காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றுவரும், இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், இங்கிலாந்து அணி, ஜோ ரூட்டின் அபார சதத்தின் உதவியுடன் பலம் பெற்றுள்ளது.
ஐசிசி டெஸ்ட் சம்பியன்ஷிப்புக்கான இந்தப்போட்டியில், முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இலங்கை அணி, 135 ஓட்டங்களுக்கு சகலவிக்கெட்டுகளையும் இழந்திருந்தநிலையில், இங்கிலாந்து அணி, இரண்டாவது நாள் ஆட்டநேர நிறைவில், 4 விக்கெட்டுகளை இழந்து 320 ஓட்டங்களை பெற்றுள்ளது.
>> முதல்நாளில் பலம் பெற்றிருக்கும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி
இலங்கை குழாம் – லஹிரு திரிமான்ன, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், தினேஷ் சந்திமால் (அணித்தலைவர்), அஞ்செலோ மெதிவ்ஸ், நிரோஷன் டிக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்து ஹஸரங்க, டில்ருவான் பெரேரா, லசித் எம்புல்தெனிய, அசித்த பெர்னாந்து
இங்கிலாந்து குழாம் – ஷேக் கிராவ்லி, டோம் சிப்லி, ஜொன்னி பெயர்ஸ்டோவ், ஜோ ரூட், டேன் லோரன்ஸ், ஜோஸ் பட்லர், சேம் கர்ரன், டோம் பெஸ், ஸ்டுவார்ட் புரோட், மார்க் வூட், ஜேக் லீச்
நேற்றைய ஆட்டநேரமுடிவில் இங்கிலாந்து அணி 127 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்படி, இன்றைய தினம் ஜொனி பெயார்ஸ்டோவ் 47 ஓட்டங்களுடனும், ஜோ ரூட் 66 ஓட்டங்களுடனும் ஆட்டத்தை ஆரம்பித்தனர். போட்டியானது மழைக்காரணமாக சற்று தாமதமாக ஆரம்பித்திருந்தது.
நேற்றைய தினம் அரைச்சதத்தை நெருங்கியிருந்த ஜொனி பெயார்ஸ்டோவ், இன்றையதினம் ஓட்டங்களின்றிய நிலையில், லசித் எம்புல்தெனியவின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இருப்பினும், இன்றைய தினம் டெஸ்ட் அறிமுகத்தை பெற்று முதன்முறையாக துடுப்பெடுத்தாட களமிறங்கிய டென் லோவ்ரன்ஸ் சிறப்பாக துடுப்பெடுத்தாடினார்.
இவர்கள் இருவரும் விக்கெட்டுகளை விட்டுக்கொடுக்கமால் துடுப்பெடுத்தாடிய நிலையில், மதியபோசன இடைவேளையின் போது, இங்கிலாந்து அணி 206 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. ஜோ ரூட் 99 ஓட்டங்களுடன் களத்தில் நிற்க, லோவ்ரன்ஸ் 40 ஓட்டங்களை பெற்றிருந்தார்.
பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணிசார்பில் ஜோ ரூட் தன்னுடைய டெஸ்ட் சதத்தை பதிவுசெய்ய, லோவ்ரன்ஸ் கன்னி டெஸ்ட் அரைச்சதத்தை பதிவுசெய்தார். தொடர்ந்தும் இவர்கள் சிறப்பாக ஆடி, ஓட்டங்களை குவித்தனர். இதில் துரதிஷ்டவசமாக 73 ஓட்டங்களை பெற்றிருந்த டென் லோவ்ரன்ஸ் ஆட்டமிழக்க, ரூட் 150 ஓட்டங்களை கடந்தார். தொடர்ந்து, இங்கிலாந்து அணி தேநீர் இடைவேளையின் போது 320 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதில், இங்கிலாந்து அணிசார்பாக ஜோ ரூட் 168 ஓட்டங்களை பெற்றுக்கொண்டதுடன், ஜோஸ் பட்லர் 7 ஓட்டங்களை பெற்றிருந்தார். தேநீர் இடைவேளையின் பின்னர் போட்டி ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், துரதிஷ்டவசமாக சீரற்ற காலநிலை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டது.
