சுற்றுலா இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி மற்றும் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி ஆகியவை இடையே நடைபெற்று முடிந்திருக்கும், இளையோர் ஒருநாள் தொடரின் 5ஆவது போட்டியில் இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 48 ஓட்டங்களால் வெற்றியினைப் பதிவு செய்திருக்கின்றது.
இளையோர் ஒருநாள் தொடரை கைப்பற்றிய இலங்கை இளையோர் அணி
இதேநேரம் இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரினை ஏற்கனவே கைப்பற்றிய நிலையில், இங்கிலாந்தின் இளம் கிரிக்கெட் வீரர்கள் இந்த இளையோர் ஒருநாள் தொடரினை, தொடரின் இறுதிப்போட்டியில் கிடைத்த ஆறுதல் வெற்றியுடன் 3-2 என நிறைவு செய்கின்றனர்.
கொழும்பு SSC மைதானத்தில் தொடங்கிய இன்று (10) தொடங்கிய இந்த இளையோர் ஒருநாள் தொடரின் 5ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற, இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் தலைவர் துனித் வெலால்கே முதலில் துடுப்பாடும், இங்கிலாந்து வீரர்களுக்கு வழங்கினார்.
அதன்படி போட்டியில் முதலில் துடுப்பாடிய இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 214 ஓட்டங்களை குவித்துக் கொண்டது.
இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களமிறங்கியிருந்த வில்லியம் லக்ஷ்டன் 4 பெளண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் அடங்கலாக 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
மறுமுனையில், இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு சார்பில் வினுஜ ரன்போல் 45 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களைச் சாய்க்க, சதீஷ ராஜபக்ஷ 2 விக்கெட்டுக்களைச் சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பவல், தோமஸிற்கு பதிலாக இங்கிலாந்து வீரர்களை இணைக்கும் கண்டி வொரியர்ஸ்
பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 215 ஓட்டங்களை 50 ஓவர்களில் அடைய பதிலுக்கு துடுப்பாடிய, இலங்கை 19 வயது கிரிக்கெட் அணி 35.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்து 166 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.
இலங்கை 19 வயது கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டம் சார்பில் அரைச்சதம் தாண்டிய சதீஷ ராஜபக்ஷ 66 ஓட்டங்கள் பெற்றிருக்க, இங்கிலாந்து இளம் அணியின் பந்துவீச்சு சார்பில் டொம் பிரஸ்ட் தனது மாய சுழல் மூலம் 6 விக்கெட்டுக்களைச் சாய்த்து தனது தரப்பின் வெற்றியினை உறுதி செய்திருந்தார்.
போட்டியின் சுருக்கம்
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
George Thomas | lbw b Vinuja Ranpul | 17 | 21 | 0 | 0 | 80.95 |
William Luxton | not out | 84 | 119 | 0 | 0 | 70.59 |
Tom Prest | c Sadeesh Jayawardena b Vinuja Ranpul | 0 | 3 | 0 | 0 | 0.00 |
James Rew | c Wanuja Sahan b Sadisha Rajapaksa | 6 | 23 | 0 | 0 | 26.09 |
George Bell | lbw b Sadisha Rajapaksa | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Rehan Ahmed | c & b Malsha Tharupathi | 14 | 21 | 0 | 0 | 66.67 |
James Coles | c & b Raveen De Silva | 9 | 21 | 0 | 0 | 42.86 |
Alex Horton | c & b Vinuja Ranpul | 36 | 62 | 0 | 0 | 58.06 |
James Sales | c & b Vinuja Ranpul | 8 | 11 | 0 | 0 | 72.73 |
Thomas Aspinwall | not out | 20 | 14 | 0 | 0 | 142.86 |
Benjamin Cliff | not out | 2 | 3 | 0 | 0 | 66.67 |
Extras | 18 (b 2 , lb 2 , nb 0, w 14, pen 0) |
Total | 214/8 (50 Overs, RR: 4.28) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Vinuja Ranpul | 9 | 0 | 45 | 4 | 5.00 | |
Wanuja Sahan | 10 | 0 | 26 | 0 | 2.60 | |
Thaveesha Abhishek | 6 | 1 | 28 | 0 | 4.67 | |
Sadisha Rajapaksa | 6 | 1 | 17 | 2 | 2.83 | |
Malsha Tharupathi | 6 | 0 | 37 | 1 | 6.17 | |
Raveen De Silva | 10 | 0 | 44 | 1 | 4.40 | |
Shevon Daniel | 3 | 0 | 13 | 0 | 4.33 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Abisheak Liyanaarachchi | c Benjamin Cliff b Thomas Aspinwall | 24 | 37 | 0 | 0 | 64.86 |
Shevon Daniel | lbw b Tom Prest | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Sadeesh Jayawardena | c & b Benjamin Cliff | 7 | 10 | 0 | 0 | 70.00 |
Sadisha Rajapaksa | lbw b Thomas Aspinwall | 66 | 77 | 0 | 0 | 85.71 |
Sakuna Nidarshana Liyanage | c James Sales b Tom Prest | 20 | 24 | 0 | 0 | 83.33 |
Ranuda Somarathne | c & b James Coles | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Raveen De Silva | b Tom Prest | 13 | 22 | 0 | 0 | 59.09 |
Vinuja Ranpul | lbw b Tom Prest | 1 | 4 | 0 | 0 | 25.00 |
Lahiru Abeysinghe | b Tom Prest | 9 | 21 | 0 | 0 | 42.86 |
Wanuja Sahan | b Tom Prest | 1 | 6 | 0 | 0 | 16.67 |
Malsha Tharupathi | not out | 3 | 6 | 0 | 0 | 50.00 |
Extras | 21 (b 0 , lb 4 , nb 3, w 14, pen 0) |
Total | 166/10 (35.1 Overs, RR: 4.72) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Tom Prest | 10 | 0 | 41 | 6 | 4.10 | |
Benjamin Cliff | 7 | 0 | 29 | 1 | 4.14 | |
James Coles | 6 | 0 | 27 | 1 | 4.50 | |
Thomas Aspinwall | 5.1 | 0 | 22 | 2 | 4.31 | |
Rehan Ahmed | 5 | 0 | 26 | 0 | 5.20 | |
James Sales | 2 | 0 | 17 | 0 | 8.50 |
முடிவு – இங்கிலாந்து 19 வயது கிரிக்கெட் அணி 48 ஓட்டங்களால் வெற்றி
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<