சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்குமிடையில் நடைபெற்றுவந்த 4 நாட்கள் கொண்ட பயிற்சிப்போட்டியானது, இலங்கையில் உணரப்பட்ட கொரோனா வைரஸ் தாக்கத்தினால் இரண்டாவது நாளிலேயே நிறைவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
354 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் இன்றைய (13) இரண்டாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்த இங்கிலாந்து அணி வழமை போன்று ஓட்டங்களை குவிக்க தொடங்கியது. இந்நிலையில் சதம் விளாசிய அணித்தலைவர் ஜோ ரூட் 9 பௌண்டரிகளுடன் 102 ஓட்டங்களை குவித்து பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார்.
ஸக் க்ரௌலியின் சதத்துடன் முதல் நாளில் வலுவான நிலையில் இங்கிலாந்து அணி
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர்…
அதனை தொடர்ந்து மறுமுனையில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிவந்த ஒல்லி போப் 5 ஓட்டங்களினால் சதத்தை தவறவிட்டார். ஒல்லி போப் 8 பௌண்டரிகளுடன் 95 ஓட்டங்களை குவித்து பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார். தொடர்ந்து ஆடுகளம் நுழைந்த சாம் கரண் 9 ஓட்டத்துடன் மொஹமட் ஷிராஸின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார்.
இரண்டாம் நாளுக்கான மதிய உணவு இடைவேளையின் போது இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 404 ஓட்டங்களை குவித்திருந்தது. பின்னர் தொடர்ந்தும் போட்டி ஆரம்பமானது. முதல் பந்திலேயே விக்கெட் காப்பாளர் ஜொஸ் பட்லர் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் போல்ட் முறையில் வெளியேறினார்.
தொடர்ந்து டொம் பெஸ் 11 ஓட்டங்களுடன் அசித்த பெர்ணான்டேவின் பந்துவீச்சிலும், கிறிஸ் வோக்ஸ் 12 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சிலும், இறுதியாக மெட் பார்கின்ஸன் 22 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சிலும் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 463 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது.
இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியின் பந்துவீச்சில் சுழல் பந்துவீச்சாளர் பிரபாத் ஜயசூரிய 37.4 ஓவர்களில் 164 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும், மொஹமட் ஷிராஸ் 68 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்ணான்டோ மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
463 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை ஆட ஆரம்பித்த இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கு முதல் பந்திலேயை அதிர்ச்சி கிடைத்தது. பெத்தும் நிஸ்ஸங்க ஓட்டமின்றி கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் LBW முறையில் ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்து வந்த சதீர சமரவிக்ரம 4 ஓட்டங்களுடன் கிறிஸ் வோக்ஸின் பந்துவீச்சில் அவரிடமே பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
முதல் இரண்டு விக்கெட்டுக்களை விரைவாக இழந்து தடுமாறிய இலங்கை அணிக்கு மூன்றாவது விக்கெட் இணைப்பாட்டம் சற்று ஆறுதல் அளித்து. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன மற்றும் அஞ்செலோ பெரேரா ஆகியோர் இணைப்பாட்டமாக 83 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிலையில் அஞ்செலோ பெரேரா 38 ஓட்டங்களுடன் மெட் பார்கின்ஸனின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்தார்.
தேநீர் இடைவேளைக்காக ஆட்டம் இடைநிறுத்தப்படுகின்ற வேளையில் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 120 ஓட்டங்களை பெற்றிருந்தது. ஆட்டம் தொடர்ந்தும் ஆரம்பித்தது. அணித்தலைவர் லஹிரு திரிமான்ன மற்றும் ரொஷேன் சில்வா ஆகியோர் இணைப்பாட்டமாக 55 ஓட்டங்களை குவித்திருந்த நிலையில் போட்டி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. இதன் போது இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 150 ஓட்டங்களை குவித்திருந்தது.
ஆடுகளத்தில் அணித்தலைவர் லஹிரு திரிமான்ன 12 பௌண்டரிகளுடன் 88 ஓட்டங்களுடனும், ரொஷேன் சில்வா 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர். இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் கிறிஸ் வோக்ஸ் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், மெட் பார்கின்ஸன் 19 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
கொரோனா பீதி: ஆசிய பதினொருவர் – உலக பதினொருவர் போட்டி ஒத்திவைப்பு!
