் நிறைவடைந்து அதில், இலங்கை 19 வயதின்கீழ் அணி 2-1 என முன்னிலை பெற்ற நிலையில், தொடரின் நான்காவது போட்டி இன்று (08) ஆரம்பமாகியிருந்தது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை 19 அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை, தனது தரப்பிற்காகப் பெற்றார். அதன்படி இலங்கை 50 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 243 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

இலங்கைத் துடுப்பாட்டம் சார்பில், இந்த இளையோர் ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் சதம் விளாசியிருந்த பவன் பதிராஜ இப்போட்டியில் அரைச்சதம் விளாசி 60 ஓட்டங்கள் எடுக்க, மற்றுமொரு அரைச்சதம் பெற்ற ரவீன் டி சில்வா 4 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 59 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். இவர்களோடு ஆரம்பத் துடுப்பாட்டவீரராக களம் வந்த செவோன் டேனியல் 39 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் பென்ஜமின் கிளிப் 43 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, நத்தன் பார்ன்வெல் தனது வேகப் பந்துவீச்சு மூலம் 2 விக்கெட்டுக்களை சுருட்டினார்.

போராட்டத்தின் பின் வெற்றி பெற்ற இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி

பின்னர் போட்டியின் வெற்றி இலக்கான 244 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயதின்கீழ் அணி, இலங்கை வீரர்களின் சுழல் பந்துவீச்சிற்கு முகம் கொடுக்க முடியாமல் 33.3 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 117 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் படுதோல்வியடைந்தது.

இங்கிலாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோர்ஜ் தோமஸ் 40 ஓட்டங்களுடன் தனது தரப்பில் வீரர் ஒருவர் பெற்ற கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, ஏனைய அனைவரும் ஏமாற்றமான முறையில் செயற்பட்டிருந்தனர்.

இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஏற்கனவே துடுப்பாட்டத்திலும் அசத்தியிருந்த ரவீன் டி சில்வா இம்முறை தனது மாய சுழல் மூலம் வெறும் 08 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்ற, மதீஷ பத்திரன 2 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தார். இது தவிர இலங்கை அணியின் வெற்றிக்கு தமது சுழல் பந்துவீச்சு மூலம் சதீஷ ராஜபக்ஷ, வனுஜ சஹான் மற்றும் செவோன் டேனியல் ஆகிய வீரர்களும் தலா ஒரு விக்கெட் வீதம் கைப்பற்றி தமது பங்களிப்பினை வழங்கினர்.

இப்போட்டியின் வெற்றியோடு இங்கிலாந்துக்கு எதிரான இளையோர் ஒருநாள் தொடரினைக் கைப்பற்றியிருக்கும் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி, இதற்கு முன்னர் தாம் பங்களாதேஷிற்கு எதிராக விளையாடியிருந்த இளையோர் ஒருநாள் தொடரினையும் 5-0 என கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்


Result


Sri Lanka U19
243/7 (50)

England U19
117/10 (33.3)

Batsmen R B 4s 6s SR
Chamindu Wickramasinghe c & b 19 13 0 0 146.15
Shevon Daniel b 39 35 0 0 111.43
Sadisha Rajapaksa lbw b 1 12 0 0 8.33
Pawan Pathiraja run out () 60 104 0 0 57.69
Ranuda Somarathne c & b 11 17 0 0 64.71
Raveen De Silva c & b 59 87 0 0 67.82
Dunith Wellalage c & b 15 22 0 0 68.18
Yasiru Rodrigo not out 15 7 0 0 214.29
Wanuja Sahan not out 3 4 0 0 75.00


Extras 21 (b 0 , lb 1 , nb 1, w 19, pen 0)
Total 243/7 (50 Overs, RR: 4.86)
Bowling O M R W Econ
Joshua Boyden 7 0 0 0 0.00
Nathan Barnwell 7 0 0 0 0.00
Tom Prest 10 0 0 0 0.00
Benjamin Cliff 8 0 0 0 0.00
Fateh Singh 7 0 0 0 0.00
Danial Ibrahim 1 0 0 0 0.00
Jacob Bethell 10 0 0 0 0.00


Batsmen R B 4s 6s SR
Jacob Bethell c & b 11 14 2 0 78.57
George Thomas run out () 40 61 5 0 65.57
Tom Prest b 9 16 0 0 56.25
Harry Crawshaw c & b 31 59 0 0 52.54
James Rew b 2 11 0 0 18.18
William Luxton c & b 10 15 0 0 66.67
Danial Ibrahim run out () 2 14 0 0 14.29
Fateh Singh b 0 5 0 0 0.00
Joshua Boyden c & b 0 2 0 0 0.00
Nathan Barnwell not out 1 2 0 0 50.00
Benjamin Cliff c & b 0 4 0 0 0.00


Extras 11 (b 0 , lb 1 , nb 2, w 8, pen 0)
Total 117/10 (33.3 Overs, RR: 3.49)
Fall of Wickets 1-16 (3.5) Jacob Bethell, 2-83 (20.4) George Thomas,

Bowling O M R W Econ
Yasiru Rodrigo 3 0 0 0 0.00
Sadisha Rajapaksa 5 0 0 0 0.00
Chamindu Wickramasinghe 5 0 0 0 0.00
Wanuja Sahan 4 0 0 0 0.00
Ranuda Somarathne 2 0 0 0 0.00
Dunith Wellalage 4 0 0 0 0.00
Shevon Daniel 4 0 0 0 0.00
Ravindu De Silva 3.3 0 0 0 0.00
Matheesha Pathirana 3 0 0 0 0.00



முடிவு – இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 126 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<