இலங்கை இளையோரினை வீழ்த்திய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி

812

இலங்கை மற்றும் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணிகள் இடையே நிறைவடைந்திருக்கும் இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 25 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.

LPL தொடருக்கான அணித் தலைவர்களும் பயிற்சியாளர்களும்

ஐந்து போட்டிகள் கொண்டதாக இடம்பெறும் இந்த இளையோர் ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று (30) கொழும்பு SSC மைதானத்தில் ஆரம்பமாகியது.

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை இளம் கிரிக்கெட் அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை இங்கிலாந்துக்கு வழங்கினார்.

அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 242 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து தரப்பின் துடுப்பாட்டம் சார்பில் வில்லியம் லக்ஸ்டன் 62 பந்துகளில் 3 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 44 ஓட்டங்களைப் பெற, ஜேம்ஸ் ரேவ் 52 பந்துகளுக்கு 40 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் யூனியன், ராகம கழகங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி

மறுமுனையில் இலங்கை பந்துவீச்சு சார்பில் அணித்தலைவர் துனித் வெலால்கே தனது மாய சுழல் மூலம் வெறும் 30 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களைச் சாய்க்க, ரவீன் டி சில்வா, மதீஸ பத்திரன, ட்ரவின் மெதிவ் மற்றும் மல்ஷ தருபதி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்திருந்தனர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 243 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி போராட்டம் காண்பித்த போதிலும், இலங்கை வீரர்களால் 46.5 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 217 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

தமிழ் யூனியன், ராகம கழகங்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் தலைவர் துனித் வெலால்கே அரைச்சதம் தாண்டியதுடன் 68 பந்துகளில் 6 பௌண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 68 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், ரணுத சோமரட்ன 73 பந்துகளுக்கு 6 பௌண்டரிகள் அடங்கலாக 57 ஓட்டங்களை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் ஜோசுவா பொய்டன், ஜோஸ் பேக்கர் மற்றும் டொம் பிரஸ்ட் ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் சாய்த்து அணியின் வெற்றியினை உறுதி செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் சுருக்கம்

முடிவு – இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 25 ஓட்டங்களால் வெற்றி

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<