இன்றைய ஆட்டநேர நிறைவில் பலமான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி, இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸை விட, 185 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Result
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Lahiru Thirimanne | c Jonathan Bairstow b Stuart Broad | 4 | 22 | 0 | 0 | 18.18 |
Kusal Perera | c Joe Root b Dominic Bess | 20 | 28 | 2 | 0 | 71.43 |
Kusal Mendis | c Jos Buttler b Stuart Broad | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c Joe Root b Stuart Broad | 27 | 54 | 1 | 1 | 50.00 |
Dinesh Chandimal | c Sam Curran b Jack Leach | 28 | 71 | 1 | 0 | 39.44 |
Niroshan Dickwella | c Dominic Sibley b Dominic Bess | 12 | 21 | 1 | 0 | 57.14 |
Dasun Shanaka | c Jos Buttler b Dominic Bess | 23 | 48 | 3 | 0 | 47.92 |
Wanindu Hasaranga | b Dominic Bess | 19 | 22 | 2 | 0 | 86.36 |
Dilruwan Perera | b Dominic Bess | 0 | 2 | 0 | 0 | 0.00 |
Lasith Embuldeniya | run out (Jack Leach) | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Asitha Fernando | not out | 0 | 7 | 0 | 0 | 0.00 |
Extras | 2 (b 0 , lb 1 , nb 1, w 0, pen 0) |
Total | 135/10 (46.1 Overs, RR: 2.92) |
Fall of Wickets | 1-16 (6.3) Lahiru Thirimanne, 2-16 (6.5) Kusal Mendis, 3-25 (10.2) Kusal Perera, 4-81 (28.6) Angelo Mathews, 5-81 (29.2) Dinesh Chandimal, 6-105 (38.1) Niroshan Dickwella, 7-126 (42.5) Dasun Shanaka, 8-126 (42.5) Dilruwan Perera, 9-130 (43.5) Lasith Embuldeniya, 10-135 (46.1) Wanindu Hasaranga, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Stuart Broad | 9 | 3 | 20 | 3 | 2.22 | |
Sam Curran | 4 | 2 | 8 | 0 | 2.00 | |
Mark Wood | 6 | 1 | 21 | 0 | 3.50 | |
Dominic Bess | 10.1 | 3 | 30 | 5 | 2.97 | |
Jack Leach | 17 | 2 | 55 | 1 | 3.24 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | c Wanindu Hasaranga b Lasith Embuldeniya | 9 | 26 | 1 | 0 | 34.62 |
Dominic Sibley | c Lahiru Thirimanne b Lasith Embuldeniya | 4 | 15 | 0 | 0 | 26.67 |
Jonathan Bairstow | c Kusal Mendis b Lasith Embuldeniya | 47 | 93 | 2 | 0 | 50.54 |
Joe Root | c Lasith Embuldeniya b Dilruwan Perera | 228 | 321 | 18 | 1 | 71.03 |
Dan Lawrence | c Kusal Mendis b Dilruwan Perera | 73 | 150 | 6 | 1 | 48.67 |
Jos Buttler | c Niroshan Dickwella b Asitha Fernando | 30 | 57 | 3 | 0 | 52.63 |
Sam Curran | b Asitha Fernando | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Dominic Bess | run out (Minod Bhanuka) | 0 | 4 | 0 | 0 | 0.00 |
Jack Leach | lbw b Dilruwan Perera | 4 | 20 | 1 | 0 | 20.00 |
Mark Wood | c Niroshan Dickwella b Dilruwan Perera | 2 | 9 | 0 | 0 | 22.22 |
Stuart Broad | not out | 11 | 13 | 2 | 0 | 84.62 |
Extras | 13 (b 7 , lb 0 , nb 6, w 0, pen 0) |
Total | 421/10 (117.1 Overs, RR: 3.59) |
Fall of Wickets | 1-10 (4.2) Dominic Sibley, 2-17 (8.4) Zak Crawley, 3-131 (42.2) Jonathan Bairstow, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 45 | 4 | 176 | 3 | 3.91 | |
Asitha Fernando | 14 | 1 | 44 | 2 | 3.14 | |
Wanindu Hasaranga | 15 | 1 | 63 | 0 | 4.20 | |
Dilruwan Perera | 36.1 | 2 | 109 | 4 | 3.02 | |
Dasun Shanaka | 7 | 1 | 22 | 0 | 3.14 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Kusal Perera | c Jack Leach b Sam Curran | 62 | 109 | 5 | 1 | 56.88 |
Lahiru Thirimanne | c Jos Buttler b Sam Curran | 111 | 251 | 12 | 0 | 44.22 |
Kusal Mendis | c Jos Buttler b Jack Leach | 15 | 65 | 1 | 0 | 23.08 |
Lasith Embuldeniya | c Dominic Sibley b Dominic Bess | 0 | 11 | 0 | 0 | 0.00 |
Angelo Mathews | c & b Jack Leach | 71 | 219 | 4 | 0 | 32.42 |
Dinesh Chandimal | c Joe Root b Dominic Bess | 20 | 28 | 3 | 0 | 71.43 |
Niroshan Dickwella | c Jos Buttler b Dominic Bess | 29 | 74 | 1 | 0 | 39.19 |
Dasun Shanaka | b Jack Leach | 4 | 5 | 0 | 0 | 80.00 |
Wanindu Hasaranga | c Joe Root b Jack Leach | 12 | 18 | 2 | 0 | 66.67 |
Dilruwan Perera | st Jos Buttler b Jack Leach | 24 | 38 | 5 | 0 | 63.16 |
Asitha Fernando | not out | 0 | 6 | 0 | 0 | 0.00 |
Extras | 11 (b 7 , lb 1 , nb 3, w 0, pen 0) |
Total | 359/10 (136.5 Overs, RR: 2.62) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Stuart Broad | 17 | 11 | 14 | 0 | 0.82 | |
Sam Curran | 11 | 1 | 37 | 2 | 3.36 | |
Dominic Bess | 33 | 4 | 100 | 3 | 3.03 | |
Mark Wood | 21 | 5 | 49 | 0 | 2.33 | |
Jack Leach | 41.5 | 6 | 122 | 5 | 2.94 | |
Joe Root | 11 | 1 | 19 | 0 | 1.73 | |
Dan Lawrence | 2 | 0 | 10 | 0 | 5.00 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | c Kusal Mendis b Lasith Embuldeniya | 8 | 21 | 1 | 0 | 38.10 |
Dominic Sibley | b Lasith Embuldeniya | 2 | 5 | 0 | 0 | 40.00 |
Jonathan Bairstow | not out | 35 | 62 | 2 | 0 | 56.45 |
Joe Root | run out (Niroshan Dickwella) | 1 | 3 | 0 | 0 | 33.33 |
Dan Lawrence | not out | 21 | 52 | 0 | 0 | 40.38 |
Extras | 9 (b 0 , lb 9 , nb 0, w 0, pen 0) |
Total | 76/3 (24.2 Overs, RR: 3.12) |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Lasith Embuldeniya | 12 | 3 | 29 | 2 | 2.42 | |
Dilruwan Perera | 11.2 | 2 | 34 | 0 | 3.04 | |
Wanindu Hasaranga | 1 | 0 | 4 | 0 | 4.00 |
>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க <<