சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணிக்கும் இடையிலான இரண்டாவது (4 நாட்கள்) பயிற்சிப்போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 354 ஓட்டங்களை குவித்து வலுவான நிலையில் காணப்படுகின்றது.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி குறித்த டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இரண்டு பயிற்சிப்போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி கடந்த திங்கட்கிழமை (09) நிறைவுக்குவந்த முதலாவது பயிற்சிப்போட்டியானது சமநிலையில் நிறைவுற்ற நிலையில், குறித்த இரண்டாவது பயிற்சிப்போட்டியானது இன்று (12) கொழும்பு பி. சாரா ஓவல் மைதானத்தில் ஆரம்பமாகியது.
இலங்கை கிரிக்கெட் பதினொருவர் – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான பயிற்சிப்போட்டி சமநிலையில் நிறைவு
சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும் இலங்கை கிரிக்கெட் பதினொருவர் அணிக்கும் …
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை பெற்றுக்கொண்டது. லஹிரு திரிமான்ன தலைமையிலான இலங்கை கிரிக்கெட் சபை தலைவர் பதினொருவர் அணியில் பெதும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, அஞ்செலோ பெரேரா, ஷெஹான் ஜெயசூரிய, ரொஷேன் சில்வா, மினோத் பானுக்க, அசித்த பெர்ணான்டோ, பிரபாத் ஜயசூரிய, ரமேஷ் மெண்டிஸ் மற்றும் மொஹமட் ஷிராஸ் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
ஜோ ரூட் தலைமையிலான இங்கிலாந்து அணியில் ஸக் க்ரௌலி, டொம் சிப்லேய், ஜோ டென்லி, ஒல்லி போப், ஜொஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், சாம் கரண், கிறிஸ் வோக்ஸ், டொம் பெஸ் மற்றும் ஜெக் லீச் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். நாணய சுழற்சியின் பிரகாரம் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு சிறப்பான ஆரம்பம் கிடைத்தது.
Photos: Sri Lanka vs England – Warm-Up Match 2 – Day 1
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஸக் க்ரௌலி மற்றும் டொம் சிப்லேய் ஆகியோர் நிதானமாக துடுப்பெடுத்தாடி முதல் விக்கெட் இணைப்பாட்டமாக சதம் கடந்தனர். இந்நிலையில் டொம் சிப்லேய் 37 ஓட்டங்களுடன் ரமேஸ் மெண்டிசின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் இரண்டாவது விக்கெட்டுக்காக ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸக் க்ரௌலியுடன் இணைந்த ஜோ டென்லி இணைப்பாட்டமாக 72 ஓட்டங்களை பகிர்ந்த வேளையில் அவர் 26 ஓட்டங்களுடன் பிரபாத் ஜயசூரியவின் பந்துவீச்சில் பிடியெடுப்பு முறையில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது பயிற்சிப் போட்டிக்கான SLC தலைவர் பதினொருவர் குழாமில் சிராஸ்
இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக விளையாடவுள்ள உத்தியோகபூர்வ 4 நாட்கள் …
ஜோ டென்லியின் ஆட்டமிழப்பை தொடர்ந்து அடுத்த ஓவரின் முதல் பந்துவீச்சில் போட்டியில் சதம் கடந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஸக் க்ரௌலி 11 பௌண்டரிகள் அடங்கலாக 105 ஓட்டங்களை குவித்து மொஹமட் ஷிராஸின் பந்துவீச்சில் போல்ட் முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து அணித்தலைவர் ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் ஆகியோருக்கிடையில் நான்காவது விக்கெட்டுக்காக சிறப்பான இணைப்பாட்டம் பகிரப்பட்டது.
ஜோ ரூட் மற்றும் ஒல்லி போப் ஆகியோர் அரைச்சதம் கடக்க இருவருக்கும் இடையிலான இணைப்பாட்டமானது இன்றைய முதல் நாள் ஆட்ட நேர முடிவில் முறியடிக்கப்படாமல் 175 ஓட்டங்களாக காணப்படுவதுடன், இறுதியில் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 354 ஓட்டங்களை குவித்துள்ளது. ஆடுகளத்தில் அணித்தலைவர் ஜோ ரூட் 90 ஓட்டங்களுடனும், ஒல்லி போப் 84 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது காணப்படுகின்றனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் மொஹமட் ஷிராஸ், ரமேஷ் மெண்டிஸ் மற்றும் பிரபாத் ஜயசூரிய ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை வீழ்த்தினர். போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை (13) தொடரும்.