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பங்களாதேஷில் நடைபெறவிருந்த ஆசிய…
முழு உலகையும் அச்சுறுத்தி பல உயிர்களை காவு கொண்டுள்ள கொரோனா எனப்படும் வைரஸினுடைய தாக்கம் நேற்றைய தினம் இலங்கையில் உணரப்பட்டதை தொடர்ந்து குறித்த பயிற்சிப் போட்டியை கைவிட இரு அணிகளும் இணங்கிக்கொண்டதற்கமைய போட்டி சமநிலையில் கைவிடப்பட்டது.
அத்துடன் குறித்த வைரஸின் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவிருந்த உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளதுடன் இங்கிலாந்து கிரிக்கெட் அணியினர் உடனடியாக பாதுகாப்பாக தங்களது சொந்த நாட்டிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
ஸ்கோர் விபரம்
Stumps
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | b Mohamed Shiraz | 105 | 145 | 11 | 0 | 72.41 |
Dominic Sibley | c Sadeera Samarawickrama b Ramesh Mendis | 37 | 92 | 5 | 0 | 40.22 |
Joe Denly | c Minod Bhanuka b Prabath Jayasuriya | 26 | 61 | 2 | 1 | 42.62 |
Joe Root | lbw b Prabath Jayasuriya | 102 | 139 | 9 | 0 | 73.38 |
Ollie Pope | b Prabath Jayasuriya | 95 | 134 | 8 | 0 | 70.90 |
Jos Buttler | b Prabath Jayasuriya | 14 | 29 | 1 | 0 | 48.28 |
Sam Curran | c Prabath Jayasuriya b Mohamed Shiraz | 9 | 13 | 1 | 0 | 69.23 |
Chris Woakes | c Shehan Jayasuriya b Prabath Jayasuriya | 12 | 15 | 1 | 1 | 80.00 |
Dominic Bess | b Asitha Fernando | 11 | 14 | 2 | 0 | 78.57 |
Jack Leach | not out | 14 | 28 | 1 | 1 | 50.00 |
Matthew Parkinson | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 22 | 36 | 3 | 0 | 61.11 |
Extras | 16 (b 4 , lb 11 , nb 0, w 1, pen 0) |
Total | 463/10 (117.4 Overs, RR: 3.93) |
Fall of Wickets | 1-103 (25.6) Dominic Sibley, 2-175 (49.3) Joe Denly, 3-179 (50.1) Zak Crawley, 4-369 (93.4) Joe Root, 5-388 (97.4) Ollie Pope, 6-399 (100.5) Sam Curran, 7-404 (103.1) Jos Buttler, 8-421 (106.2) Dominic Bess, 9-429 (107.4) Chris Woakes, 10-463 (117.4) Matthew Parkinson, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 2 | 63 | 1 | 3.15 | |
Mohamed Shiraz | 18 | 0 | 68 | 2 | 3.78 | |
Prabath Jayasuriya | 37.4 | 3 | 164 | 6 | 4.39 | |
Ramesh Mendis | 31 | 0 | 106 | 1 | 3.42 | |
Shehan Jayasuriya | 9 | 0 | 36 | 0 | 4.00 | |
Angelo Perera | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Chris Woakes | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Lahiru Thirimanne | not out | 88 | 115 | 12 | 0 | 76.52 |
Sadeera Samarawickrama | c & b Chris Woakes | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Angelo Perera | b Matthew Parkinson | 38 | 53 | 7 | 0 | 71.70 |
Roshen Silva | not out | 11 | 58 | 1 | 0 | 18.97 |
Extras | 9 (b 4 , lb 4 , nb 1, w 0, pen 0) |
Total | 150/3 (40 Overs, RR: 3.75) |
Fall of Wickets | 1-0 (0.1) Pathum Nissanka, 2-12 (4.5) Sadeera Samarawickrama, 3-95 (23.1) Angelo Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 6 | 1 | 11 | 2 | 1.83 | |
Sam Curran | 6 | 0 | 36 | 0 | 6.00 | |
Jack Leach | 12 | 1 | 44 | 0 | 3.67 | |
Dominic Bess | 9 | 1 | 32 | 0 | 3.56 | |
Matthew Parkinson | 7 | 2 | 19 | 1 | 2.71 |
>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<