இலங்கையிடம் படுதோல்வியடைந்த இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் தற்போது பங்கேற்றுவரும் நிலையில், தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றி வீதம் பதிவு செய்து தொடர் 1-1 என சமநிலை அடைந்தது. தொடர்ந்து இளையோர் ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி இன்று (05) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணியின் தலைவர் டொம் பிரஸ்ட் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை தனது தரப்பிற்காகப் பெற்றார்.
அதன்படி, போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயதின்கீழ் அணி இலங்கையின் இளம் சுழல்பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள முடியாமல் 34.3 ஓவர்களுக்கு 114 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இங்கிலாந்து 19 வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ரெஹான் அஹ்மட் பெற்ற 19 ஓட்டங்களே அதிகூடிய ஓட்டங்களாக பதிவாகியது. மறுமுனையில், இலங்கை 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெலால்கே 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களைச் சாய்க்க, யசிரு ரொட்ரிகோ, ட்ரவின் மெதிவ் மற்றும் ரவீன் டி சில்வா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணியை தடுமாற்றத்திலிருந்து மீட்ட தனன்ஜய, எம்புல்தெனிய
பின்னர் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயதின்கீழ் அணி சிறந்த ஆரம்பத்தினைப் பெற்ற போதும் பின்னர் தடுமாற்றம் காட்டத் தொடங்கியது. ஒரு கட்டத்தில் 96 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்திருந்த இலங்கை 19 வயதின்கீழ் கிரிக்கெட் அணி இறுதியில், போட்டியின் வெற்றி இலக்கினை மேலதிக விக்கெட்டுக்கள் எதனையும் பறிகொடுக்காது 44 ஓவர்களில் 115 ஓட்டங்களைப் பெற்று அடைந்து கொண்டது.
இலங்கை 19 வயதின்கீழ் அணியின் துடுப்பாட்டத்தில் அஞ்சல பண்டார 29 ஓட்டங்கள் பெற்று தனது தரப்பில் கூடுதல் ஓட்டங்களைப் பதிவு செய்ய, அணித்தலைவரான துனித் வெலால்கேவும் 18 ஓட்டங்களுடன் வெற்றிக்கு பங்களிப்பு வழங்கியிருந்தார்.
இங்கிலாந்து 19 வயதின்கீழ் அணியின் பந்துவீச்சு சார்பில் ரெஹான் அஹ்மட் மற்றும் தோமஸ் அஸ்பின்வால் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் கைப்பற்றி இலங்கை வீரர்களுக்கு நெருக்கடி உருவாக்கியிருந்தனர்.
இப்போட்டியின் வெற்றியோடு இலங்கை 19 வயதின்கீழ் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில் 2-1 என முன்னிலை அடைந்திருக்கின்றது.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Jacob Bethell | c Ranuda Somarathne b Yasiru Rodrigo | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Tom Prest | lbw b Treveen Mathews | 13 | 23 | 0 | 0 | 56.52 |
George Bell | lbw b Yasiru Rodrigo | 6 | 8 | 0 | 0 | 75.00 |
Harry Crawshaw | c Anjala Bandara b Treveen Mathews | 9 | 24 | 0 | 0 | 37.50 |
Rehan Ahmed | st Anjala Bandara b Dulith Wellalage | 19 | 37 | 0 | 0 | 51.35 |
James Coles | c Anjala Bandara b Dulith Wellalage | 16 | 24 | 0 | 0 | 66.67 |
Alex Horton | b Wanuja Sahan | 18 | 29 | 0 | 0 | 62.07 |
James Sales | b Raveen De Silva | 13 | 23 | 0 | 0 | 56.52 |
Thomas Aspinwall | b Dulith Wellalage | 4 | 21 | 0 | 0 | 19.05 |
Josh Baker | c Ranuda Somarathne b Raveen De Silva | 6 | 13 | 0 | 0 | 46.15 |
Nathan Barnwell | not out | 4 | 4 | 0 | 0 | 100.00 |
Extras | 6 (b 0 , lb 2 , nb 0, w 4, pen 0) |
Total | 114/10 (34.3 Overs, RR: 3.3) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Yasiru Rodrigo | 6 | 0 | 29 | 2 | 4.83 | |
Wanuja Sahan | 7 | 1 | 22 | 1 | 3.14 | |
Treveen Mathews | 4 | 1 | 10 | 2 | 2.50 | |
Chamindu Wickramasinghe | 4 | 1 | 14 | 0 | 3.50 | |
Dunith Wellalage | 6 | 1 | 13 | 3 | 2.17 | |
Matheesha Pathirana | 1 | 0 | 6 | 0 | 6.00 | |
Raveen De Silva | 6.3 | 1 | 18 | 2 | 2.86 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Chamindu Wickramasinghe | c & b Nathan Barnwell | 4 | 12 | 0 | 0 | 33.33 |
Anjala Bandara | lbw b Rehan Ahmed | 29 | 58 | 0 | 0 | 50.00 |
Raveen De Silva | c George Bell b Tom Prest | 0 | 9 | 0 | 0 | 0.00 |
Shevon Daniel | run out () | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Pawan Pathiraja | run out () | 17 | 47 | 0 | 0 | 36.17 |
Ranuda Somarathne | c Alex Horton b Rehan Ahmed | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Dunith Wellalage | c James Coles b Thomas Aspinwall | 18 | 55 | 0 | 0 | 32.73 |
Wanuja Sahan | b Thomas Aspinwall | 8 | 31 | 0 | 0 | 25.81 |
Yasiru Rodrigo | not out | 12 | 28 | 0 | 0 | 42.86 |
Matheesha Pathirana | not out | 6 | 13 | 0 | 0 | 46.15 |
Extras | 19 (b 1 , lb 9 , nb 3, w 6, pen 0) |
Total | 115/8 (44 Overs, RR: 2.61) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tom Prest | 10 | 5 | 13 | 1 | 1.30 | |
Nathan Barnwell | 6 | 1 | 13 | 1 | 2.17 | |
James Sales | 2 | 0 | 15 | 0 | 7.50 | |
Rehan Ahmed | 10 | 2 | 20 | 2 | 2.00 | |
Josh Baker | 2 | 0 | 12 | 0 | 6.00 | |
James Coles | 10 | 1 | 22 | 0 | 2.20 | |
Thomas Aspinwall | 4 | 1 | 10 | 2 | 2.50 |
முடிவு – இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க