ஸ்கோர் விபரம்
Stumps
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Zak Crawley | b Mohamed Shiraz | 105 | 145 | 11 | 0 | 72.41 |
Dominic Sibley | c Sadeera Samarawickrama b Ramesh Mendis | 37 | 92 | 5 | 0 | 40.22 |
Joe Denly | c Minod Bhanuka b Prabath Jayasuriya | 26 | 61 | 2 | 1 | 42.62 |
Joe Root | lbw b Prabath Jayasuriya | 102 | 139 | 9 | 0 | 73.38 |
Ollie Pope | b Prabath Jayasuriya | 95 | 134 | 8 | 0 | 70.90 |
Jos Buttler | b Prabath Jayasuriya | 14 | 29 | 1 | 0 | 48.28 |
Sam Curran | c Prabath Jayasuriya b Mohamed Shiraz | 9 | 13 | 1 | 0 | 69.23 |
Chris Woakes | c Shehan Jayasuriya b Prabath Jayasuriya | 12 | 15 | 1 | 1 | 80.00 |
Dominic Bess | b Asitha Fernando | 11 | 14 | 2 | 0 | 78.57 |
Jack Leach | not out | 14 | 28 | 1 | 1 | 50.00 |
Matthew Parkinson | c Sadeera Samarawickrama b Prabath Jayasuriya | 22 | 36 | 3 | 0 | 61.11 |
Extras | 16 (b 4 , lb 11 , nb 0, w 1, pen 0) |
Total | 463/10 (117.4 Overs, RR: 3.93) |
Fall of Wickets | 1-103 (25.6) Dominic Sibley, 2-175 (49.3) Joe Denly, 3-179 (50.1) Zak Crawley, 4-369 (93.4) Joe Root, 5-388 (97.4) Ollie Pope, 6-399 (100.5) Sam Curran, 7-404 (103.1) Jos Buttler, 8-421 (106.2) Dominic Bess, 9-429 (107.4) Chris Woakes, 10-463 (117.4) Matthew Parkinson, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Asitha Fernando | 20 | 2 | 63 | 1 | 3.15 | |
Mohamed Shiraz | 18 | 0 | 68 | 2 | 3.78 | |
Prabath Jayasuriya | 37.4 | 3 | 164 | 6 | 4.39 | |
Ramesh Mendis | 31 | 0 | 106 | 1 | 3.42 | |
Shehan Jayasuriya | 9 | 0 | 36 | 0 | 4.00 | |
Angelo Perera | 2 | 0 | 11 | 0 | 5.50 |
Batsmen | R | B | 4s | 6s | SR | |
---|---|---|---|---|---|---|
Pathum Nissanka | lbw b Chris Woakes | 0 | 1 | 0 | 0 | 0.00 |
Lahiru Thirimanne | not out | 88 | 115 | 12 | 0 | 76.52 |
Sadeera Samarawickrama | c & b Chris Woakes | 4 | 14 | 0 | 0 | 28.57 |
Angelo Perera | b Matthew Parkinson | 38 | 53 | 7 | 0 | 71.70 |
Roshen Silva | not out | 11 | 58 | 1 | 0 | 18.97 |
Extras | 9 (b 4 , lb 4 , nb 1, w 0, pen 0) |
Total | 150/3 (40 Overs, RR: 3.75) |
Fall of Wickets | 1-0 (0.1) Pathum Nissanka, 2-12 (4.5) Sadeera Samarawickrama, 3-95 (23.1) Angelo Perera, |
Bowling | O | M | R | W | Econ | |
---|---|---|---|---|---|---|
Chris Woakes | 6 | 1 | 11 | 2 | 1.83 | |
Sam Curran | 6 | 0 | 36 | 0 | 6.00 | |
Jack Leach | 12 | 1 | 44 | 0 | 3.67 | |
Dominic Bess | 9 | 1 | 32 | 0 | 3.56 | |
Matthew Parkinson | 7 | 2 | 19 | 1 | 2.71 |
மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க…